Playback speed:
வடக்கு-தெற்கு ரயில் பாதை, கிழக்கு-மேற்கு ரயில் பாதை மற்றும் வட்ட ரயில் பாதையில் உள்ள குறைந்தது 29 எஸ்எம்ஆர்டி(SMRT) ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டிருக்கும் முதுமைக்கால மறதி நோயுள்ளோருக்கு உகந்த கருணை இருக்கைகள் திட்டம் ஆனது முதுமைக்கால மறதி நோயுள்ளோருக்கு உகந்த சிங்கப்பூர் (DFSG) திட்டத்தின் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC) மற்றும் எஸ்எம்ஆர்டி(SMRT) ரயில் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். இது முதுமைக்கால மறதி நோயுள்ளோருக்கு உகந்த பயணத்தை ஆதரிக்கிறது, முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் இனிமையான சவாரிகளை மேற்கொள்ள உதவுகிறது.
ரயில் தளங்களில் அமைந்துள்ள இருக்கைகள் பிரகாசமான வண்ண நிறத்தில் ஸ்டிக்கர்கள் கொண்ட உறைகளால் மூடப்பட்டிருக்கும், இதனால் இருக்கைகள் மற்றும் தரை மேற்பரப்புகளுக்கு இடையே நன்கு வித்தியாசம்தெரியும். இதனால் மூத்தோர்களும் முதுமைக்கால மறதி நோயுள்ளோர்களும் இருக்கைகளை எளிதாக அடையாளம் காணலாம், இது அவர்கள் ஓரங்களிலிருந்து விழுவதையோ அல்லது இடித்துக் கொள்வதையோ தடுக்கிறது, அதே நேரத்தில் சக பயணிகள் தேவையுள்ள ஒருவரிடம் பரிவு காட்டவும் ஊக்குவிக்கிறது.
“உதவிக் கரம் நீட்டுங்கள், முதுமைக்கால மறதி நோயுடையோருக்கு நண்பராக இருங்கள்” என்ற கருணை இருக்கைகளின் வாசகம், சிங்கப்பூரை அக்கறையுள்ள மற்றும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த நாடாக மாற்ற பயணிகள் எவ்வாறு உதவ முடியும் என்பதையும், அவர்களும் அதன் அங்கமாக இருக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் போன்று உதவி தேவைப்படுபவர்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும், அவர்களைக் கவனிக்கவும் சமூகத்தை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்ட முதுமைக்கால மறதி நோயுள்ளோருக்கு உகந்த சிங்கப்பூர் (DFSG) என்ற திட்டத்தினுடைய நோக்கத்துடன் இது ஒத்துப்போகிறது. முதுமைக்கால மறதி நோயுள்ளோரின் நண்பர்கள் வினாடி வினாவில் பங்கேற்க, இருக்கை உறையில் உள்ள QR குறியீட்டை பங்கேற்பாளர்கள் ஸ்கேன் செய்து, ஆச்சர்ய பரிசை (இருப்பு உள்ள வரை மட்டுமே) பெற்றுக்கொள்ளலாம்.
இன்றே அவற்றை ரயில் நிலையங்களில் கண்டுபிடித்திடுங்கள்!