Playback speed:
பூல் நடவடிக்கை நிலை (PAL) அளவீட்டுக் கருவி4 என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களை ஆதரிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். மருத்துவர் ஜாக்கி பூல் (Jackie Pool) அவர்களால் உருவாக்கப்பட்ட பூல் நடவடிக்கை நிலை (PAL) கருவி என்பது ஒவ்வொரு நபரின் அறிவாற்றல் மற்றும் செயல்பாட்டு திறன்களுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளைத் வடிவமைப்பதில் கவனம் செலுத்துகிறது, இவை அர்த்தமுள்ள ஈடுபாட்டை வளர்க்கிறது.
இந்தக் கட்டுரை பூல் நடவடிக்கை நிலை கருவியின் நன்மைகள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு இதை எவ்வாறு முறைசாரா முறையில் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி விவாதிக்கிறது.
- Health Promotion Board. (n.d.). Let’s talk about Vascular Dementia. HealthHub. https://www.healthhub.sg/programmes/mindsg/vascular-dementia
- Chiew, H. J. (2021, July 5). Young-onset dementia: Improving outcomes with early recognition at Primary Care. SingHealth. https://www.singhealth.com.sg/news/defining-med/Young-Onset-Dementia
- Ng, Z. X., Yang, W. R. E., Seet, E., Koh, K. M., Teo, K. J., Low, S. W., Chou, N., Yeo, T. T., & Venketasubramanian, N. (2015). Cerebellar strokes: A clinical outcome review of 79 cases. Singapore Medical Journal, 56(03), 145–149. https://doi.org/10.11622/smedj.2014195
- Ioannides K, Tadi P, Naqvi IA. Cerebellar Infarct. [Updated 2022 May 8]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2023 Jan-. Available from: https://www.ncbi.nlm.nih.gov/books/NBK470416/
- Huang, J., Qiu, Z., Zhou, P., Li, J., Chen, Y., Huang, R., Li, C., Ouyang, X., Feng, H., Xu, H., Liu, D., Dai, Z., Zhu, J., Liu, X., Chen, H., & Jiang, Y. (2019). Topographic location of unisolated pontine infarction. BMC Neurology, 19(1), 1-6. https://doi.org/10.1186/s12883-019-1411-6
பூல் நடவடிக்கை நிலை அளவீட்டுக் கருவி (PAL) என்றால் என்ன?
PAL எனப்படும் பூல் நடவடிக்கை நிலை கருவி என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கான ஒரு சான்று அடிப்படையிலான கருவியாகும். இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு நடவடிக்கைகளைத் தனிப்பயனாக்கும் வகையில் 1999 ஆம் ஆண்டு மருத்துவர் ஜாக்கி பூல் அவர்களால் உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூரில் சமூகப் பராமரிப்புத் துறை முழுவதும் பூல் நடவடிக்கை நிலை (PAL) அளவீட்டுக் கருவி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது1, முதுமைக்கால மறதி நோய்க்கான பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தாதிமை இல்லங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சமூக பராமரிப்பு வழங்குநர்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் நல்வாழ்வையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திட, அவர்களுக்கு ஏற்றபடி நடவடிக்கைகளை வடிவமைப்பதற்கு இது உதவுகிறது, ஆனால் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் தங்கள் அன்புக்குரியவர்களைப் பராமரிக்கும் தனிநபர்கள் இந்நோய்நிலையுடன் வாழும் தங்கள் அன்பிற்குரியவரின் அன்றாட வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்குக்கான நடவடிக்கைகளை அளவிடவும் இதைப் பயன்படுத்தலாம்.
பூல் நடவடிக்கை நிலை (PAL) எப்படி பயன்படுத்தப்படுகிறது?
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் செயல்பாட்டுத் திறன்களை மதிப்பிடுவதன் மூலமும், அதற்கேற்ப அர்த்தமுள்ள நடவடிக்கைகளை வடிவமைப்பதன் மூலமும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தொழில்சார் சிகிச்சையாளர்கள் (OTகள்) பெரும்பாலும் பூல் நடவடிக்கை நிலை (PAL) அளவீட்டுக் கருவியைப் பயன்படுத்துகின்றனர்.
