Playback speed:
ஒரு நபர் இயற்கை எய்திய பிறகு அவரது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு உயில் எழுதி வைக்க திட்டமிடுவது ஒருவர் தனது பணத்தையும், தனக்குச் சொந்தமான சொத்துக்களையும் வைத்து என்ன செய்ய விரும்புகிறார் என்பது குறித்த தெளிவான வழிமுறைகள் உயிலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இது அவரது மரபும் எதிர்கால சந்ததியினரும் அதற்கேற்ப பேணப்படுவதை உறுதி செய்யும்.
உயில் குறித்த விளக்கம்
ஒரு உயில் எழுதி வைக்கும் நபரின் மரணத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வரும். இது ஒரு நபரின் உடைமைகளை விவரிக்கும் ஒரு சட்ட ஆவணமாகும், இதில் அவரது பணம், சேமிப்பு மற்றும் சொத்துக்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறும். மேலும், அவரது உடைமைகள் எவ்வாறு பயனாளிகளிடையே பகிர்ந்தளிக்கப்படும் என்பதும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
உயில்களானது நபருக்கு நபர் வேறுபடும். இது ஒரு நபரின் உடைமைகளைப் பொறுத்து, எளிமையான ஒரு பக்க ஆவணமாக இருப்பது முதல் பல பக்கங்கள் கொண்ட ஆவணமாகவும் இருக்கலாம். இதில் இளம் பிள்ளைகளின் பராமரிப்பு, சிறப்புத் தேவையுள்ள பிள்ளைகள், தொண்டு நிறுவனங்களுக்கான நன்கொடைகள் மற்றும் பலவற்றைப் பற்றிய வழிமுறைகளும் இடம்பெற்றிருக்கலாம்.
ஓர் உயிலானது பொதுவாக பின்வருவனவற்றைப் பட்டியலிடும்:
• ஒரு நபரின் அனைத்து சொத்துக்களின் பட்டியல்
• ஒரு நபரின் அனைத்து பொறுப்புகள் மற்றும் கடன்களின் பட்டியல், அத்துடன் பயனாளிகளுக்கு சொத்துக்களைப் பகிர்ந்தளிப்பதற்கு முன்பு, அந்த நபர் தனது கடன்களை எவ்வாறு செலுத்த விரும்புகிறார் என்பதன் விளக்கம்
• பயனாளிகள் மற்றும் காப்பாளர்கள், அத்துடன் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய அளவு
• அந்த நபரின் விருப்பத்தை நிறைவேற்றும் செயல்படுத்துநர்கள் பயனாளியும் செயல்படுத்துநராக இருக்கலாம்.
• ஆலோசகர்கள் (நபரின் வழக்கறிஞர்கள் மற்றும் கணக்காளர்கள் போன்றவர்கள்)
• ரத்துச் சட்டப் பிரிவு: இது அந்த நபர் இதற்கு முன்பு திட்டமிட்ட ஏதேனும் உயிலை ரத்து செய்வதற்கானது.
• எஞ்சியவை குறித்த சட்டப் பிரிவு: இது அந்த நபர் தனது மீதமுள்ள உடைமையை எவ்வாறு பகிர்ந்தளிக்க விரும்புகிறார் என்பதைத் தெரிவிக்க உதவுகிறது. உதாரணமாக, ஓர் உயிலின் பயனாளியானவர் உயில் எழுதி வைக்கும் நபர் இறப்பதற்கு முன்பு இறந்துவிட்டால், உத்தேசிக்கப்பட்ட உடைமைகள் இந்த மீதமுள்ள உடைமையின் பகுதியாகிவிடும்.
ஏன் உயில் எழுதி வைக்க வேண்டும்?
ஒருவர் ஒரு நபர் உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சட்ட அமைச்சின் கீழ் உள்ள ஓர் அலுவலகமான பொது அறங்காவலர், சட்டத்தின் அடிப்படையில் அவரது சொத்தை யார் பெறுவார்கள் என்பதை முடிவு செய்வார். இதன் பொருள், ஒருவர் ஒரு நபர் தனது பணத்தையோ அல்லது உடமைகளையோ யாரிடம் ஒப்படைக்க விரும்புகிறாரோ அவருக்கு அது கிடைக்காமல் போகலாம். உங்களுக்குத் தெரிந்த அல்லது நீங்கள் கவனித்துக் கொள்ளும் ஒருவர் உயில் எழுதி வைக்கவில்லை என்றால், உயிலைத் திட்டமிடுவதன் மூலம் அந்த நபரின் பணம் அவர் விரும்புபவரிடம் செல்வதை உறுதி செய்ய உதவுங்கள்.
அவர் நியமிக்கக்கூடியவர்:
• ஒரு செயல்படுத்துநர், தனது விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யக்கூடிய நம்பகமான ஒருவர்; அல்லது
• தனது குழந்தைகளுக்காக விட்டுச் செல்லும் சொத்து அல்லது பணத்தைப் பராமரிக்க ஒரு காப்பாளர்.
உங்களுக்கும் மற்றும்/அல்லது நீங்கள் பராமரிக்கும் ஒருவருக்கும் சட்ட ஆலோசனை தேவைப்பட்டால், நீங்கள் ஓர் இலவச சட்ட நிலையத்திற்குச் செல்வது குறித்து பரிசீலிக்க விரும்பலாம். இலவச சட்ட நிலையங்களில் தொண்டூழிய வழக்கறிஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்கள் இவ்விஷயத்தில் வல்லுநர்களாக இருக்க மாட்டார்கள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். நீங்கள் நிலையத்துக்குச் செல்வதற்கு முன், அவர்கள் உங்களுக்கும் மற்றும்/அல்லது நீங்கள் கவனித்துக் கொள்ளும் நபருக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த நிலையத்தை அழைக்க வேண்டும். சில சமூக மன்றங்களில் இலவச சட்ட நிலைய சேவைகள் வழங்கப்படுகின்றன.
கூடுதல் வளஆதாரங்கள்
எனது மரபுடைமை
இது ஒரு சிங்கப்பூர் அரசாங்க இணையதளமாகும், இதில் வாழ்க்கை இறுதித் திட்டமிடல் மற்றும் உயில் எழுதுவது பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.
மனிசென்ஸ் (MoneySense)
இது ஒரு சிங்கப்பூர் அரசாங்க இணையதளமாகும், இதில் உடைமைத் திட்டமிடல் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.