எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
X

செவிப்புலன் இழப்பு என்பது முதுமைக்கால மறதி நோயின் மாற்றக்கக்கூடிய ஆபத்து காரணியாக உள்ளது. இந்தக் கட்டுரை இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி ஆராய்ந்து, செவிப்புலன் இழப்பு பற்றிய ஆழமான புரிதலையும், அதன் அடையாளங்களையும் அறிகுறிகளையும், செவிப்புலன் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும்போது அதனைத் தடுக்க என்ன செய்யலாம் மற்றும் அதற்கு எப்படி சிகிச்சையளிக்கலாம் என்பதைப் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.

தொடக்கவுரை

2050-ஆம் ஆண்டு வாக்கில், கிட்டத்தட்ட 2.5 பில்லியன் மக்கள் ஏதோ ஒரு வகையான செவிப்புலன் இழப்பால் (காது கேளாமையால்) பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.1 லான்செட் ஆய்வின்படி (2020), செவிப்புலன் இழப்பு முதுமைக்கால மறதி நோயினுடைய ஆபத்து காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.2 லான்செட் ஆய்வானது (2024), உலகளவில் முதுமைக்கால மறதி நோய் தொடர்பான பாதிப்புகளில் சுமார் 7% செவிப்புலன் இழப்பினால் ஏற்பட்டதாக மதிப்பிட்டுள்ளது.3 மூத்த குடிமக்களிடையே இது மிகவும் பரவலாக இருந்தாலும், செவிப்புலன் இழப்பு பொதுவாக கண்டறியப்படுவதில்லை அல்லது நன்கு கண்டறியப்படுவதில்லை, இது முதுமைக்கால மறதி நோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

செவிப்புலன் இழப்பு மற்றும் முதுமைக்கால மறதி நோய்க்கு இடையில் உள்ள தொடர்பு என்ன?

முதுமைக்கால மறதி நோய்க்கான சாத்தியமான ஆபத்து காரணியாக செவிப்புலன் இழப்பு சமீபத்திய ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.  செவிப்புலன் இழப்பானது மக்கள்தொகை சார்ந்த விளைவுப் பங்கை (PAF) அதிகமாகக் கொண்டிருப்பதாக 2017 லான்செட் அறிக்கை கண்டறிந்துள்ளது – ஒரு குறிப்பிட்ட ஆபத்து காரணியை அகற்றினால், அது நோய் பாதிப்பு எண்ணிக்கைகளை எவ்வளவு தடுக்க முடியும் என்பதை மதிப்பிடுவதே இந்த அளவீடு. இந்த விஷயத்தில், தடுக்கக்கூடிய சாத்தியமான முதுமைக்கால மறதி நோய் பாதிப்புகளில் 23% செவிப்புலன் இழப்பே காரணமாக உள்ளது, இது மனச்சோர்வு (10.1%), புகைபிடித்தல் (13.9%), சமூக தனிமை (5.9%), உயர் இரத்த அழுத்தம் (5.1%) அல்லது நீரிழிவு நோய் (3.2%) போன்ற வேறு எந்தத் தனிப்பட்ட ஆபத்து காரணிகளையும் விட அதிகம்.4
blank
படம்: மனித மூளை உடற்கூறியல் விளக்கம்

செவிப்புலன் இழப்புக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை என்றால், அது சமூக ரீதியாக அதிகம் தனிமைப்படுத்தப்படுவதற்கும், ஒருவரின் மூளை அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். ஏனென்றால் மூளையின் பின்வரும் இரண்டு முக்கிய பகுதிகள் செவிப்புலன் இழப்பால் பாதிக்கப்படுகின்றன: நெற்றிப்பொட்டு மடல் மற்றும் முன்பக்க புறணி:  

  • நெற்றிப்பொட்டு மடல் (Temporal Lobe): ஒலி செயலாக்கம் மற்றும் பிற செயல்பாடுகளுக்கு உதவி புரிகிறது.

