எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
blank
வழங்குவோர்: டிமென்ஷியா சிங்கப்பூர் (முன்பு ஆல்சைமர் நோய் சங்கம் என்று அழைக்கப்பட்டது)

சிங்கப்பூரில் முதுமைக்கால மறதி நோய் அதிகமாகக் காணப்படுவதால், ADA தனது நம்பிக்கையில் உறுதியாக இருந்து, இந்த மருத்துவ நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. முதுமைக்கால மறதி நோயை உள்ளடக்கிய திட்டங்களைத் தொடங்கி, அவை மூத்தோர் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் வயதாகையில் தங்கள் வழக்கமான இடங்களில் தொடர்ந்து வசிக்கவும், வாழவும், செழிக்கவும் உதவும் என்று ADA நம்புகிறது. கெபுன் பாருவில் (Kebun Baru) உள்ள எங்களின் வழி காணும் திட்டம் அத்தகைய ஒரு திட்டமாகும், 2018 முதல் இத்திட்டத்தில் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு, அதன் அடித்தள உறுப்பினர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியில் முதுமைக்கால மறதி நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து வருகிறோம்.  

மார்ச் 2019 இல், கெபுன் பாரு (Kebun Baru) ஒற்றை உறுப்பினர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹென்றி குவெக்(Henry Kwek) உடனான உரையாடலுக்குப் பிறகு, வழி காணும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆய்வுக் குழு விவாதத்திற்கு ADA மற்றும் முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் தலைமை தாங்கினர்.

சிங்கப்பூர் முழுவதும், 14 முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகங்கள் உள்ளன, இவை உள்ளூரில் துவங்கப்பட்டுள்ள அடித்தள முயற்சிகளாகும், இவை முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அக்கறையுள்ள மற்றும் அவர்களை உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சு (Ministry of Health) மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (Agency for Integrated Care, AIC) ஆகியவற்றின் திட்டமாக, இந்த முயற்சிகள் சமூகப் பங்காளர்களின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டன.

AIC தலைமையிலான பிற வழி காணும் திட்டங்கள் நீ சூன் மற்றும் இயோ சூ காங் ஆகிய இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன, இதில் திட்ட உரிமையாளர்கள் மற்றும் வடிவமைப்பு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வர்ணம் பூசி பிரிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி வட்டாரங்கள், சின்னங்கள் மற்றும் சுவரோவியங்கள் இதில் அடங்கும், எனவே இந்த வீடமைப்புத் தொகுதிகள் மற்றும் பொதுவாக அணுகப்படும் பாதைகள் இன்னும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்.

கெபுன் பாருவில், ADA தலைமையிலான வழி காணும் திட்டத்தில், மூத்தோர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் சம்பந்தப்பட்ட நபர்கள் அதிக விகிதத்தில் வாழும் வீடமைப்பு பேட்டைகளை அடையாளம் காண அடித்தள உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இருந்தது. ஏப்ரல் 2021 நிலவரப்படி, அங் மோ கியோ அவென்யூ 3 மற்றும் 4 இல் உள்ள 10 புளோக்குகளில் 37 சுவரோவியங்களை ADA நிறைவு செய்துள்ளது.

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகங்களை உருவாக்குவதற்கு பல்வேறு திட்டங்கள் இருந்தபோதிலும், கெபுன் பாருவில் உள்ள வழி காணும் திட்டத்தின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் கலந்துரையாடல்களிலும் செயல்படுத்தலிலும் பங்கு பெறுவதே ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம், நாம் செய்யும் எல்லாவற்றிலும் உள்ளடக்கிய தன்மையைக் கடைப்பிடிக்கும் நமது நம்பிக்கையை உறுதி செய்வது மட்டுமல்லாமல், இது முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களை அங்கீகாரம் செய்கிறது மற்றும் முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் மீதான மற்றவர்களின் கண்ணோட்டத்தை மாற்றுவதில், அவர்களைத் திறமையான பங்களிப்பாளர்களாகக் காண்பதில் குறிப்பிடத்தக்க அளவு பயனளிக்கிறது.

