எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
4 நிமிட வாசிப்பு

இசை, பண்ணிசை, தாளம், இசைவு, வேகம், இயக்கவியல், வடிவம், அமைப்பு மற்றும் சொற்கள் அல்லது பாடல் வரிகளின் சிக்கலான கலவையே இசை. இந்தக் கூறுகளை ஒன்றாகச் சேர்க்கும்போது, அவை ​​கேட்பவரின் உணர்ச்சிகள், நடத்தை மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இசையை முறையாகப் பயன்படுத்தும்போது, ​​முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட இது ஒரு பயனுள்ள மற்றும் திறன்மிக்க கருவியாக இருக்கும்.

இசையானது இந்தத் தனித்துவமான குணங்களுடன், மனநிலை, அறிவாற்றல் செயல்பாடு, நினைவாற்றல் மற்றும் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கான பயனுள்ள சிகிச்சையாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக இசை சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. இசை சிகிச்சையானது, முதுமைக்கால மறதி நோயுள்ள நபர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களுக்கும் இடையில் தனிப்பட்ட முறையிலும் குழு அமைப்பிலும் சமூகமயமாக்கல் மற்றும் தொடர்புக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்தக் கட்டுரையில், முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களின் அறிவாற்றல் மற்றும் நடத்தை நோய்க்குறிகளை மேம்படுத்துவதற்கு மருந்தியல் அல்லாத சிகிச்சையாக இசை சிகிச்சையைப் பயன்படுத்துவது, இசை சிகிச்சையின் சாத்தியமான விளைவுகள் மற்றும் நன்மைகள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தைச் சிறப்பாக்கிட அல்லது மேம்படுத்திட, சிங்கப்பூரில் இசை சிகிச்சை பயன்படுத்தப்படும் விதம் ஆகியவற்றை நாம் ஆராய்வோம்.

முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களுக்கான இசை சிகிச்சையின் நன்மைகள்

மருந்தியல் சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது, ​​இசை அடிப்படையிலான சிகிச்சைகள் போன்ற மருந்தியல் அல்லாத அணுகுமுறைகள், முதுமைக்கால மறதி நோய் அல்லது BPSDகளின் நடத்தை ரீதியான உளவியல் நோய்க்குறிகளை நிர்வகிப்பதற்கான அணுகுமுறையாக, குறைந்த ஆபத்துள்ள, எளிதில் அணுகக்கூடிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதாகக் கருதப்படுகின்றன.

சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில், பல ஆண்டுகளாக முதுமைக்கால மறதி நோயின் நோய்க்குறிகளை நிர்வகிப்பதில் இசை சிகிச்சை உலகளவில் பிரபலமடைந்துள்ளது. இசைப் பயிற்சி, அறிவாற்றல் குறைபாடுகளின் விளைவுகளைத் தணிக்கவும், இசையை நினைவில் கொள்ளும் நபர்களின் திறனை அதிகரிக்கவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்சைமர் நோயுடன் (AD) வாழ்பவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இசை சிகிச்சை அமர்வுகளில் பங்கேற்ற பிறகு, ஆல்சைமர் நோய் உள்ளவர்கள் வார்த்தையை சரளமாகப் பேசுவது, வாழ்க்கை வரலாற்றை நினைவில் கொள்வது மற்றும் பாடல் வரிகளை நினைவில் கொள்வது ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பல ஆய்வுகள் ஆதரிக்கும் வகையில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு இசை சிகிச்சை அளிக்கக்கூடிய சில நன்மைகள் இதோ இங்கே:

 

முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களுக்கான இசை சிகிச்சையின் சாத்தியமான நன்மைகள்

1.

மனநிலையை மேம்படுத்தி, கிளர்ச்சியைக் குறைக்கிறது

இசையானது நேர்மறை உணர்ச்சிகளையும் நினைவுகளையும் தூண்டும். இது மனச்சோர்வின் நோய்க்குறிகள் மற்றும் முதுமைக்கால மறதி நோயின் பொதுவான நடத்தை மற்றும் உளவியல் அறிகுறிகளான மனக்கவலை மற்றும் கிளர்ச்சி போன்ற பிற எதிர்மறை உணர்ச்சிகளைப் போக்க உதவும்.

2.

அறிவுத்திறன் சார்ந்த செயல்பாட்டை மேம்படுத்துகிறது

இசையானது, வாய்மொழியாக சரளமாகப் பேசுவது, பாடல் வரிகள்/நினைவுகளை நினைவுக்கு கொண்டுவருவது மற்றும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் (ADLகள்) உதவுவது போன்ற சில அறிவாற்றல் மற்றும் நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.

3.

தகவல்தொடர்புகளை மேம்படுத்துகிறது

முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் வகையில் சொற்கள் அல்லாத தகவல் பரிமாற்ற கருவியாக இசை செயல்படும்.