 

  • முன்பக்க புறணி (Frontal Coretex): முடிவெடுத்தல் மற்றும் திட்டமிடல் போன்ற கவனம் செலுத்தும் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு உதவி புரிகிறது. 
  •  

செவிப்புபுலன் இழப்பு இந்தச் செயல்பாடுகளை மெதுவாக்குகிறது, இதனால் இந்த பகுதிகளில் மூளையின் அறிவாற்றல் சார்ந்த செயல்பாடு விரைவாக மோசமடைகிறது. 

அதிகரித்த சமூக ரீதியான தனிமை  செவிப்புலன் இழப்பு உள்ள வயதானவர்களுக்கு தகவல் பரிமாற்றத்தில் பிரச்சனை இருக்கும், இதனால் சமூக சூழ்நிலைகளில் இருந்து விலகிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.5ஆரம்பத்தில் நோயின்றி இருந்த நபர்கள், அவர்கள் பிற ஆபத்து காரணிகளை மாற்றியமைத்த பிறகும் கூட, குறைவான சமூக வட்டாரங்கள், கம்மியான சமூக ஆதரவு மற்றும் தனிமை ஆகியவை அவர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் என்பதை மற்ற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.6 செவிப்புலன் இழப்புக்கும் சமூக ரீதியான தனிமைக்கும் இடையிலான தொடர்பு அறிவாற்றல் தூண்டுதலுக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. தனிநபர்கள் உரையாடல்களில் குறைவாக ஈடுபடும்போது, ​​அவர்கள் தூண்டுதலூட்டும் தகவல்களைக் குறைவாக செயலாக்குகிறார்கள், இது அவர்களின் மூளை செயல்பாட்டைப் பாதிக்கும். காலப்போக்கில், இந்தக் குறைக்கப்பட்ட அறிவாற்றல் ரீதியான ஈடுபாடு, குறைந்து வரும் தகவல் பரிமாற்ற திறன்களுடன் சேர்ந்து, அறிவாற்றல் இழப்புக்கு பங்களித்து இறுதியில் முதுமைக்கால மறதி நோய்க்கு வழிவகுக்கக்கூடும்.
மூளை அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் செவிப்புலன் இழப்பு, அறிவாற்றல் ரீதியான செயலாக்கத்தின் தூண்டுதலைக் குறைப்பதற்கும் வழிவகுத்துள்ளது.7 இது பேச்சு மற்றும் மொழி உள்ளீட்டின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது, இது மூளையின் அமைப்பையும் செயல்பாட்டையும் எதிர்மறையாக பாதித்து, இறுதியில் மூளைத் திசுக்கள் சுருங்குவதற்கு காரணமாகிறது. கூடுதலாக, செவிப்புலன் இழப்பானது மூளையில் அறிவாற்றல் ரீதியான சுமையை அதிகரித்து வேலை செய்யும் நினைவகம் போன்ற நுட்பமான அறிவாற்றல் வீழ்ச்சியை துரிதப்படுத்துகிறது. குறிப்பாக, இது ஆல்சைமர் நோயுடன் பொதுவாக தொடர்புடைய பகுதிகளை பலவீனப்படுத்துவதாகத் தெரிகிறது.8

செவிப்புலன் இழப்பின் வகைகள்

செவிப்புலன் இழப்பு என்பது நாம் ஒலிகளைக் கேட்கும் விதத்தைப் பாதிக்கும் ஒரு மருத்துவ நிலை ஆகும், மேலும் இது பல காரணங்களினால் ஏற்படலாம். மூன்று வகையான செவித்திறன் இழப்பு உள்ளன: (a) கடத்தும் செவிப்புலன் இழப்பு மற்றும் (b) சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பு மற்றும் (c) கலப்பு செவிப்புலன் இழப்பு.9
கடத்தும் செவிப்புலன் இழப்பு

செவிகளின் வெளிப்புற மற்றும் நடுத்தர பகுதிகள் வழியாக ஒலி திறன்மிக்க பயணித்து செவியின் உட்பகுதியை (கோக்லியா) அடைய முடியாதபோது இந்த வகையான செவிப்புலன் இழப்பு ஏற்படுகிறது. 