அங் மோ கியோ அவென்யூ 3 இல் நிறைவு செய்யப்பட்ட சுவரோவியங்கள்

blank
படத் தலைப்பு: டிஎஸ்ஜி வலைக் கட்டுரை எனது வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டறிதல்

இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ADA இன் தொண்டூழியர்களான அம்மையார் எமிலி ஓங் மற்றும் திரு. அஞ்சாங் ரோஸ்லி ஆகியோரிடம் நாங்கள் பேசினோம், அவர்கள் கெபுன் பாருவில் உள்ள சின்ன சுவரோவியங்களை வழிநடத்திய திட்டக் குழுவின் அங்கத்தினராக தங்கள் கண்ணோட்டங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். 

 

1. கெபுன் பாருவின் வழி காணும் திட்டத்தில் நீங்கள் எவ்வாறு ஈடுபட்டீர்கள் என்று தெரிவியுங்கள்? 

எமிலி: கெபுன் பாரு ஒற்றை உறுப்பினர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு. ஹென்ரி குவெக் உடனான எங்கள் உரையாடலுக்குப் பிறகு இந்த திட்டத்தின் அங்கத்தினராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த உரையாடல் எங்கள் நம்பிக்கைக்கான குரல்கள் திட்டத்தின் (Voices For Hope) ஒரு பகுதியாக ஒழுங்கமைக்கப்பட்டது, இதில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களாகிய நாங்களும் எங்களின் பராமரிப்புப் பங்காளர்களும் எங்களைப் பற்றி நாங்களே எடுத்துரைக்கும் பயணத்தில் அதிகாரம் பெறுகிறோம்.

திரு. ஹென்றி குவெக் உடனான இந்த உரையாடலுக்கு முன்பு, என் கணவரிடம் கெபுன் பாரு நகர மையத்திற்கு என்னை அழைத்துச் செல்ல சொன்னேன்; அந்த இடத்திற்கே சென்று கருத்தாய்வு செய்யவும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபராக நகரத்தின் ஊடாக பயணித்து அனுபவிக்கவும் மகிவும் உற்சாகமாக இருந்தேன். உரையாடல் அமர்வின்போது, ​​உள்ளூர் அக்கம்பக்கத்தில் வசிக்கும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் மக்களுக்கு சமூகமானது சிறந்த முறையில் ஆதரவளிக்கக்கூடிய பல்வேறு வழிகளைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.

அஞ்சாங்: சுவரோவிய வழி காணும் திட்டத்தில் பங்கேற்க ADA என்னை அழைத்தது. எல்லா வீடமைப்பு வளர்ச்சிக் கழக வெற்றிட தளங்களும் ஒரே மாதிரியாக இருப்பதால், முன்பு நான் என் சொந்த அக்கம்பக்கத்தில் (உட்லேண்ட்ஸில்) தொலைந்து போனதால் இந்தத் திட்டம் குறித்து மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன். மின்தூக்கி தரையிறங்கும் இடங்கள் மற்றும் முகப்பிடங்கள் அனைத்தும் மிகவும் ஒரே மாதிரியாக இருப்பதால், நாம் மிக எளிதாக வழி தவறிவிடலாம்.

 

2. இத்திட்டத்தின் முழு செயல்முறையும் உங்களுக்கு எப்படி இருந்தது?

எமிலி: திட்டக் குழுவில் அங்கம் வகித்த மற்ற நபர்களுடன் இணைந்து பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்ததால், முழு செயல்முறையும் அதிகாரமளிப்பதாக இருந்தது. எனது கருத்துக்களை நான் உடனடியாகப் பகிர்ந்து கொள்ள முடிந்தது, மேலும் திட்டத்தில் உள்ள மற்றவர்கள் எனது கருத்துக்களை மதித்துக் கேட்டனர். எங்கள் ஈடுபாடு – அஞ்சாங் மற்றும் நான் – மற்றும் ஒட்டுமொத்த ஒத்துழைப்பே இந்தத் திட்டத்திற்கு ஒரு பெரிய உதவியாக இருந்தது என்று நான் கூறுவேன். சம்பந்தப்பட்ட அனைவரின் கண்ணோட்டங்களின் கலவையே இதன் வெளிப்பாடாக இருந்தது – சுவரோவியங்களைச் சேர்ப்பது வழியைக் கண்டுபிடிப்பதற்கு எவ்வாறு உதவும் என்பதை மெய்யாக அனுபவித்த மக்கள், ADA-வின் பராமரிப்பு வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள், அதே போல் கெபுன் பாரு அடித்தள சமூகத் தலைவர்கள் என எல்லோரின் கண்ணோட்டங்களும் இதில் பங்கு வகித்தன.