பூல் நடவடிக்கை நிலை (PAL) அளவீட்டுக் கருவியை ஒருவர் நடைமுறையில் எப்படி பயன்படுத்தலாம் என்பதை பின்வருபவை விளக்குகின்றன:
உதவிக்குறிப்புகள்
ஒருவர் பல் துலக்கியை எடுத்து சொல்லாமலேயே பல் துலக்கத் தொடங்குகிறாரா அல்லது பல் துலக்க தொடங்குவதற்கு அவருக்கு உதவி தேவையா என்பதை ஒருவர் கவனிக்கலாம்.
2. பூல் நடவடிக்கை நிலை மட்டத்தைத் தீர்மானித்தல்
பூல் நடவடிக்கை நிலையில் நான்கு நிலைகள் உள்ளன. உங்கள் அன்புக்குரியவருக்கான சிறந்த நடவடிக்கையை வடிவமைத்திட, அவர்கள் எந்த நிலையின் கீழ் உள்ளார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
நிலை
திட்டமிடும் நிலை
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் பண்புநலன்கள்
பழக்கமான பணிகளை சுயாதீனமாக திட்டமிட்டு, மேற்கொள்ள முடியும்.
உதாரணங்கள் (உடை அணிதல்)
அலமாரியிலிருந்து சொந்தமாக ஆடைகளைத் தேர்ந்தெடுத்து என்ன அணிய வேண்டும் என்று திட்டமிடுதல்; சரியான முறையில் உடை அணிதல்.
பராமரிப்பாளர் பாத்திரம்
குறைவான வழிகாட்டுதலுடன் சுயாதீனத்தை ஊக்குவித்தல்.
ஆய்வு நிலை
எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி, அதைச் செய்துப் பார்த்து கற்றுக்கொள்ள முடியும்.
என்ன அணிய வேண்டும் என்று திட்டமிட உதவி தேவைப்படுதல், ஆனால் உடைகளையும் அவற்றை எப்படி அணிய வேண்டும் என்பதையும் அறிந்திருத்தல்.
நடைமுறை ரீதியில், படிப்படியான அறிவுறுத்தல்களைப் பயன்படுத்துதல்.
உணர்வு நிலை
புலன் ரீதியான தூண்டுதல்களுக்கு (அதாவது இசைக்கு) முக்கியமாக பதிலளிக்க முடியும்
உடை அணிவது குறித்து திட்டமிடுவதற்கும், ஒழுங்காக அணிவதற்கும் உதவி தேவைப்படுதல், ஆனால் யாராவது ஒவ்வொரு அடியையும் வழிநடத்தினால் சிறுசிறு பணிகளைச் செய்ய முடியும்.
தொட்டுணரக்கூடிய, கேட்கக்கூடிய அல்லது காட்சி ரீதியான உள்ளீட்டை வழங்குதல்.
பிரதிபலிப்பு நிலை
பிரதிபலிக்க முடியும், பெரும்பாலும் அவை தன்னிச்சையான எதிர்வினைகளாக (அதாவது மசாஜ்) இருக்கும்
உடை அணிய திட்டமிடுவதற்கும், ஒழுங்காக அணிவதற்கும், உடை அணிவதை நிறைவு செய்வதற்கும் பிறரை முற்றிலும் சார்ந்திருப்பது; ஆனால் உதவுவதற்கு கைகால்களை நகர்த்தக்கூடும்.
சௌகரியம், நிலைப்பாடு மற்றும் வழக்கத்தில் கவனம் செலுத்துதல்.
பூல் நடவடிக்கை நிலை (PAL) எப்படி பயன்படுத்தப்படுகிறது?
3. நடவடிக்கை திட்டமிடல் மற்றும் தரமிடல்
நபரின் பூல் நடவடிக்கை நிலை (PAL) மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒருவர்:
- நடவடிக்கைகள் அந்த நபர் ரசிக்கும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் (சமையல், ஓவியம் வரைதல் போன்றவை).
