எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
X
4 நிமிட வாசிப்பு

கலைத் திறனில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, வெளிப்பாட்டுக் கலை சிகிச்சையானது, வாய்மொழியாக வெளிப்படுத்த கடினமாக இருக்கக்கூடிய உணர்வுகள், அனுபவங்கள் மற்றும் உளப்போராட்டங்களை ஆராய்வதற்கான ஒரு வழியாக உருவாக்கும் செயல்முறையை வலியுறுத்துகிறது.

பயிற்சி பெற்ற சிகிச்சையாளரால் வழிநடத்தப்பட்டு, முதுமைக்கால மறதி நோயுடைய நபர்கள், பாதுகாப்பான, ஆதரவான சூழலில் நுண்ணறிவை அணுகவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், மீள்திறனை வளர்க்கவும், மனம், உடல் மற்றும் உணர்ச்சிகளின் ஒருங்கிணைப்பை வளர்க்கவும் பல கலை வடிவங்களைப் பயன்படுத்துகின்றனர்.

வெளிப்பாட்டுக் கலை சிகிச்சை என்றால் என்ன 

வெளிப்பாட்டுக் கலை சிகிச்சை அல்லது EXAT என்பது ஒரு விதமான உளவியல் சிகிச்சையாகும், இது சிகிச்சை செயல்முறைக்குள் காட்சி கலை, இசை, நடனம்/அசைவு, நாடகம் மற்றும் எழுத்து போன்ற பல கலை வடிவங்களை ஒருங்கிணைக்கிறது. இது நபரை மையப்படுத்தி, மனிதநேயக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது; மேலும் இது வெளிப்பாட்டு சிகிச்சை தொடர்மம் (ETC) போன்ற மாதிரிகள் மற்றும் இடைநிலை கலை ஒருங்கிணைப்பின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. 

கலை சிகிச்சை அல்லது இசை சிகிச்சை போன்று பாரம்பரிய, ஒற்றை-முறை கலை சிகிச்சைகளிலிருந்து வித்தியாசப்படும் EXAT, உணர்ச்சி ரீதியான வெளிப்பாடு, சுயமாக ஆய்வு செய்தல், அறிவாற்றல் ரீதியான தூண்டுதல் மற்றும் உளவியல் ரீதியாக குணமடைதல் போன்றவற்றை ஆதரிக்க பல்வேறு கலை வடிவங்களை நோக்கம்கொண்டு இணைக்கிறது. முதுமைக்கால மறதி நோய் தீவிரமடைகையில் வாய்மொழி தொடர்பு பெரும்பாலும் சவாலானதாக மாறும் என்பதால், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு இது வாய்மொழி அல்லாத, உணர்வு சார்ந்த விஷயங்கள் நிறைந்த தகவல் பரிமாற்றப் பாதையை வழங்குகிறது.

கீழே உள்ள அட்டவணை, குறிப்பிட்ட நோக்கத்துடன் EXAT-இல் பல்வேறு கலை வடிவங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுகிறது: 

கலை வடிவம்

பயன்பாட்டின் எடுத்துக்காட்டுகள்

நோக்கம்

இசை

இசை, பாடல் கேட்பது அல்லது இசைக்கருவிகள் வாசிப்பது.

கிளர்ச்சி மற்றும் பதட்டத்தைக் குறைக்கும்; மனநிலையை சீராக்கும்; சொற்கள் அல்லாத தகவல்தொடர்பை ஆதரிக்கும்.

நாடகம்

அசைவு, வேட-நாடகம், பொம்மலாட்டம், பிரதிபலிப்பு அல்லது மேம்படுத்தப்பட்ட கதைசொல்லல் ஆகியவற்றைப் பயன்படுத்துவது.

பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் உளப்போராட்டங்களை வெளிப்படுத்தி புதிய கண்ணோட்டங்களைப் பெறச் செய்யும்.

நடனம்/

அசைவு  

உணர்ச்சிகள், கருத்துகள், எண்ணங்கள் மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்த உடல் அசைவுகள் மற்றும் சைகைகளைப் பயன்படுத்துவது.

மனம்-உடல் உணர்திறன் மற்றும் விழிப்புணர்வு, உணர்ச்சி ரீதியான விடுதலை மற்றும் வெளிப்பாட்டை ஊக்குவிக்கும்.

கவிதை/

கதைசொல்லல்

கவிதை, கதைசொல்லல், கட்டுறா எழுத்து ஆகியவற்றைப் பதிவு செய்வது.

காட்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும், இது ஒருவர் சொல்லாத எண்ணங்களை வெளிப்படுத்தவும், நுண்ணறிவுகளைப் பெறவும், அர்த்தங்களை உருவாக்கவும் அனுமதிக்கும்.