இறுதியில், இது வெறும் காட்சி குறிப்புகளைப் பற்றியது மட்டுமல்ல. ஆனால் மிக முக்கியமானது என்னவென்றால், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவர் தனது புளோக்கை நினைவில் வைத்து, அதனை அடையாளம் கண்டு, நம்பிக்கையுடன் வீடு திரும்புவதற்கு இந்தக் காட்சி குறிப்புகள் எவ்வாறு “செயல்படுத்தும் கருவிகளாக” இருக்கின்றன என்பதே.

அஞ்சாங்:  இந்தச் செயல்முறை என்னை மிகவும் அங்கீகரிக்கும் விதமாக இருந்தது. அது உண்மையாகவே ஒரு குழு முயற்சி. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற முடிந்ததில் மகிழ்ச்சி. அந்த உணர்வு நன்றாக இருந்தது, ஏனென்றால் என்ன செய்யப்பட்டாலும் அது முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு உண்மையிலேயே உதவியாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சுவரோவியங்களை எங்கு அமைப்பது, எந்தச் சுவருக்கு வர்ணம் பூசுவது போன்றவை குறித்து ஆராய்வதில் நாங்கள் ஈடுபட்டோம், இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் நடந்து செல்கையில் இவற்றை வைத்து தங்களின் புளோக்குகளை அடையாளம் காண உதவும். அது வேடிக்கையாக இருந்தது, நிறைவு செய்த பிறகு பெரியளவில் சாதித்த உணர்வை அளித்தது.

 

3. உங்களுக்குப் பிடித்த சுவரோவியம் எது, ஏன்?

எமிலி: ‘அங் கு குவே (ஆமை கேக்)’ சுவரோவியம் எனக்கு ஒரு சிறப்பு அர்த்தத்தைக் கொண்டுள்ளது, ஏனெனில் அது என் மறைந்த பாட்டிக்கும் எனக்கும் மிகவும் பிடித்தமான குவே. இந்த உணர்ச்சிகரமான நினைவு முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது எந்தவொரு தனிநபருக்கும் மிகவும் வலிமையான நினைவாற்றல் வடிவமாக உள்ளது. எனவே, உணர்ச்சிகரமான நினைவைப் பயன்படுத்துவதே கெபுன் பாருவில் உள்ள வழி காணும் திட்டத்தின் மூலக்கல்லாகும்.

அஞ்சாங்: முயல் மிட்டாய்தான் எனக்குப் பிடித்தது. இது உண்மையிலேயே இனிமையான நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது. இது என் சிறுவயது நாட்களை நினைவூட்டுகிறது, அப்போது நான் தினமும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு 3 கி.மீ நடந்து செல்ல வேண்டியிருந்தது. அந்த நீண்ட நடைப்பயணங்களின்போது முயல் மிட்டாய்தான் என் அன்றாடத் தோழனாக இருந்தது.

அங் கு குவே என்னும் ஒரு பிரபலமான இனிப்பு மாவுப் பண்டத்தை வரையும் ஒரு தொண்டூழியர்

blank
படத் தலைப்பு: டிஎஸ்ஜி வலைக் கட்டுரை எனது வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டறிதல்

4. முதுமைக்கால மறதி நோயுடைய மூத்தோர்கள் உலாவ உதவும் வண்ணக் குறியீடுகளைக் கொண்ட நீ சூன் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள் பற்றி நமக்குத் தெரியும், மேலும் வழித்தேடலுக்கு உதவும் நோக்கம் கொண்ட கெபுன் பாருவின் இந்த வழி காணும் திட்டம் பற்றியும் நமக்குத் தெரியும். இந்த இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகள் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?