பொதுவான காரணங்களில் அடங்குவன

  • செவி அடைப்பு: மெழுகு படிதல், வெளிப் பொருட்கள் அல்லது தொற்றுகள் (ஓடிடிஸ் எக்ஸ்டெர்னா போன்றவை). 
  • துளையிடப்பட்ட செவிப்பறை: அதிர்ச்சி அல்லது நாள்பட்ட தொற்றுகளால் ஏற்படும் செவிப்பறையில் துளை அல்லது கிழிதல் ஏற்படுதல். 
  • செவியின் நடுப்பகுதியில் சேதமடைந்த எலும்புகள் (சிற்றெழும்புகள்): செவியின் நடுப்பகுதியில் உள்ள எலும்புகள் காயம் அல்லது ஓட்டோஸ்கிளிரோசிஸ் (செவி எலும்பு கடினமாதல்) போன்ற நோய்கள் காரணமாக இடம்பெயர்ந்திருக்கலாம், சேதமடைந்திருக்கலாம் அல்லது இடத்தில் அசையாத நிலையில் இருக்கலாம். 
  • செவியின் நடுப்பகுதி நோய்த்தொற்றுகள் (ஓடிடிஸ் மீடியா எனப்படும் நடுச்செவி அழற்சி) செவியின் நடுப்பகுதியில் தொற்று ஏற்படுவதும் திரவம் சுரப்பதும் ஒலி பரிமாற்றத்தில் குறுக்கிடலாம்.  
சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பு

மூளைக்கு ஒலி சமிக்ஞைகளை அனுப்பும் செவியின் உட்பகுதி (கோக்லியா) அல்லது செவிப்புலன் நரம்புக்கு சேதம் ஏற்படும்போது இது நிகழ்கிறது. இது பொதுவாக நிரந்தரமான பாதிப்பாகும், மேலும் இதற்குச் சிகிச்சையளிப்பது மிகவும் சிக்கலானது. 

பொதுவான காரணங்களில் அடங்குவன

  • மூப்படைதல்: வயதாகையில் இயற்கையாக நிகழும் படிப்படியான செவிப்புலன் இழப்பு. 
  • சத்தம் நிறைந்த சூழலில் இருத்தல்: உரத்த சத்தங்களை நீண்ட நேரம் கேட்பது செவியின் உட்பகுதியில் (கோக்லியாவில்) உள்ள உணர்வு ரீதியான அணுக்களை சேதப்படுத்தும். 
  • செவியின் உட்பகுதி நோய்த்தொற்றுகள்: பொன்னுக்கு வீங்கி அல்லது சளிக்காய்ச்சல் போன்ற வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகள். 
  • மெனியர் நோய்: செவிகளில் ரீங்கார சத்தம் (டின்னிடஸ்), செவிப்புலன் இழப்பு மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும் ஒரு மருத்துவ நிலை. 
  • ஓட்டோடாக்ஸிக் மருந்துகள்: சில மருந்துகள் செவிப்புலன் நரம்புகள் அல்லது செவியின் உட்பகுதியைச் சேதப்படுத்தும், இந்த மருந்துகளில் அடங்குவன: 
  • நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள்: ஜென்டாமைசின் மற்றும் வான்கோமைசின் போன்றவை 
  • புற்றுநோய் மருந்துகள்: சில கீமோதெரபி மருந்துகள் 
கலப்பு செவிப்புலன் இழப்பு

ஒருவருக்கு கடத்தும் செவிப்புலன் இழப்பு மற்றும் சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பு இரண்டும் இருக்கும்போது கலப்பு செவிப்புலன் இழப்பு ஏற்படுகிறது, அதாவது செவியின் நடுப்பகுதி (எ.கா. திரவம் சுரத்தல் அல்லது அடைப்பு) மற்றும் செவியின் உட்பகுதி அல்லது நரம்பு இரண்டிலும் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். 