காட்சி ரீதியான கலை

வர்ணம் தீட்டுதல், வரைதல், சிற்பம் செய்தல் அல்லது கலையை ரசிப்பதன் மூலம் படங்களை உருவாக்குவது அல்லது அவற்றில் ஈடுபடுவது.

சிக்கலான உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் அதிர்ச்சியை அணுக, செயலாக்க மற்றும் தொடர்பு கொள்ள உதவும்.

வெளிப்பாட்டுக் கலை சிகிச்சையை வெளிப்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளிலிருந்து வித்தியாசப்படுத்துங்கள்

வெளிப்பாட்டுக் கலை சிகிச்சை அல்லது EXAT என்பது பெரும்பாலும் வெளிப்பாட்டுக் கலைத் திட்டம் (Expression Arts Programme) எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது அல்லது அதனுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த இரண்டு அணுகுமுறைகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை அறிந்துகொள்வது இன்றியமையாதது.

வெளிப்பாட்டுக் கலை சிகிச்சை (EXAT) என்றால் என்ன

வெளிப்பாட்டுக் கலை திட்டம் என்றால் என்ன

ஒரு பயிற்சி பெற்ற மனநல நிபுணரால் வழங்கப்படும் ஒரு உளவியல் சிகிச்சை அணுகுமுறை, இந்த ஒரு சிகிச்சை கட்டமைப்பிற்குள் பல விதமான கலை முறைகள் ஒருங்கிணைக்கப்படும்.

முறையான சிகிச்சை செயல்முறை இல்லாமல் கலை, இசை, நடனம் அல்லது பிற படைப்பு வடிவங்களை உள்ளடக்கிய பொழுதுபோக்கு, கல்வி அல்லது சமூக ரீதியான நடவடிக்கைகள்.

உளவியல் மற்றும் கலை அடிப்படையிலான கோட்பாடுகளின் அடிப்படையில், இது உணர்ச்சிகள், அடையாளம், அறிவாற்றல் தூண்டுதல் மற்றும் உளவியல் குணப்படுத்துதல் ஆகியவற்றை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இன்பம், பழைய நினைவுகளை நினைவு கூர்தல், கலாச்சார ஈடுபாடு, பொழுதுபோக்கு அல்லது புலன் உணர்வுத் தூண்டுதலை மையமாகக் கொண்டுள்ளது.

பயிற்சி பெற்ற வெளிப்பாட்டுக் கலை சிகிச்சையாளர்களால் வழங்கப்படுகிறது.

மருத்துவப் பயிற்சி இல்லாத செயல்பாட்டு ஊழியர்கள், தொண்டூழியர்கள் அல்லது கலைஞர்களால் வழங்கப்படுகிறது.

இந்த இரண்டிற்கும் இடையில், EXAT மட்டுமே கட்டமைக்கப்பட்ட சிகிச்சை செயல்முறை மூலம் உளவியல் மற்றும் உணர்ச்சித் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்பாட்டுக் கலை சிகிச்சையின் (EXAT) நன்மைகள்

EXAT என்பது உணர்ச்சி மற்றும் உளவியல் ஆதரவைத் தேடும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட பங்கேற்பாளர்களுக்கு பாதுகாப்பான, ஆதரவான மற்றும் இலகுவான இடத்தை வழங்குகிறது.  

முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களுக்கான நன்மைகள்

  • புலன் உணர்வு, உணர்ச்சி மற்றும் உருவகப்படுத்தப்பட்ட வழிகளை வழங்குவதன் மூலம் வாய்மொழி வரம்புகளைக் கடந்து செல்கிறது.
  • தனிநபர்களை அவர்களின் அடையாள உணர்வு மற்றும் வாழ்க்கைக் கதையுடன் மீண்டும் இணைக்கிறது.
  • பூர்த்தி செய்யப்படாத உணர்ச்சி மற்றும் புலன் ரீதியான தேவைகளை நிவர்த்தி செய்து, மனக்கிளர்ச்சி, மனக்கவலை மற்றும் அலைந்துத் திரியும் செயலைக் குறைக்கிறது.
  • மனநிலை, தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பை உணரும் தன்மையை மேம்படுத்துகிறது.

பராமரிப்பாளர்களுக்கான நன்மைகள்

  • உணர்ச்சி ரீதியான மன அழுத்தம் மற்றும் துக்கத்தைக் கையாள ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது.
  • சுய விழிப்புணர்வை வலுப்படுத்துகிறது மற்றும் பராமரிப்பாளர்களை அவரது பராமரிப்பாளர் பாத்திரத்திற்கு அப்பால் உள்ள அவர்களின் சொந்த அடையாளத்துடன் மீண்டும் இணைக்கிறது.
  • மன அழுத்தத்திலிருந்து நிவாரணத்தையும் உணர்ச்சி ரீதியான  விடுதலைக்கான ஆக்கப்பூர்வமான கருவிகளையும் ரீதியான வழங்குகிறது.
  • அன்றாட சவால்களைச் சமாளிக்க மீள்திறன் மற்றும் உணர்ச்சி ரீதியான ஒழுங்குமுறை திறன்களை உருவாக்குகிறது.

