Playback speed:
முதுமைக்கால மறதி நோய் போன்ற நரம்புச் சிதைவு கோளாறுகளுடன் வாழ்வது என்பது, நோயறிதலின்போது தனிநபர்கள் திடீரென தங்கள் செயல்பாட்டுத் திறனையும் வேலைத் திறனையும் இழப்பதை அர்த்தப்படுத்தவில்லை. அது வேகமாக தீவிரமடையும் முதுமைக்கால மறதி நோயாக இல்லாவிட்டால், உடல் ரீதியாக ஆரோக்கியமாகவும், மன ரீதியாக சுறுசுறுப்பாகவும், சமூக ரீதியாக ஈடுபாட்டுடனும், நன்றாக சாப்பிட்டும் நம் பங்களிப்பைச் செய்தால், நம்மில் பலர் மிக நீண்ட காலம் நலமாக வாழலாம்.
இருப்பினும், நேர்மறையாக வாழ்க்கையை வாழ்வதில் ஒரு அம்சம் உள்ளது, அதற்கு நமக்கு சமூகத்தின் ஆதரவும் புரிதலும் தேவை. இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் (YOD) உள்ள நமக்கு.
“கட்டாயப்படுத்து” பணிநீக்கத்தைப் பெறுவது என்பது மிகக் கடினமான அடியாக இருக்கும்.
இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் கண்டறியப்பட்ட பலர் தங்களின் அறிவாற்றல் வீழ்ச்சியின் காரணமாக, குறிப்பாக அவர்களின் நிர்வாக செயல்பாட்டு திறன்களில் ஏற்படும் வீழ்ச்சியின் காரணமாக தங்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டியுள்ளது. செயல்பாட்டு திறன்களின் சில அம்சங்கள் இருக்கும், அவற்றால் இனி உகந்த அனுகூலமான அளவில் செயல்பட முடியாது. திட்டமிடல், நேர மேலாண்மை, நேர்த்தியாக இருத்தல் மற்றும் பல்பணி செய்தல் போன்ற திறன்கள் பொதுவாக அறிவாற்றல் வீழ்ச்சியால் பாதிக்கப்படுகின்றன. இது ஒரு தனிநபரின் உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் ஒரு தொழிலாளியாக பயனுறுதிறனைப் பாதிக்கும் அதே வேளையில், பல ஆண்டுகளாக அவர்கள் பெற்ற திறன்களும் அனுபவங்களும் அவர்களின் செயல்பாட்டு ரீதியான சரிவை ஈடுகட்டும்.
“வேலை செய்யும் திறன்” என்ற ஒரு தனிநபரின் வள ஆதாரங்களுக்கும் வேலை நோக்கத்திற்கும் இடையிலான தொடர்பைக் குறிக்கிறது. பின்லாந்து தொழில்சார் சுகாதார நிறுவனத்தின் வேலைத் திறன் மாதிரியின்படி, நான்கு ஒன்றோடொன்று தொடர்புடைய அடுக்குகள் உள்ளன: தனிநபர் சுகாதாரம் மற்றும் செயல்பாட்டுத் திறன்களைக் கொண்ட அடிப்படை அடுக்கு; ஆற்றல் மற்றும் திறன்கள் இடம்பெறும் அடுத்த அடுக்கு; அதைத் தொடர்ந்து தனிநபர் மதிப்புகள், மனப்பான்மைகள் மற்றும் ஊக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்றாவது அடுக்கு; மற்றும் மேல் அடுக்காக வேலை என்பது உள்ளது, இது வேலையின் நோக்கம், வேலைச்சூழல், அமைப்பு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றைக் குறிக்கிறது.
எனவே, எந்தவொரு வேலை செய்யுமிடமும் இலேசான அறிவுத்திறன் குறைபாடு (Mild Cognitive Impairment, MCI) அல்லது இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் (YOD) உடன் வாழும் தங்களின் ஊழியர்களை வேலையில் தொடர்ந்து நீடிக்க வைக்க எந்த வகையான வேலை தலையீடு தேவை என்பதைக் கருத்தில் கொண்டு முடிவு செய்வது பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார ரீதியான நன்மைகளையும் தாண்டி, வாழும் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை வழங்குவதற்கும் சுய மதிப்பைப் பேணுவதற்கும் தொழில் ரீதியான பங்கைத் தக்கவைத்துக்கொள்வது மிக முக்கியம்.
இதனை அடைய வேண்டுமென்றால், பாதிக்கப்பட்ட ஊழியருக்கும் மனிதவளத் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிக முக்கியமானது. ஊழியர்கள் மீது பாகுபாடு காட்டாமல், ஆய்ந்து பார்க்காமல் முடிவு செய்யாமல், அவர்கள் தங்களின் செயல்பாட்டுத் திறனின் அளவை வெளிப்படையாகத் தெரிவிக்கும் அளவுக்கு ஊழியர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும்.
பெரும்பாலும் ஒரே மாதிரியான சிந்தனை மற்றும் கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட எதிர்மறை மனப்பான்மை உடையவர்களில், இந்நோய் குறித்து கற்பிக்க முடியாத, கற்றுக் கொள்வதை சுமையாகக் கருதும் முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களும் அடங்குவர். இத்தகைய கண்ணோட்டம் நிர்வாக முடிவுகளைப் பாதிக்கலாம் மற்றும் பணியாளரின் சூழ்நிலையைப் பாதிக்கச் செய்யலாம்.
அனைவரையும் உள்ளடக்கிய வேலைக் கலாச்சாரம் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஊழியர்கள் தங்களின் வேலைத் திறன்களைப் பராமரிக்க ஆதரவளிக்கும் விருப்பத்துடன், இது ஒரு சாத்தியமான நடைமுறையாகும். வேலை செய்யுமிடத்தில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களை ஆதரவளிக்கும் வகையில் உகந்த பொது சுகாதாரக் கொள்கைகளையும் அரசாங்கம் முக்கியமாக உருவாக்க முடியும். ஆண்டுகள் செல்ல செல்ல, இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் (YOD) உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இது மிகவும் அவசியம்.
இந்த வர்ணனை “மன்றம்: ஊழியர்களுக்கு வயதாகையில் நிறுவனங்கள் முதுமைக்கால மறதி நோயை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்” என்பதற்கு பதிலளிக்கும் விதமாக உள்ளது (தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஜனவரி 19, 2021) – பால் ஹெங், ADA-வின் மேலாண்மைக் குழு உறுப்பினர்.
.
எமிலி ஓங் பற்றி
எமிலிக்கு 49 வயதாகும்போது நரம்புச் சிதைவு கோளாறுகள் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்டது, மேலும் அவருக்கு 51 வயதாகையில் ஃப்ரெண்டொடெம்போரல் டிமென்ஷியா (Frontotemporal Dementia, FTD) தற்காலிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. எமிலி ஆல்சைமர் நோய் சங்கத்தின் கீழ் இயங்கும் நம்பிக்கைக்கான குரல்கள் திட்டத்தின் பங்கேற்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார், மேலும் முதுமைக்கால மறதி நோயுள்ளோருக்கு உகந்த சூழலுக்காக மிகுந்த ஆர்வத்துடன் உரையாற்றி வருகிறார். அவரது பங்களிப்புகள் குறித்து இங்கே மேலும் படியுங்கள்:
மேற்கோள்கள்1. Keeping people with dementia or mild cognitive impairment in employment: A literature review on its determinants by Fabiola Silvaggi et al., International Journal of Environmental Research and Public Health, 29 January 2020.
This post was edited from the original post on the Dementia Singapore website.