- அறிவாற்றல் திறனுக்குப் பொருந்தும் வகையில் நடவடிக்கைகளை வடிவமைத்திட அல்லது மாற்றியமைத்திட வேண்டும்.
- நடவடிக்கைகள் பாதுகாப்பானதாகவும், ஈடுபடுத்தக்கூடியதாகவும், செய்யக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பணியின் சிக்கலான தன்மை, சூழல் மற்றும் வழிமுறைகளை சரிசெய்திட வேண்டும்.
உதவிக்குறிப்புகள்
எடுத்துக்காட்டு ஒன்று:
ஆய்வு நிலையில் உள்ள ஒருவருக்கு, ஒரு பழக்கமான பேக்கிங் பணியை அறிமுகப்படுத்துங்கள், ஆனால் அதை செயல்விளக்கத்துடன் ஒவ்வொரு படிநிலைகளாகப் பிரிக்கவும்.
உதவிக்குறிப்புகள்
எடுத்துக்காட்டு இரண்டு:
ஆய்வு நிலையில் உள்ள ஒருவருக்கு, தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு, கையுதவி வழங்கலாம்.
உதவிக்குறிப்புகள்
எடுத்துக்காட்டு மூன்று:
திட்டமிடும் நிலையில் உள்ள ஒருவருக்கு, எளிய சமையல் பணியைத் திட்டமிடுவதிலிருந்து செயல்படுத்துவது வரையில் முழு பங்கேற்பை அளித்திடுமாறு ஊக்குவிக்கலாம்.
உதாரணத்திற்கு, வறுத்த சோறு சமைக்க சொல்வது, தேவைப்படும்போது வாய்மொழியாக அறிவுறுத்தலை வழங்கலாம்.
4.மதிப்பாய்வு மற்றும் மறுமதிப்பீடு
பின்வருபவற்றைத் தொடர்ந்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது:
- செயல்பாடு அல்லது அறிவாற்றல் நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது;
- தேவைக்கேற்ப PAL மட்டத்தை சரிசெய்து செயல்பாட்டுத் திட்டங்களைத் திருத்துவது; மற்றும்
- பூல் நடவடிக்கை நிலையை ஒரு முறை மதிப்பீடாக மட்டுமல்லாமல், மாறும் கருவியாகப் பயன்படுத்துதல்.
உதவிக்குறிப்புகள்
ஆய்வு நிலையில் இருந்த ஒருவரால் இப்போது வழிகாட்டுதலுடன் ஓவியம் வரையும் பணியைச் செய்ய முடியாதபோது, அந்த நபரை அமைப்புடைய மேற்பரப்புகளில் தனது விரல்களை தேய்த்துப் பார்க்குமாறு சொல்லுங்கள்.
இந்த செயல்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களைப் புரிந்துகொள்வதற்கான வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. தங்கள் அன்புக்குரியவரின் திறன்களை நன்கு புரிந்துகொள்ள, OT மற்றும் பராமரிப்பு ஊழியர்களிடம் பேசலாம்.
முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களுக்கான PAL உடைய நன்மைகள்
பூல் நடவடிக்கை நிலையானது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் வாழ்க்கைத் தரத்திலும் (QoL) அர்த்தமுள்ள ஈடுபாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இடங்களில் பின்வரும் பகுதிகளை ஆராய்ச்சி ஆதரிகிறது.
நபரை மையப்படுத்திய பராமரிப்பை ஊக்குவிக்குறது
பூல் நடவடிக்கை நிலை கருவி, அந்த நபர் தனது வரம்புகளைத் தாண்டி என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துகிறது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் தற்போதைய அறிவாற்றல் மற்றும் செயல்பாட்டு திறன்களுக்குப் பொருத்தும் வகையில் நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதனால் தாங்கள் மதிக்கப்படுவதாகவும், புரிந்து கொள்ளப்படுவதாகவும், கருத்தில் கொள்ளப்படுவதாகவும் உணர்வார்கள்.2 இது அவர்களின் சுயமதிப்பையும் உணர்ச்சி ரீதியான நல்வாழ்வையும் மேம்படுத்தும்.