4.

சமூகமயமாக்கல் மற்றும் மக்களுடனான தொடர்பை மேம்படுத்துகிறது

குழுவாக மேற்கொள்ளும் இசை நடவடிக்கைகள் தனிமையையும் பிரிவையும் குறைக்கும்.

5.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது

அனைத்து நன்மைகளும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வழிவகுக்கும். மனக்கவலை போன்ற உணர்ச்சி ரீதியான நோய்க்குறிகளுடன் போராடுபவர்களுக்கு இது மிகவும் நன்மைப் பயக்கும்.

இசை சிகிச்சைக்கு ஆதரவாக இருக்கும் சான்றுகள்

மருத்துவ அமைப்பில் நபருக்கேற்றபடியான இசைப் பட்டியலைப் பயன்படுத்துவது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் மக்களின் (தடுக்கப்படாத) நடத்தை நோய்க்குறிகளை எதிர்ப்பதில் பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளதுசமீபத்திய ஆண்டுகளில் நேர்மறையான முடிவுகள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

BPSDகளை நிர்வகிப்பதில் அல்லது முதுமைக்கால மறதி நோய், குறிப்பாக மிதமாக இருக்கும் கட்டத்தில் நிலவும் கிளர்ச்சி, ஆக்ரோஷமான மனச்சோர்வு, மனக்கவலை மற்றும் அக்கறையின்மை உட்பட முதுமைக்கால மறதி நோயின் நடத்தை மற்றும் உளவியல் ரீதியான நோய்க்குறிகளை நிர்வகிப்பதில் இசை சிகிச்சையின் செயல்திறனை ஆதரிக்கும் சில ஆதார அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் இங்கே உள்ளன:

  • Zhang et al. (2017) தற்போக்கான கட்டுப்பாட்டு மருத்துவச் சோதனைகளின் (RCTகள்) பிறழ் பகுப்பாய்வு (2017), இசை சிகிச்சையானது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் சீர்குலைக்கும் நடத்தைகளைக் கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறிந்தது.
  • by Raglio et. al. (2010), நபருக்கேற்றபடியான இசை சிகிச்சையானது கட்டுப்பாட்டுக் குழுவுடன் ஒப்பிடும்போது சீர்குலைக்கும் நடத்தைகளை 30 சதவீதம் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது
  • 1,097க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட 22 மருத்துவச் சோதனைகளை பகுப்பாய்வு செய்த ஒரு Cochrane review (2018), இசை அடிப்படையிலான சிகிச்சையானது மனச்சோர்வு நோய்க்குறிகளில் குறிப்பிடத்தக்க குறைப்பிற்கு வழிவகுத்தது.

“இசை சிகிச்சை என்பது உணர்ச்சி ரீதியான நல்வாழ்வு, அறிவாற்றல் செயல்பாடு மற்றும் சமூக தொடர்பு ஆகியவற்றை ஆதரிக்கும் நபரை மையமாகக் கொண்ட, மருந்தியல் அல்லாத அணுகுமுறை ஆகும். இது பராமரிப்பாளர் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது, உணர்ச்சி ரீதியான பந்தங்களை வலுப்படுத்துகிறது மற்றும் பகிரக்கூடிய மகிழ்ச்சியான அனுபவங்களை வழங்குகிறது. இசை சிகிச்சையின் கட்டமைக்கப்பட்ட ஆனால் இலகுவான வடிவமானது, இதனை முதுமைக்கால மறதி நோய் மிதமான கட்டங்களில் உள்ளவர்கள் உட்பட, முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் அணுகக்கூடியதாகவும் அவர்களுக்கு இதனை மிகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது. சிங்கப்பூரின் சுகாதார அமைச்சின் முதுமைக்கால மறதி நோய்க்கான மருத்துவ வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக BPSDக்கான பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையாகவும் இது பட்டியலிடப்பட்டுள்ளது.

இசையானது உணர்ச்சிகளைத் தூண்டும் சக்தி படைத்தது, மேலும் இது முதுமைக்கால மறதி நோயுள்ளவர்கள் தங்கள் வாழ்க்கைக் கதைகளை நினைவு கூர்ந்து, அவற்றைப் பராமரிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், பராமரிப்பாளர்கள் தங்கள் கதைகளை முதுமைக்கால மறதி நோயுடையோரிடம் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. மேலும், இசை சிகிச்சை நடவடிக்கைகளை நினைவாற்றல் சிகிச்சை மற்றும் கலை சிகிச்சை போன்ற பிற சிகிச்சை முறைகளில் எளிதாகவும் திறம்படவும் இணைக்கலாம்.