எமிலி: மனித வழிசெலுத்தல் இரண்டு முக்கிய செயல்முறைகளைக் கொண்டுள்ளது: வழி காணுதல் (இது எங்கு செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்) மற்றும் நகர்வியக்கம் (இடத்தைக் கடந்து செல்வது, தடைகளைத் தவிர்ப்பது). எவ்வகை காட்சிக் குறிப்புகள் வழங்கப்பட்டாலும், அது நம்மை நாமே ஒரு திசையை நோக்கிப் பயணிக்க தயார்படுத்திக் கொள்ளவும், தொடங்கும் மற்றும் முடிக்கும் இடங்களை தெளிவுபடுத்துவதன் மூலம் பாதையைத் திட்டமிடவும், நமது இலக்கிடத்தை நோக்கி நகரும்போது நமது முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், இறுதியாக நாம் இலக்கிடத்தை அடைந்தவுடன் அதை அடையாளம் காணவும் உதவும் விதமாக இருக்க வேண்டும். நாளின் இறுதியில், கட்டமைக்கப்பட்ட இடத்தில் காட்சி குறிப்புகளை நாம் எவ்வாறு உணர்கிறோம், அனுபவிக்கிறோம், பயன்படுத்துகிறோம், அதை வைத்து என்ன செய்வது என்று சிந்திக்கிறோம் என்பதைப் பற்றியதுதான்.

இரண்டும் வழி காணும் திட்டங்கள் என்றாலும், இரண்டு திட்டங்களுக்கும் இடையிலான பெரிய வித்தியாசம் என்னவென்றால், கெபுன் பாருவில் உள்ள சுவரோவியங்கள், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் காட்சி குறிப்புகளை (தகவல்) எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும், அதற்கான நமது அடுத்தடுத்த எதிர்வினையையும் கருத்தில் கொள்ளும் விதத்தில் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தில் நேரடி அனுபவமுள்ள இரண்டு நபர்கள் இணைத் திட்டமிடுபவர்களாகவும் முடிவெடுப்பவர்களாகவும் இருந்ததால் இது சாத்தியமானது. எனவே, சுற்றுச்சூழல் தூண்டுதலின் குறைந்த வரம்பைக் கொண்டிருப்பதற்கான நமது உணர்திறன், வழி கண்டுபிடிக்கும் பணியில் சிக்கலைத் தீர்க்க பொருத்தமற்ற காட்சி குறிப்புகள் மற்றும் தகவல்களைச் செயலாக்குவதற்கான நமது பலவீனமான திறன் ஆகியவற்றால் திசைத்திருப்பப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கெபுன் பாருவில் வழி காணும் சுவரோவியங்களை அமைக்கும் இடம் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றைத் திட்டமிடும்போது இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன.

முடிவெடுப்பதை ஆதரிக்கும் முக்கிய இடங்கள் மற்றும் ஒருவர் வீட்டிற்கு சரியான பாதையில் செல்கிறாரா என்பதைக் கண்காணிக்கும் வழியில் மட்டுமே சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுவரோவியத்திலும் அதிகபட்சம் மூன்று நிறங்களுக்கு மேல் இருக்காது, ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களை உள்ளடக்கிய தூண்டுதல் நமது குறைந்த அளவிலான கவன செயல்பாடுகளை எளிதில் மூழ்கடித்துவிடும். கவனத்தை ஈர்க்க சுவரோவியங்களுடன் போட்டியிடுவதைத் தவிர்ப்பதற்காக புளோக் எண்களுக்கு ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான எண்கள் இருப்பதற்கான பகுத்தறிவையும் இது விளக்குகிறது. வண்ணங்களைப் போலன்றி, ஒரு குறிப்பிட்ட அக்கம்பக்கத்தின் கலாச்சார மற்றும் வயது காரணியைக் கருத்தில் கொண்டு கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுவரோவியங்கள், தனித்துவமானதாகவும் படிக்கக்கூடியதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், அர்த்தமுள்ள தன்மையையும் பரிச்சயத்தையும் சேர்க்கின்றன.

