Playback speed:
முதுமைக்கால மறதி நோய் இருப்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம், மேலும் அன்புக்குரியவர் தனக்கு நோய் இருப்பதை மறுப்பதற்குப் பின்னால் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது முக்கியம், அப்போதுதான் அவருக்கு உதவும் விதமான உத்திகளைக் கொண்டு வர முடியும்.
முதுமைக்கால மறதி நோய் இருப்பதை அறிவது வேதனையளிக்கும் விதமாக இருக்கலாம் – நோய் கண்டறியப்பட்டிருக்கும் நபர் சோகம் முதல் விரக்தி வரை பலவிதமான எதிர்மறை உணர்ச்சிகளுக்கு உள்ளாகலாம் அல்லது அதனை முற்றிலும் மறுக்கலாம், இவை அனைத்தும் இயல்பே.
தனக்கு இருக்கும் நோயைத் தொடர்ந்து மறுப்பது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், உதாரணத்திற்கு உங்கள் அன்புக்குரியவர் எதிர்காலத்தில் உதவியை ஏற்க மறுக்கும்போது அல்லது வாகனம் ஓட்டுவது அவருக்குப் பாதுகாப்பற்றதாக மாறும் நிலையிலும், அவர் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களைத் தொடரும்போது சிக்கல்கள். நினைவுத்திறன் அல்லது அறிவாற்றல் சார்ந்த விஷயங்களில் அவருக்குக் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதற்கு சில சமயங்களில் பயம் காரணமாக இருக்கலாம் அல்லது தனக்குப் பிரச்சனை இருப்பதைப் புரிந்து கொள்ள அவருக்கு இருக்கும் உண்மையான இயலாமை காரணமாக இருக்கலாம். உங்கள் அன்புக்குரியவர் தனக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பதை மறுப்பதற்கான காரணத்தைக் கண்டறிவது முக்கியம், அப்போதுதான் அந்தப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
அனோசோக்னோசியா (குறைபாட்டை அறியாமை)
சில சந்தர்ப்பங்களில், உங்கள் அன்புக்குரியவர் தனது நிலையை ஒப்புக்கொள்ள சிரமப்படுவது, அவருக்கு இருக்கும் அறிகுறிகளைத் தீவிரமாக மறுப்பது காரணமாக இருக்காது, மாறாக இது தனக்கு ஒரு குறைபாடு இருப்பதைப் புரிந்து கொள்ள இயலாத காரணத்தினால் ஏற்படுகிறது. அனோசாக்னோசியா (குறைபாட்டை அறியாமை) என்று அழைக்கப்படும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் ஒரு நபர் தனக்கு எந்தச் பிரச்சனையும் இல்லை என்று உண்மையாகவே நம்புவார். ஒரு பராமரிப்பு வல்லுநராக இதைச் சமாளிப்பது வெறுப்பாக இருக்கலாம், ஆனால் இது உங்கள் அன்புக்குரியவரின் தவறோ வேறு யாருடைய தவறோ அல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதும், எதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதும் முக்கியம்.
அனோசாக்னோசியா (குறைபாட்டை அறியாமை) இருப்பதினால், உங்கள் அன்புக்குரியவர் எந்த ஆதாரத்தைக் காட்டினாலும் அவருக்கு இருக்கும் நோயை ஏற்றுக்கொள்ள மாட்டார். அதற்குப் பதிலாக, இதைக் கையாளுவதற்கு ஏதுவான பரிமாரிப்பு உத்திகளை நீங்கள் தயார் செய்ய வேண்டியிருக்கும். பாதுகாப்புப் பிரச்சினை எதுவும் இல்லாத வரை, அவரை வீட்டு வேலையில் அல்லது அவரது பகல் நேர செயல்பாட்டு நிலையத்தில் உள்ள விஷயங்களில் உதவி செய்ய அனுமதிப்பது சரியே.
உங்கள் அன்புக்குரியவருக்கு அனோசாக்னோசியா (குறைபாட்டை அறியாமை) இருப்பதாக நீங்கள் நம்பினால், உங்கள் அன்புக்குரியவரைப் பார்த்து வரும் உளவியலாளரை அணுகி, அவர் முறையான நோயறிதலைப் பெறுவதை உறுதி செய்வது முக்கியம். உங்கள் அன்புக்குரியவரின் மருத்துவ வல்லுநர்கள், இதுபோன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து சிறப்பாக ஆலோசனை வழங்குவார்கள்.
பயம்
முதுமைக்கால மறதி நோய் இருப்பதை மறுப்பதற்கு பெரும்பாலும் பயம் காரணமாக இருக்கலாம் – இந்த நிலையை ஏற்றுக்கொள்வதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்றும், அதுவே உண்மையென்றும் அவர்களுக்குத் தோன்றும்.
ஒரு நபர் தனக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பதை அறிந்த உடனேயே, அதைப் பற்றியும், அவர்கள் சூழ்நிலையை எவ்வாறு அணுக விரும்புகிறார்கள் அல்லது தொடர விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள். அவர் தனது அன்புக்குரியவர்களிடம் பேச சிறிது நேரம் கொடுங்கள். இருப்பினும், அவர் தனக்கு இருக்கும் நிலையை தொடர்ந்து மறுத்துவந்தால், அமைதி காத்து, அவருக்குத் தொடர்ந்து ஆதரவளியுங்கள்.
நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் ஒன்று, டிமென்ஷியா சிங்கப்பூர் (DSG) அல்லது பிற அமைப்புகள் நடத்தி வரும் முதுமைக்கால மறதி நோய் ஆதரவு குழுக்கள் அல்லது சிகிச்சைகள் பற்றி மேலும் அறிந்துகொள்வதும், முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் அவற்றில் கலந்து கொள்ள அவர்களை ஊக்குவிப்பதும் ஆகும். நீங்களும் உங்கள் அன்புக்குரியவரும் இந்த அமர்வுகளில் மற்ற பராமரிப்பாளர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுடன் கலந்து கொண்டால், அத்தகைய நபர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள், எப்படி மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் காண முடியும். இது அவருக்கு இருக்கும் பயங்களைத் தணிக்கவும், அவருக்கு இருக்கும் மருத்துவ நிலையை ஏற்றுக்கொள்ளவும் உதவும்.
அமைதியுடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வது மிகவும் முக்கியம். முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள், குறிப்பாக ஆரம்ப கட்டங்களில் உள்ளவர்கள், உங்கள் ஆதரவுடன் முழுமையான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். டிமென்ஷியா சிங்கப்பூரின் நம்பிக்கைக்கான குரல்கள் திட்டத்தின் முதுமைக்கால மறதி நோய் ஆதரவாளர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோயை உடைய கேட் ஸ்வாஃபர் மற்றும் ஜார்ஜ் சோங் போன்ற ஊக்கமளிக்கும் நபர்களின் கதைகளைப் பார்வையிடுங்கள், அவர்கள் முதுமைக்கால மறதி நோய் இருப்பதால் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை என்றும், மாறாக, அது ஒரு புதிய சாகசம் என்றும் பறைச்சாற்றும் நபர்களாகும்.
முதுமைக்கால மறதி நோயறிதல் தொடர்பாக உதவி பெற ஒருவரை நான் எவ்வாறு ஊக்குவிப்பது?
Source: Dementia-Friendly Singapore