எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்

முதுமைக்கால மறதி நோயுடையோர் பராமரிப்பு குறித்த கண்ணோட்டத்தைப் பெறுவதற்கான ஒரு வழி, முன் வரிசையில் இருப்பவர்கள் சொல்வதை நேரடியாகக் கேட்பதாகும். முதியோர் பராமரிப்புப் பிரிவில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களைப் பராமரிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இளம் தாதியரான ஆல்தியா சொல்வதைக் கேட்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆல்தியா தனது பயணத்தைப் பற்றிய ஆழ்ந்த கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகிறார், இவரது பயணத்தில் பச்சாதாபமும் இரக்கமும் தனது அன்றாடப் பொறுப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தாதிமையின் ஆரம்ப நாட்கள்

ஆல்தியாவின் தாதியர் பயணம் இளம் வயதிலேயே தொடங்கியது. முதியோர் பராமரிப்புப் பிரிவில் அவரது முதல் பணிநேரம், முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுடன் பணிபுரிவதன் நுணுக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், அவர் தாதிமை சேவைக்கான பாடப்புத்தக அறிவையும் தத்துவார்த்த அணுகுமுறைகளையும் நம்பியிருந்தார், ஆனால் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களைப் பராமரிப்பதற்கு நெறிமுறைகளை விட அதிகம் தேவை என்பதை விரைவில் உணர்ந்தார், அதற்கு ஆழ்ந்த இதய உணர்வும், புரிதலும், அர்ப்பணிப்பும் தேவை என்பதை உணர்ந்தார்.

"என்னுடைய நோயாளிகள் என்னை வேறொருவராக குழப்பிக் கொள்ளும் அல்லது தங்கள் சுற்றுப்புறத்தை முற்றிலுமாக மறந்துவிடும் தருணங்கள் இருந்தன... ஒரு தாதியராக, நீங்கள் அவர்களின் பராமரிப்பை சமாளிக்க வேண்டும், மேலும் நீங்கள் உடல் ரீதியாக சோர்வாக இருந்தாலும் கூட, பரிவைக் காட்ட வேண்டும்."

அந்த ஆரம்ப நாட்களில், ஆல்தியா தான் தயாராக இல்லாத சூழ்நிலைகளை எதிர்கொண்டாள். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள், வீட்டில் இல்லாத, பெயர்கள் அல்லது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள முடியாத குடும்ப உறுப்பினர்கள் பற்றி விசாரிப்பார்கள். முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களின் உணர்ச்சிகளான குழப்பம், விரக்தி மற்றும் கோபம் நிறைந்த தருணங்களை எதிர்கொள்வது தினசரி சவாலாக இருந்தது. இந்தத் தொடர்ச்சியான உணர்ச்சிப் பாதிப்பு இறுதியில் உணர்ச்சி ரீதியான சோர்வுக்கு வழிவகுத்தது, இது சில நேரங்களில் அவரை எளிதில் கிளர்ச்சியடையச் செய்தது. இருப்பினும், ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான கதை இருப்பதை மனதில் கொண்டு ஆல்தியா முன்னோக்கிச் சென்றார்.

கடினமான நேரங்களில் வலிமையை வழங்குவதற்கு அந்த நோக்கத்தைக் கண்டறிவது முக்கியமாக இருந்தது. அவள் சலிப்பாக உணரும்போது அவர் தன்னை ஊக்குவித்துக் கொள்வதற்காக, தன் பராமரிப்பில் இருந்தவர்களுடன் தான் பேசியதை அடிக்கடி நினைவு கூர்வார்.

நாட்கள் செல்ல, ஒரு தாதியராகவும், ஒரு மனிதராகவும் முதுமைக்கால மறதி நோயின் சிக்கல்களை அவர் புரிந்துகொண்டார். அவர் தன் பராமரிப்பில் இருந்தவர்களை மருத்துவ நிலை உள்ளவர்களாக மட்டும் கருதாமல், வளமான வரலாறுகளும் உணர்ச்சி ரீதியான தேவைகளும் கொண்டவர்களாகக் கருதினார். இந்தக் கண்ணோட்ட மாற்றம், அவரது பராமரிப்புப் பணியில் மிகவும் பொறுமையுடனும் இரக்கத்துடனும் நடந்துக் கொள்ளும் நபராக மாற்றியது. அவருடைய பரிவுமிக்க குணம் அவர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதையும், அவருடைய வேலையை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியதையும் அவர் கண்டார்.