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் வாழ்க்கையில் நீங்கள் இணைக்கக்கூடிய சில நடைமுறை ரீதியிலான, அர்த்தமுள்ள மற்றும் ஆதாரம் சார்ந்த நடவடிக்கைகள் (மற்றும் அவற்றின் நன்மைகள்) இதோ இங்கே:

  • உங்கள் அன்புக்குரியவரின் இளமை/சகாப்தம் அல்லது கலாச்சாரத்திலிருந்து அவருக்குப் பிடித்த பாடல்கள் இடம்பெறும் அவருக்கேற்ற பாடல் பட்டியலை தயார் செய்யுங்கள். இது இனிமையான நினைவுகளைத் தூண்டி உரையாடலை எளிதாக்கும்.
  • உங்கள் அன்புக்குரியவரை இசையின் தாளம் மற்றும் வேகத்திற்கு ஏற்ப ஆடவோ அல்லது கைதட்டவோ ஊக்குவியுங்கள். இது அசைவுகள் மற்றும் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தலாம்.
  • உங்கள் அன்புக்குரியவர் அவரது உணர்ச்சிகள், மனநிலைகளை சமாளிக்கவும், மனக்கவலை மற்றும் வலியிலிருந்து விடுபடவும் உதவும் இனிமையான மற்றும் பழக்கமான இசையை வாசியுங்கள்.
  • முதுமைக்கால மறதி நோயுடைய உங்கள் அன்புக்குரியவரை, அவருக்குப் பிடித்தமான பாடல்களைப் பாட ஊக்குவியுங்கள். இது காலப்போக்கில் பேச்சு உச்சரிப்பு மற்றும் பேச்சின் சரளத்தை மேம்படுத்தும்.
  • உணர்ச்சிகளை சுயமாக வெளிப்படுத்தும் திறனை ஊக்குவிக்கவும் படைப்பாற்றலை மேம்படுத்தவும் இசையை ஓவியம் போன்ற காட்சி ரீதியான கலையுடன் இணைத்திடுங்கள்.

முடிவுரை

இசை சிகிச்சையின் செயல்திறன் மற்றும் நன்மைகளை உறுதிப்படுத்தும் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருவதால், இசை சிகிச்சையை முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பில் ஒருங்கிணைப்பதானது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் தார்மீக மதிப்பை கௌரவிப்பது மட்டுமல்லாமல், அவர்களை தங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைக்க எளிதில் அணுகக்கூடிய மற்றும் அர்த்தமுள்ள வழியாக திகழுகிறது. பழக்கமான மெல்லிசைகளின் இதமான தாளத்தில், பலர் மகிழ்ச்சி, ஆறுதல் மற்றும் மிக முக்கியமாக, தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடும் அடையாளம் மற்றும் கண்ணியப் பண்புகளில் புதுப்பிக்கப்பட்ட உணர்வைக் கொண்டிருப்பதாகக் காண்கிறார்கள்.

  1. Bleibel, M., El Cheikh, A., Sadier, N.S. et al. The effect of music therapy on cognitive functions in patients with Alzheimer’s disease: a systematic review of randomized controlled trials. Alz Res Therapy 15, 65 (2023). https://doi.org/10.1186/s13195-023-01214-9
  2. Shirsat A, Jha RK, Verma P. Music Therapy in the Treatment of Dementia: A Review Article. Cureus. 2023 Mar 31;15(3):e36954. doi: 10.7759/cureus.36954. PMID: 37139292; PMCID: PMC10151115. 
  3. Zhang, Y., Cai, J., An, L., Hui, F., Ren, T., Ma, H., Zhao, Q. (2017). Does music therapy enhance behavioural and cognitive function in elderly dementia patients? A systematic review and meta-analysis. Ageing Research Reviews, 35, 1–11. DOI: 10.1016/j.arr.2016.12.003 
  4. Van der Steen, J. T., Smaling, H. J. A., van der Wouden, J. C., Bruinsma, M. S., Scholten, R. J. P. M., & Vink, A. C. (2018). Music-based therapeutic interventions for people with dementia. Cochrane Database of Systematic Reviews, 2018(7), CD003477. DOI: 10.1002/14651858.CD003477.pub4 
  5. Raglio, A., Bellelli, G., Traficante, D., Gianotti, M., Ubezio, M. C., Gentile, S., Villani, D., & Trabucchi, M. (2010). Efficacy of music therapy treatment based on cycles of sessions: A randomised controlled trial. Ageing & Mental Health, 14(8), 900–904.  

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

ஆம் இல்லை
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

பின்வரும் பொருள் டிமென்ஷியா பற்றிய கடி-அளவிலான தகவல்களைக் கொண்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்ய அல்லது அச்சிட, படத்தை கிளிக் செய்யுங்கள். "மொழியைத் தேர்ந்தெடுக்கவும்" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலமும் நீங்கள் பொருளின் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.

Skip to content