நீண்டகாலம் சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பு இருக்கும் ஒருவருக்கு செவியில் தொற்று ஏற்படும்போது அல்லது நீண்டகாலம் செவியில் தொற்று இருக்கும் ஒருவருக்கு சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பு ஏற்படும்போது இது நிகழலாம். 

பொதுவான காரணங்கள்

  • செவியில் நாட்பட்ட தொற்றுகள் மற்றும் வயது தொடர்பான செவிப்புலன் இழப்பு 
  • செவிகளின் வெவ்வேறு பகுதிகளைப் பாதிக்கக்கூடிய தலைக் காயம் 
  • நீண்ட காலம் சத்தம் நிறைந்த சூழலில் இருத்தல் 
blank
படம்: செவி உட்பகுதியின் படம்

செவிப்புலன் இழப்பின் ஆரம்ப அறிகுறிகள்

செவித்திறன் இழப்பு திடீரென்றோ படிப்படியாகவோ ஏற்படலாம், இது ஒற்றை அல்லது இரண்டு செவிகளையும் பாதிக்கக்கூடும். அறிகுறிகளில் பின்வருபவை அடங்கும்: 

  • இரைச்சலான சூழலில் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிரமம் 
  • மக்கள் முணுமுணுப்பது போன்ற உணர்வு  
  • உங்களுக்காக அவற்றை மீண்டும் சொல்ல வேண்டிய தேவை 
  • ஒருவர் பேசுவதை நேரடியாகப் பார்க்காமல் இருக்கும்போது அவர் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிரமம் 
  • உரையாடல்களில் இருந்து விலகுதல் 
  • செவித் தொற்றுகள் காரணமாக செவி வலி மற்றும் செவிக் கசிவு போன்ற தொடர்புடைய செவி பாதிப்பு அறிகுறிகள். 

இந்த அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். 

தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான உதவிக்குறிப்புகள்

செவிப்புலன் இழப்பால் ஏற்படும் முதுமைக்கால மறதி நோயின் ஆபத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழி, அடிக்கடி மற்றும் வழக்கமான செவிப்புலன் பரிசோதனைகளை மேற்கொள்வதாகும். மூத்தோர்கள் தங்கள் உடல்நலம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க 1-2 வருடங்களுக்கு ஒருமுறை சுகாதாரப் பரிசோதனைகளைச் செய்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.12
தடுப்பு சுகாதார நடுவம் செயல்பாடு ரீதியான பரிசோதனைத் தளங்கள்  புராஜெக்ட் சில்வர் ஸ்க்ரீன் (Project Silver Screen) என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கான மலிவு விலை, நாடு தழுவிய செயல்பாட்டுப் பரிசோதனைத் திட்டமாகும். சுகாதார நடுவம் தளமானது வரவிருக்கும் செயல்பாட்டுப் பரிசோதனைகளின் விரிவான பட்டியலை வழங்குகிறது. உங்கள் சுகாதாரப் பரிசோதனை: செயல்பாட்டு ரீதியான பரிசோதனைத் தளங்களில் பதிவு செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யுங்கள் பாதுகாப்பான செவியேற்கும் உத்திகளைப் பயிற்சி செய்வது செவிப்புலன் இழப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.13 செவிப்புலன் இழப்பைத் தடுப்பதற்கான சில உதவிக்குறிப்புகள் இதோ இங்கே:
  1. ஒலியின் அளவைக் கம்மியாக வைத்திருங்கள். உங்கள் சாதனத்தின் ஒலி அளவை அதிகபட்ச ஒலியளவில் 60%க்கு மிகாமல் அமைத்திடுங்கள்.
  2. நன்கு பொருந்தக்கூடிய மற்றும் சத்தத்தைக் குறைக்கும் செவிப்பொறிகள்/செவிபேசிகளைப் பயன்படுத்துங்கள்.
  3. சத்தம் அதிகமாக இருக்கும் இடங்களில், செவிச்செருகிகள் போன்ற செவிப் பாதுகாப்புப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
  4. ஒலிபெருக்கிகள், சத்தமிடும் இயந்திரங்கள் போன்று அதிகப்படியான ஒலியை ஏற்படுத்தும் மூலங்களிலிருந்து எப்போதும் விலகி இருங்கள்.
  5. சத்தம் நிறைந்த செயல்பாடுகளில் ஈடுபடும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள். உரத்த ஒலிகளிலிருந்து உங்கள் செவிகளுக்கு அடிக்கடி இடைவேளை கொடுங்கள். இது செவிகளுக்குள் இருக்கும் உணர்வு ரீதியான அணுக்களை மீட்டெடுக்க உதவுகிறது.
  6. ஒலி அளவுகளைக் கண்காணித்திடுங்கள். சத்தம் நிறைந்த சூழலில் நீங்கள் எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க அனுமதிக்கும் வகையில், உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பான செவியேற்கும் அம்சங்களைக் கொண்ட சாதனங்களைத் தேர்வுசெய்யுங்கள்.