பரிவையும் உணர்ச்சிப்பூர்வமான சோர்வையும் சமநிலையோடு கையாளுதல்

ஆல்தியா தனது தாதியர் பாத்திரத்தைத் தொடர்ந்ததால், சில சமயங்களில் தனது தொழில்முறை பொறுப்புகளையும் தனது உணர்ச்சி ரீதியான நல்வாழ்வையும் சமநிலையுடன் கையாளுவதில் சிரமப்பட்டார். தாதிமையின் தேவைகளுக்குத் தான் தயாராக இருப்பதாக நினைத்த போதிலும், ஒவ்வொரு பணி நேரத்திற்குப் பிறகும் தான் சோர்வடைந்ததை அவர் நினைவு கூர்ந்தார். குறிப்பாக, பல்வேறு தேவைகளைக் கொண்டவர்களை ஒரே நேரத்தில் சமாளிக்கும்போது, விரக்தி மற்றும் அயர்ச்சி ஏற்படுவதால், ​​அது உணர்ச்சிப்பூர்வமான சோர்வாக வெளிப்படத் தொடங்கியது.

அவரது பணிப்பொறுப்புகள் கூடி, அவருக்கென்ற நேரம் இல்லாதபோது இந்த உணர்ச்சி ரீதியான பாதிப்பு தீவிரமடைந்தது. வாரத்திற்கு 7 முதல் 10 பேர்களைக் கையாண்டதையும், தனக்குக் கீழ் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட பராமரிப்பை வழங்கியதையும் ஆல்தியா நினைவு கூர்ந்தார். சில சமயங்களில் வேலைகளைச் செய்யும்போது அவர் தான் தனித்து விடப்பட்டதாக உணர்வார். உணர்வு ரீதியான ஆதரவை வழங்கும் அதே நேரத்தில், பல பேர்களை சமாளிப்பதினால் ஏற்படும் மன அழுத்தத்தினால் அவர் வேலையை மிகவும் கடினமானதாக உணர ஆரம்பித்தார்.

"நேர்மறையான அணுகுமுறையைப் பேணுவது என்பது சவால்களை சமாளிப்பதற்கான புதுமையான வழிகளுக்கு வித்திடும்"

ஆல்தியாவும் அவரது நோயாளிகளில் பலரும் இதேபோன்ற கடினமான மன நிலைகளில் இருப்பதை அடையாளம் கண்டார், இது அவரது பரிவு காட்டும் உணர்வை அதிகரிக்கச் செய்தது. தனது பராமரிப்பில் உள்ளவர்களுடன் அவர் எவ்வளவு அதிகமாகப் பழகுகிறாரோ, அந்தளவுக்கு, அவர்களின் நடத்தை முறைகள் மற்றும் பகுத்தறிவு பற்றிய புரிதல் தெளிவாகும் என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய பந்தம் ஏற்பட்ட பிறகு அவர்களைப் பராமரிப்பதும் அவருக்கு எளிதாக இருந்தது. ஆனால் ஆல்தியா அவர்களை எவ்வளவு கவனித்துக்கொண்டாரோ, அதே அளவு அவருடைய சொந்த மன ஆரோக்கியத்தையும் உணர்ச்சி ரீதியான ஆரோக்கியத்தையும் புறக்கணிக்க கூடாது என்பதை அவர் அறிந்திருந்தார். உணர்ச்சிப்பூர்வமான சோர்வு எனும் குழியில் விழாமல் இருக்க, நோயாளிகளிடத்தில் அவர் காட்டும் பரிவையும் சுய பராமரிப்பையும் சமநிலையுடன் கையாளுவது மிக முக்கியமாக இருந்தது.