அறிவாற்றல் சார்ந்த ஈடுபாட்டை ஆதரிக்கிறது
பொருத்தமான PAL மட்டத்தில் வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகள், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரை உணர்ச்சி வசப்பட வைக்காமல் அவர்களின் மூளையைத் தூண்ட உதவுகின்றன. கட்டமைக்கப்பட்ட, பழக்கமான அல்லது உணர்வு மிகுந்த பணிகளில் பங்கேற்பதை ஊக்குவிப்பதன் மூலம், முடிந்தவரை நீண்ட காலத்திற்கு அறிவாற்றல் செயல்பாட்டைப் பராமரிக்க இது உதவுகிறது.
உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான நல்வாழ்வை மேம்படுத்துகிறது
பணிகள் மிகவும் கடினமாக இருக்கும்போது, முதுமைக்கால மறதி நோயுள்ள நபர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகலாம், கிளர்ச்சி அடையலாம் அல்லது உதவியற்றவர்களாக உணரலாம்6பூல் நடவடிக்கை நிலை ஆனது திறனுக்கு ஏற்ப பணிகள் பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்கிறது, இது நடத்தை ரீதியான சவால்களின் அபாயத்தைக் குறைத்து, ஒத்துழைப்பை அதிகரிக்கிறது. இது சுமூகமான பராமரிப்புத் தொடர்புகளுக்கு வழிவகுக்கும்.
சுயாதீனம் மற்றும் செயல்பாட்டுத் திறன்களைப் பராமரிக்கிறது
பூல் நடவடிக்கை நிலை ஆனது அன்றாட வாழ்வுக்குத் தேவையான திறன்களைப் பாதுகாக்கிறது. இது தனிநபர்கள் தங்களால் இயன்றதை சரியான அளவிலான ஆதரவுடன் செய்ய அதிகாரம் அளிக்கிறது. இது சாத்தியமான இடங்களில் தனிநபர் பராமரிப்பு, நடமாட்டம் மற்றும் ஓய்வு நேரங்களில் சுயாதீனத்தை ஊக்குவிக்கிறது.
துண்டுகளை மடிப்பது அல்லது பொருட்களை வரிசைப்படுத்துவது போன்ற எளிய பணிகள் கூட முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களின் நோக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வலுப்படுத்தும்.
அர்த்தமுள்ள நடவடிக்கை மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது
பூல் நடவடிக்கை நிலை கட்டமைப்பின் கீழுள்ள நடவடிக்கைகள் உணர்ச்சி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அர்த்தமுள்ளதாக உள்ளன, இது தனிநபர் விருப்பத்தேர்வுகள் மற்றும் வரலாற்றுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.3 முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் பூல் நடவடிக்கை நிலையானது தொழில் ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது. தனிநபர்கள் பெரும்பாலும் மேம்பட்ட மனநிலை, சிறந்த தூக்கம் மற்றும் நிலையான வழக்கங்களை வெளிப்படுத்துகின்றனர்.
எடுத்துக்காட்டுக்கு: முன்பு ஆசிரியராக இருந்த முதுமைக்கால மறதி நோயுடைய ஒருவர், மற்ற நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது, ஆவணங்களைத் தரம் பிரிப்பது அல்லது சொல் தேடல்களில் பரிச்சயம் உடையவராகவும் ஈடுபாட்டுடனும் இருப்பதைக் காணலாம்.
பாதுகாப்பை மேம்படுத்துகிறது
அறிவுத்திறன் நிலை (எ.கா. மோசமான சிக்கல் தீர்க்கும் திறன்கள், மனக்கிளர்ச்சி) அடிப்படையில் சிகிச்சையாளர்களும் பராமரிப்பாளர்களும் அபாயங்களை அடையாளம் காண பூல் நடவடிக்கை நிலை உதவுகிறது. காயங்களைத் தடுக்க நடவடிக்கைகளையும் சூழல்களையும் மாற்றியமைக்கலாம் (பணிகளை எளிதாக்குவது, ஆபத்துகளை நீக்குவது).