உதவிக்குறிப்பு

70dBக்கும் அதிகமான சத்தங்கள் காலப்போக்கில் செவியேற்கும் திறனைப் பாதிக்கக்கூடும் என்பதால், 70dBக்கும் குறைவான சத்தத்தைப் பராமரியுங்கள்.15

சிகிச்சை

கூடுதலாக, சிகிச்சையின் மூலம் செவிப்புலன் இழப்பை ஒருவர் விரைவாக கையாளுவதை உறுதி செய்ய முடியும். 

  • செவிப்புலன் இழப்பை நிர்வகிப்பதற்கான சில சிகிச்சை மற்றும் மாற்று விருப்பத்தேர்வுகள் இதோ இங்கே: 

    • செவிப்புலன் கருவிகள்: உங்கள் காதில் அல்லது காதின் பின்னால் அணியக்கூடிய ஒரு சிறிய மின்னணு சாதனம். இது சில ஒலிகளை சத்தமாக எழுப்புவதனால் செவிப்புலன் குன்றிய ஒருவர் கேட்கவும், தொடர்பு கொள்ளவும், அன்றாட நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்கவும் முடியும்.

    செவியின் உட்பகுதி செருகல்கள்: இது அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் நியூரோ-ப்ரோஸ்தெடிக், இது மிதமானது முதல் கடுமையான சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பைக் கொண்ட ஒரு நபருக்கு ஒலி உணர்வை வழங்குகிறது.

உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கோ எது சிறந்த வழி என்பதைத் தீர்மானிக்க, ஒரு செவித்திறன் நிபுணரை அணுகுவது சிறந்தது. 

blank
சர்வதேச சத்த விழிப்புணர்வு தினத்தின் தரவு பொதுவான இரைச்சல் அளவுகள் - எவ்வளவு சத்தம் அதிக சத்தமாக கருதப்படுகிறது.

முடிவுரை

செவிப்புலன் இழப்பிற்கு சிகிச்சையளிப்பது முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும். உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு அல்லது உங்களுக்கே செவிப்புலன் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீங்கள் கவலைப்பட்டால், உங்கள் பொது மருத்துவர் (GP) அல்லது குடும்ப மருத்துவரைப் பரிந்துரைக்காக அணுகலாம்.