சுய பராமரிப்பிலும் கனிவுடன் நடந்துக் கொள்வதிலும் வலிமையைக் காணுதல்

ஆல்தியா தனது சேவைப் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ​​அதைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்தார். தன்னைத் தானே முன்னுரிமைப்படுத்துவது அவசியம் என்பதை அவர் விரைவில் கற்றுக்கொண்டார். வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் எல்லைகளை நிறுவுவது அவர் கையாண்ட முறைகளில் ஒன்றாக இருந்தது. உணர்ச்சிப்பூர்வமான சோர்வைத் தவிர்ப்பதற்கு இது முக்கியமானதாக மாறியது.

"உங்களுக்கும் உங்கள் பராமரிப்பில் உள்ளவர்களுக்கும் சிறந்தவராக இருக்க எல்லைகளை நிர்ணயிப்பது முக்கியம்"

எவ்வளவு நேரம் கூடுதலாக வேலை செய்யலாம் என்பதற்கான நேர வரம்புகளை நிர்ணயிப்பது போன்ற சிறிய நடவடிக்கைகளை அவர் எடுக்கத் தொடங்கினார். அவரது பணிநேரம் முடிந்ததும் எந்தவொரு உணர்ச்சி ரீதியான மன அழுத்தத்தையும் விட்டுவிட தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். 

தனது சொந்த பொழுதுபோக்குகளுக்கும், சிறிய ஓய்வு நேரங்களுக்கும் நேரம் ஒதுக்கியது ஆல்தியாவை மீண்டும் உற்சாகப்படுத்த அனுமதித்தது. இந்தத் தருணங்கள் உடல் ரீதியான ஓய்வாக மட்டுமல்லாமல் அவருடைய உணர்ச்சி ரீதியான நல்வாழ்வை வளர்ப்பது பற்றியதாகவும் இருந்தது. அவர் தனது குடும்பத்தினருடன் 5 கற்கள் அல்லது குச்சிகளை எடுப்பது போன்ற பழைய காலத்து விளையாட்டுகளையும் விளையாடுவார், அவற்றை அவர் முதியோர் சேவைப் பிரிவில் இருந்த காலத்தில் கற்றுக்கொண்டார். அவருடைய உணர்ச்சிப்பூர்வமான கோப்பை அவருடைய சொந்த பொழுதுபோக்குகளால் மட்டுமல்லாமல், அவருடைய பராமரிப்பில் உள்ளவர்களின் அன்பாலும் நிரம்பியிருப்பதை அவர் கண்டார். இந்த சிறிய ஆனால் அர்த்தமுள்ள சடங்குகள் அவர் சமநிலையை மீண்டும் பெற உதவியது

கதை: திருமதி லீ - இணைப்பின் தருணம்

ஆல்தியாவின் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்று, ஆல்சைமர் நோயின் நடுத்தர கட்டத்தில் இருந்த ஒரு நோயாளி திருமதி லீ என்ற பெண்ணுடன் ஏற்பட்டது. திருமதி லீ பெரும்பாலும் ஆல்தியாவை தனது பேத்தி அல்லது வேறொரு தாதியர் போன்ற மற்றவர்களுடன் குழப்பிக் கொள்வார். ஒரு நாள் காலை, திருமதி லீ மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார், நீண்ட காலத்திற்கு முன்பு இறந்துபோன தனது சகோதரியைக் கேட்டார், அவர் தன்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல அங்கே வந்திருப்பதாக நினைத்தார். லீ அவர்களைத் திருத்த முயற்சிப்பது அவரை மேலும் கிளர்ச்சியடையச் செய்யும் என்பதை அறிந்த ஆல்தியா, திருமதி லீயை தன் அருகில் தாதியரின் மேசையின் அருகே காத்திருக்க செய்ய முடிவு செய்தார். ஆல்தியா அவரை மெதுவாக சமாதானப்படுத்தி, அவருடைய சகோதரி வரும் வரை தன்னுடன் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

திருமதி லீ மெதுவாக அமைதியடையத் தொடங்கினார், சிறிது நேரத்திற்குப் பிறகு, லீ தனது காலை உணவு மற்றும் மருந்துகளுக்கு ஆல்தியா உதவ அனுமதித்தார். திருமதி லீ ஆல்தியாவை அணுகி அவரது கையைப் பிடித்துக் கொண்டார். அவர் அதிகம் எதுவும் பேசவில்லை, ஆனால் அவர் முகத்தில் தெரிந்த அமைதியான, இதயப்பூர்வமான புன்னகை நிறைய விஷயங்களைப் பேசியது. அந்த நேரத்தில், தனது சகோதரி தன்னைப் பார்க்க வரமாட்டார் என்பதை அறிந்திருந்தும், திருமதி லீ தான் அவரோடு இருப்பதில் ஆறுதல் அடைந்தார் என்பதை ஆல்தியா அறிந்தார்.