அஞ்சாங்: என்னைப் பொறுத்தவரையில், ஒரு முழு தூணும் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் வரையப்பட்டால், நான் சற்று உணர்ச்சிவசப்படுவேன். நீ சூனில் உள்ள வடிவமைப்புகளை ஆதரிக்கும் விதமாக நினைவுப்படுத்தும் எந்த விஷயமும் இல்லை. அதிகப்படியான தகவல்கள் இருக்கும்போது, ​​கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் என்னால் மனதில் உள்வாங்க முடியாது, மேலும் அது எனக்கு குழப்பத்தை அதிகரிக்கும். கெபுன் பாருவில் உள்ள சுவரோவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனெனில் அவை கவர்ச்சிகரமானதாக உள்ளன, அவை கலாச்சாரத்தையும் நினைவாற்றலையும் பிரதிபலிக்கின்றன. கெபுன் பாருவில் உள்ள சுவரோவியங்களில் இன்னும் பல கதாபாத்திரங்கள் உள்ளன. அவை என்னை புன்னகைக்கவும் மகிழ்ச்சியடையவும் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரையில், இது முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், ஏனெனில் சுவரோவியங்களை நான் பார்க்கும்போது அவை இனிமையான நினைவுகளையும் கொண்டு வருகின்றன. 

 

5. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களாக, குறிப்பாக நமது அக்கம்பக்கங்களில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு வழி காண உதவும் வகையில் இன்னும் வேறு என்ன செய்யலாம் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

எமிலி: என்னைப் பொறுத்தவரையில், அக்கம்பக்கத்திலும் நடைபாதைகளிலும் முதுமைக்கால மறதி நோயுள்ளோருக்கு உகந்த அளவிலான விளக்குகளை அமைத்திட நான் ஆதரிப்பேன். முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களின் பதட்டத்தைக் குறைக்க நல்ல வெளிச்சம் மிகவும் முக்கியமானது. குறைவான வெளிச்சம் நமது அக்கம்பக்கங்களைப் புரிந்துகொள்ளும் திறனைக் குறைத்து, பயணிப்பதில் சிரமத்தை அதிகரிக்கிறது. எனவே, நடைபாதைகள் மற்றும் வெற்றிட தளங்களில் பொதுவான விளக்குகளும், அதே போல் மின்தூக்கி இருக்கும் பகுதிகளில் இடத்திற்கு ஏற்றபடியான விளக்குகளும் வழி காண்பதற்கு அமைத்திடுவது குறித்து மேலும் ஆராயலாம்.

அஞ்சாங்: என்னுடைய லூயி பாடி முதுமைக்கால மறதி நோய் (Lewy body dementia) காரணமாக, என்னுடைய பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. அடர் நிற தரை ஓடுகளைப் பயன்படுத்த வேண்டாம், மேலும் இருண்ட நிழல்கள் ஏற்படாத விதம் விளக்குகளைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இருண்ட நிழல்களைப் பார்க்கும்போது எனக்கு மாயைகள் ஏற்படுவதால், அவை என்னைப் பயமுறுத்துகின்றன.

 

6. முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்காகப் பரிந்து பேசுபவர்களாக, முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு உதவும் விதமாக சமூகத்தை இன்னும் எப்படி உள்ளடக்கியதாக மாற்றலாம் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

எமிலி: சமூக விதிமுறைகளிலிருந்து வித்தியாசமாக சிந்திக்கும், நடந்துகொள்ளும் மற்றும் தம்மை வெளிப்படுத்தும் நபர்களாக முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களை ஏற்றுக்கொண்டு பாராட்டக்கூடிய ஒரு சமூகம் நமக்குத் தேவை. அறிவாற்றல் குறைபாடுகளுடன் வாழ்ந்தாலும், எல்லோரையும் போலவே எங்களுக்கும் பொதுவான தேவைகள் உள்ளன – அவை சமூகத்தின் சக உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

அஞ்சாங்: சமூகத்தில் உள்ள அனைவரும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களை எவ்வாறு அடையாளம் கண்டு உதவுவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். எங்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள், எங்களிடம் பொறுமையாக நடந்துக்கொள்ளுங்கள்.

