நீண்டகால அதிகாரப் பத்திரம் (LPA) என்றால் என்ன?

முதுமைக்கால மறதி நோய் முற்றும்போது, இந்த நோய் நிலையில் உள்ளவர்களுக்குத் தீர்மானிப்புத் திறனிலும் பிரச்சினையைத் தீர்ப்பதிலும் அதிகரித்த சிரமத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களால் நிதி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முடிவுகளை எடுக்க முடியாமல் போகலாம், மேலும் அவர்களைச் சுற்றியுள்ள மக்கள் இந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு அதிக ஆதரவை வழங்க வேண்டும். இந்த முடிவெடுக்கும் திறனிழப்பு என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு ஒரு பொதுவான அனுபவமாகும், மேலும் இது மனநல ஆற்றல் இழப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
என் அன்புக்குரியவரை அவரது மருத்துவ நிலையை ஏற்றுக்கொள்ள ஊக்குவித்தல்

ஒரு டிமென்ஷியா நோயறிதலை ஏற்றுக்கொள்வது கடினம். மறுப்புக்கான காரணங்களைப் புரிந்துகொள்வது உங்கள் அன்புக்குரியவரை அவர்களின் நிலையை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கும்.
இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் என்றால் என்ன?

இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் என்பது 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் ஏதேனும் வகை முதுமைக்கால மறதி நோயைக் குறிக்கிறது. முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் ஆனது வயது முதிர்ந்த பெரியவர்களிடத்து காணப்படும் முதுமைக்கால மறதி நோயுடன் ஒப்பிடும்போது, இளம் வயதினர்களிடம் வித்தியாசமாகத் தோன்றலாம்.
முதுமைக்கால மறதி நோய்க்கான மருந்துகளை நிர்வகிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் பெரும்பாலான நபர்களால் தங்களது நோய்நிலையின் ஆரம்பக் கட்டங்களில் தங்கள் மருந்துகளை சொந்தமாக நிர்வகித்துக் கொள்ள முடியும், ஆனால் அவர்களின் முதுமைக்கால மறதி நோய் முற்றுகையில் மருந்துகளை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். மருந்துகளின் தவறான கலவை, மருந்தளவை உட்கொள்வது அல்லது சரியான நேரத்தில் மருந்தை உட்கொள்ள மறப்பது அவர்களை கடுமையான ஆபத்தில் ஆழ்த்தலாம். எனவே, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் பயனுள்ள மருந்து நிர்வாகத்துக்கான அடிப்படைத் திறன்களைக் கொண்டிருப்பது முக்கியம்.
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த அக்கம்பக்கங்கள்

இந்தக் கட்டுரை சிங்கப்பூரில் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள சில அக்கம்பக்கங்களின் உதாரணங்களைப் பட்டியலிடுகிறது. இந்த எடுத்துக்காட்டுகள், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு வழி கண்டறிய உதவிடவும், அவர்களின் நல்வாழ்வை ஆதரிக்கவும், பௌதீக மற்றும் சமூகச் சூழல்கள் உட்பட சுற்றுப்புறத்தின் பல்வேறு அம்சங்களின் தழுவலை எடுத்துரைக்கின்றன.
சுற்றித் திரியும் நடத்தையைச் சமாளிக்கும் விதம்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் பல நபர்கள் நடக்க வேண்டுமென்ற உந்துதலுடன் இருப்பார்கள், சில சந்தர்ப்பங்களில் தங்களின் வீட்டை விட்டும் வெளியேறிவிடுவார்கள். இது சில சமயங்களில் “சுற்றித் திரிதல்” என்று அழைக்கப்பட்டாலும், இது அரிதாகவே இலக்குடையதாக இருக்கும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு தாம் எங்கே செல்ல வெளியே வந்தோம் என்பதோ, என்ன செய்ய நினைத்திருந்தோம் என்பதோ நினைவிருக்காது.
உணவு நேர நடத்தைகள்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் சில நேரங்களில் சாப்பிட மறுக்கக்கூடும். அவர்கள் சாப்பிடும் நேரங்களில் கோபமமோ, கிளர்ச்சியோ அடையலாம் அல்லது அவர்களுக்குச் சாப்பிடுவது சவாலாக இருக்கலாம். இது பல்வேறு காரணங்களால் நிகழலாம்:
மனக்கிளர்ச்சி மற்றும் ஆக்ரோஷமான நடத்தையை நிர்வகித்தல்

சில சமயங்களில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளலாம், திடீர் உணர்வு வெளிப்பாடுகளைக் காட்டலாம் அல்லது அவர்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் கோபமாக நடந்து கொள்ளலாம்.
அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் நோய்நிலை அதிகரிக்கையில், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை (ADLகள்) செய்யும் அவர்களின் திறன்களும் மோசமடைகின்றன. ADLகள் என்பன பெரும்பாலான நபர்கள் சிறு வயதிலிருந்தே செய்யக் கற்றுக்கொண்ட மற்றும் எந்த உதவியும் இல்லாமல் அன்றாடம் செய்யக்கூடிய வழக்கமான நடவடிக்கைகளைக் குறிக்கின்றன.1 இருப்பினும், முதுமைக்கால மறதி நோய் காரணமாக, தனிநபர்களால் படிப்படியாக இந்த தினசரி வழக்கங்களைச் செய்ய முடியாமல் போகும்.