தொடங்குங்கள்

தொடங்குவதற்கு உங்களுக்கு உதவும் வகையில், இந்த எளிய நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பரிசீலிக்க விரும்பலாம்:

கூடுதல் உதவிக்குறிப்புகள்

  • #1
    குப்பைகளை அகற்றி, நாற்காலிகளை வட்டமாக அமைத்து இடத்தை உருவாக்குங்கள்.
  • #2
    நீங்கள் நடவடிக்கையை எடுத்துக் கூற நீங்கள் அங்கு இல்லை என்ற தொனியை அமைக்க நடவடிக்கையின் ஓர் அங்கமாக இருங்கள்.
  • #3
    ஆய்வு, விளையாட்டு மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் தூண்டுதல்களைப் பயன்படுத்துங்கள், எடுத்துக்காட்டாக: நேரடி வழிமுறைகளை வழங்குவதற்குப் பதிலாக, “இதைச் செய்தால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்”.
  • #4
    “குழந்தை போன்ற” மொழியில் பேசாமல் அன்பாகவும் ஆதரவாகவும் இருங்கள்.
  • #5
    ஒவ்வொரு நபரின் கண்ணியத்தையும் பாதுகாக்கும் அதே வேளையில், தெளிவான மற்றும் எளிமையான சொற்றொடர்களைப் பயன்படுத்தி மரியாதையுடன் பேசுங்கள்.
  • #6
    பங்கேற்பாளர்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கொடுங்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் பணிகளால் நிரப்ப வேண்டிய அவசியமில்லை. சத்தமில்லா தருணங்களை அனுபவிப்பதும் சரியே. யாராவது அந்த நடவடிக்கையில் பங்கேற்க விரும்பவில்லை என்றால், அவரை அப்படியே விட்டுவிடுங்கள் – அவர் பாதுகாப்பாக உணர அதிக நேரம் தேவைப்படலாம். சில பங்கேற்பாளர்கள் பழகுவதற்கு சில அமர்வுகள் அவர்களுக்குத் தேவைப்படலாம், எனவே அவரவர் வசதிக்கு பழக்கமாக அனுமதியுங்கள்.

முடிவுரை

பல்வேறு கலை முறைகளைப் பயன்படுத்துவது, பங்கேற்பாளர்கள் தங்கள் உணர்வுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு நிதானமான, விளையாட்டுத்தனமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய சூழலை உருவாக்குகிறது.

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு, EXAT ஆனது புலன் சார்ந்த, உணர்ச்சிபூர்வமான மற்றும் உருவகப்படுத்தப்பட்ட தகவல்பரிமாற்ற வடிவங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அறிவாற்றல் ரீதியான வரம்புகளைத் தவிர்க்க உதவுகிறது. பராமரிப்பாளர்களுக்கு, EXAT ஆனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், அவர்களின் மனசாட்சியுடன் மீண்டும் இணையவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் ஒரு பாதுகாப்பான வழியை வழங்குகிறது.

இது ஆர்வத்தை வளர்க்கிறது, விளையாட அழைக்கிறது, மேலும் முதுமைக்கால மறதி நோய் ஏற்படுத்தும் மாற்றங்களை மீறி அர்த்தமுள்ள சுய வெளிப்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அடையாளம் மற்றும் சுய மதிப்பின் உணர்வை ஆதரிக்கிறது.

ஆசிரியரின் வாழ்க்கை வரலாறு

ANZACATAவில் பதிவுசெய்யப்பட்ட வெளிப்பாட்டுக் கலை சிகிச்சையாளராக உள்ளார், மேலும் இவர் தற்போது Dementia Singapore Ltd. நிறுவனத்தில் வெளிப்பாட்டுக் கலை சிகிச்சை சேவைககள் மேம்பாட்டில் தலைமை தாங்குகிறார். ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வெளிப்பாட்டுக் கலை சிகிச்சையில் முதுகலைப் பட்டத்தையும், உளவியல் பின்னணியைக் கொண்டவருமான ரேச்சல், முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் ஆக்கப்பூர்வமான, உணர்வு சார்ந்த அணுகுமுறைகள் மூலம் ஆதரவளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.

Lusebrink, V. B. (2010). Assessment and therapeutic application of the expressive therapies continuum: Implications for brain structures and functions. Art Therapy, 27(4), 168-177.

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

ஆம் இல்லை
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

பின்வரும் பொருள் டிமென்ஷியா பற்றிய கடி-அளவிலான தகவல்களைக் கொண்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்ய அல்லது அச்சிட, படத்தை கிளிக் செய்யுங்கள். "மொழியைத் தேர்ந்தெடுக்கவும்" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலமும் நீங்கள் பொருளின் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.
Skip to content