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

ஆம் இல்லை
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

  1. World Health Organization. (2025, 26 February). Deafness and hearing losshttps://www.who.int/news-room/fact-sheets/detail/deafness-and-hearing-loss 

  2. Livingston, G., Huntley, J., Sommerlad, A., Ames, D., Ballard, C., Banerjee, S., Brayne, C., Burns, A., Cohen-Mansfield, J., Cooper, C., Costafreda, S. G., Dias, A., Fox, N., Gitlin, L. N., Howard, R., Kales, H. C., Kivimäki, M., Larson, E. B., Ogunniyi, A., Orgeta, V., … K. (2020). Dementia prevention, intervention, and care: 2020 report of the Lancet CommissionThe Lancet, 396(10248), 413–446. https://doi.org/10.1016/S0140-6736(20)30367-6 

  3. Livingston, G., Huntley, J., Liu, K. Y., Costafreda, S. G., Selbæk, G., Alladi, S., Ames, D., Banerjee, S., Burns, A., Brayne, C., Fox, N. C., Ferri, C. P., Gitlin, L. N., Howard, R., Kales, H. C., Kivimäki, M., Larson, E. B., Nakasujja, N., Rockwood, K., … Mukadam, N. (2024). Dementia prevention, intervention, and care: 2024 report of the Lancet Standing CommissionThe Lancet, 403(10300), 1-40. https://doi.org/10.1016/S0140-6736(24)00345-6 

  4. Livingston, G., Sommerlad, A., Orgeta, V., Costafreda, S. G., Huntley, J., Ames, D., … & Mukadam, N. (2017). Dementia prevention, intervention, and care. The lancet, 390(10113), 2673-2734. 

  5. Bott, A., & Saunders, G. (2021). A scoping review of studies investigating hearing loss, social isolation and/or loneliness in adults. International Journal of Audiology, 60(sup2), 30–46. https://doi.org/10.1080/14992027.2021.1915506 

  6. Chern, A., & Golub, J. S. (2019). Age-related Hearing Loss and Dementia. Alzheimer disease and associated disorders, 33(3), 285–290. https://doi.org/10.1097/WAD.0000000000000325 

  7. Griffiths, T. D., Lad, M., Kumar, S., Holmes, E., McMurray, B., Maguire, E. A., Billig, A. J., & Sedley, W. (2020). How Can Hearing Loss Cause Dementia?. Neuron, 108(3), 401–412. https://doi.org/10.1016/j.neuron.2020.08.003 

  8. Ford, H. A., Hankey. J. G., Yeap. B. B., Golledge, J., Flicker, L. & Almeida, P. O. (2018). Hearing loss and the risk of dementia in later life. Maturitas Vol (112), pg 1-11.  https://doi.org/10.1016/j.maturitas.2018.03.004 

  9. Cleveland Clinic. (2023, August 24). Hearing loss: Types, symptoms, causes & treatment. Cleveland Clinic. https://my.clevelandclinic.org/health/diseases/17673-hearing-loss 

  10. NHS 24. (2024). What does tinnitus sound like? Ringing, crackling, buzzing examples [Video]. Youtubehttps://www.youtube.com/watch?v=kgIrfiyK4x8 

  11. FreeMedEducation. (2017). What is Vertigo? [Video]. Youtube. https://www.youtube.com/watch?v=j04qNXaCm0Y 

  12. World Health Organization. (2025, 21 March). Deafness and hearing loss: Safe listening. https://www.who.int/news-room/questions-and-answers/item/deafness-and-hearing-loss-safe-listening 

  13. CPF Board. (2025, March 25). How often should you go for a health screening? CPF. https://www.cpf.gov.sg/member/infohub/educational-resources/how-often-should-you-go-for-a-health-screening 

  14. International Noise Awareness Day (n.d). Common Noise Levels- How Loud Is Too Loud?. https://noiseawareness.org/info-center/common-noise-levels/ 

  15. Hearing Health Foundation. (n.d.). What are safe decibels? Hearing Health Foundation. https://hearinghealthfoundation.org/keeplistening/decibels 

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

ஆம் இல்லை
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

பின்வரும் பொருள் டிமென்ஷியா பற்றிய கடி-அளவிலான தகவல்களைக் கொண்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்ய அல்லது அச்சிட, படத்தை கிளிக் செய்யுங்கள். "மொழியைத் தேர்ந்தெடுக்கவும்" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலமும் நீங்கள் பொருளின் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.
Skip to content