தொடர்புகளையும் தகவல் பரிமாற்றத்தையும் ஆதரிக்கிறது
பூல் நடவடிக்கை நிலை செயல்படும் விதத்தைப் புரிந்துகொள்ளும் பராமரிப்பாளர்கள், பொருத்தமான அறிவுறுத்தல்களைப் பயன்படுத்துவதன் மூலமும் எதிர்பார்ப்புகளை நிர்வகிப்பதன் மூலமும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் மிகவும் திறம்பட தொடர்பு கொள்ள முடியும். இது தவறான தகவல் பரிமாற்றத்தைக் குறைத்து, பராமரிப்பாளருக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் இடையிலான உணர்ச்சிப் பிணைப்பைப் பாதுகாக்கிறது.
கூடுதலாக, பூல் நடவடிக்கை நிலை கருவியானது, காது கேளாமை அல்லது பார்வைக் குறைபாட்டுடன் முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.5 இது பராமரிப்பாளர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களின் உணர்ச்சி இழப்புக்கு ஏற்ப நடவடிக்கைகளை மாற்றியமைக்க உதவுகிறது, இதனால் அவர்களின் அன்புக்குரியவர்கள் ஈடுபாட்டுடன் இருப்பதை எளிதாக்குகிறது.
முன்னேற்றம் அல்லது சரிவைக் கண்காணிக்கிறது
திறன்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க பூல் நடவடிக்கை நிலை கருவியைக் காலப்போக்கில் மீண்டும் பயன்படுத்திடலாம். இது பராமரிப்புத் திட்டங்கள் மற்றும் சிகிச்சைகளை சரியான நேரத்தில் சரிசெய்திட உதவுகிறது.
முடிவுரை
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பூல் நடவடிக்கை நிலை (PAL) கருவி பயனுள்ளதாக இருக்கும். ஒரு நபரின் நடவடிக்கை அளவைப் புரிந்துகொள்வதற்கான கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தி, பூல் நடவடிக்கை நிலை கருவியானது பராமரிப்பாளர்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய பராமரிப்பை வடிவமைத்திட உதவுகிறது. இது முதுமைக்கால மறதி நோயுள்ளவர்கள் தாங்கள் சிறப்பாக வாழுகிறோம் என்ற உணர்வைப் பெறுவதற்குப் பங்களிக்கிறது.
- Agency for Integrated Care (2016). Dementia Care Competency Framework 2016. Agency for Integrated Care. https://www.aic.sg/wp-content/uploads/2023/06/Dementia-Competency-Framework-Assessment-Criteria.pdf
- Groenendaal, M., Smaling, H. J. A., Achterberg, W. P., & Caljouw, M. A. A. (2022). Maintaining meaningful activities for persons with dementia during transitions of care: A systematic review. Geriatric Nursing, 44, 176–183. https://doi.org/10.1016/j.gerinurse.2022.01.017
- Han, A., Radel, J., McDowd, J. M., & Sabata, D. (2015). Perspectives of people with dementia about meaningful activities: A synthesis. American Journal of Alzheimer’s Disease & Other Dementias®, 31(2), 115–123. https://doi.org/10.1177/1533317515598857
- Pool, J. (2012). The Pool Activity Level (PAL) Instrument. Jessica Kingsley publishers, London. https://www.dailysparkle.co.uk/wp-content/uploads/2022/04/PAL-Guide-for-Activity-Provision.pdf
- Wenborn, J., Challis, D., Pool, J., Burgess, J., Elliott, N., & Orrell, M. (2008). Assessing the validity and reliability of the Pool Activity Level (PAL) Checklist for use with older people with dementia. Aging & mental health, 12(2), 202–211. https://doi.org/10.1080/13607860801984375