சில நாட்களில் சமூகத்தினுடைய சத்தம், காட்சிகள், அடையாளங்கள், போக்குவரத்து, கூட்டம் என பல தூண்டுதல்களால் நான் அதிகமாக பாதிக்கப்படுவேன், இது நிகழும்போது, ​​நான் கிளர்ச்சியடைந்து விரும்பத்தகாத வகையில் நடந்துகொள்வேன். எனவே, என்னைப் பொறுத்தவரையில், எந்தவொரு சமூகமும் முதுமைக்கால மறதி நோயுள்ளோரை உள்ளடக்கிய சமூகமாக மாறுவதற்கு முதுமைக்கால மறதி நோய் குறித்த விழிப்புணர்வு முக்கியம் என்று கூறுவேன். துரதிர்ஷ்டவசமாக, எங்களது மருத்துவ நிலையின் கண்ணுக்குப் புலப்படாத தன்மை காரணமாக, நான் எதிர்மறையாக எதிர்வினையாற்றும்போதுதான் எனக்கு முதுமைக்கால மறதி நோய் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். நான் தூண்டப்படாத மற்ற நாட்களில், நான் தொடர்ந்து சமாளிக்கவும், சொந்தமாகச் செல்லவும் கற்றுக்கொள்கிறேன். எனவே, எங்களது எதிர்வினைகளை எதிர்மறையான ஒன்றாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மாறாக, எங்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள், எங்கள் எதிர்வினைகள் எங்களுக்கு உதவி தேவை என்பதை உங்களுக்குச் சொல்லும் ஒரு வழி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பதிவு டிமென்ஷியா சிங்கப்பூர் வலைத்தளத்தின் அசல் பதிவிலிருந்து திருத்தப்பட்டது.

பிரிவுகள்
குறிச்சொற்கள்
#DementiaFriendlySG Movement (2) Art (1) Behaviour (2) BPSD (1) Dementia Care Mapping (1) Emily Ong (4) Intellectual Disability (1) Recreational Activities (1) statistics (1) Types of Dementia (2) Up Close (1) VOICES FOR HOPE (3) Youth Community Leaders (1) அன்றாட வாழ்வின் செயல்பாடுகள் (1) அறிகுறிகள் (1) அறிவிப்பு (1) உணவு மற்றும் உணவு (3) ஒரு சமூகம் அல்லது நிறுவனத்தின் உறுப்பினர் (1) கவனிப்பு (2) குய்டடோர்ஸ் (5) சுதந்திரமாக வாழ்வது (4) டிமென்ஷியா அபாயத்தைக் குறைத்தல் (1) டிமென்ஷியா வளர்ச்சி (4) டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட ஒரு அன்புக்குரியவரை கவனித்துக்கொள்வது (24) டிமென்ஷியாவுடன் நன்றாக வாழ்வது (4) டிமென்ஷியாவைப் புரிந்துகொள்ளுதல் (9) தனிப்பட்ட கதைகள் (1) திட்டங்கள் மற்றும் சேவைகள் (2) திரைப்படத்தில் டிமென்ஷியா (0) தொடர்பு மற்றும் தொடர்பு (2) நடத்தை மாற்றங்களுக்கு பதிலளித்தல் (9) நபர்-மைய பராமரிப்பு (2) நோயறிதலை ஏற்றுக்கொள்வது (2) நோயறிதல் மற்றும் மதிப்பீடு (5) பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு (2) பராமரிப்பு நிபுணர் (8) பராமரிப்பைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் (3) பொதுப் போக்குவரத்து (1) மனிதநேயம். (0) மருந்துகளின் மேலாண்மை (1) மிதமான மறதி நோய் (2) லேசான மறதி நோய் (2) வழி கண்டறிதல் (2) வாதாடுதல் (3) 初期失智症 (2)
Skip to content