“அது ஒரு சிறிய தருணமே, ஆனால் அந்த நொடியில், சில நேரங்களில், மக்களுக்குத் தேவையானது அவர்கள் கூட இருப்பதும் பொறுமையும் மட்டுமே என்பதை உணர்ந்தேன். அவர்களைச் சரிசெய்யாமல், அவர்களைத் திருத்தாமல் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.” 

இந்தத் தருணத்தில் ஆல்தியா, தனது வேலைக்குப் பின்னால் உள்ள அர்த்தத்தை மீண்டும் கண்டுபிடித்தார், அது அவருக்கு கூடுதல் உந்துதலைக் கொடுத்தது.

மாற்றத்தை ஏற்படுத்தும் தாதியர்கள்

இவை அனைத்திற்கும் மத்தியில், ஆல்தியாவின் தாதிமை சேவையின் மீதான ஆர்வம் அசைக்க முடியாததாகவே இருந்தது. கடினமான நாட்களில் கூட பொறுமையையும் பரிவையும் கடைப்பிடியுங்கள் என்பதே மற்ற பராமரிப்பாளர்களுக்கு அவர் அளிக்கும் எளிமையான, அதே சமயம் ஆழமான அறிவுரையாக உள்ளது.

குறிப்பாக முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களுக்கு, இரக்கமும் புரிதலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்ளுமாறு ஆல்தியா பராமரிப்பாளர்களுக்கு வலியுறுத்துகிறார். அவரது அனுபவமானது, முதுமைக்கால மறதி நோயுடையோர் பராமரிப்பில் இருக்கும் தனிப்பட்ட சவால்களையும் அவற்றுக்குத் தேவைப்படும் உணர்ச்சி ரீதியான மீள்திறனையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பராமரிப்பாளர்கள் பரிவுடன் நடந்து கொள்வது மற்றும் தம்மை தாமே பராமரித்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை அவரது பயணம் நமக்கு நினைவூட்டுகிறது.

பிரிவுகள்
குறிச்சொற்கள்
#DementiaFriendlySG Movement (2) #DESPITEDEMENTIA (4) Art (1) Behaviour (2) BPSD (1) Dementia Care Mapping (1) Emily Ong (4) Intellectual Disability (1) Up Close (1) VOICES FOR HOPE (3) Youth Community Leaders (1) அன்றாட வாழ்வின் செயல்பாடுகள் (1) அறிகுறிகள் (1) அறிவிப்பு (1) இளைஞர் மற்றும் டிமென்ஷியா (2) ஒரு சமூகம் அல்லது நிறுவனத்தின் உறுப்பினர் (1) கவனிப்பு (2) குய்டடோர்ஸ் (5) டிமென்ஷியா அபாயத்தைக் குறைத்தல் (1) டிமென்ஷியா உள்ளடக்கிய சூழல் (2) டிமென்ஷியா வளர்ச்சி (4) டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட ஒரு அன்புக்குரியவரை கவனித்துக்கொள்வது (24) டிமென்ஷியாவுடன் என் வாழ்க்கை (0) டிமென்ஷியாவுடன் நன்றாக வாழ்வது (4) டிமென்ஷியாவுடன் வாழும் நபர் (5) டிமென்ஷியாவைப் புரிந்துகொள்ளுதல் (9) தனிப்பட்ட கதைகள் (1) திட்டங்கள் மற்றும் சேவைகள் (2) திரைப்படத்தில் டிமென்ஷியா (0) தொடர்பு மற்றும் தொடர்பு (2) நடத்தை மாற்றங்களுக்கு பதிலளித்தல் (9) நபர்-மைய பராமரிப்பு (2) நிதி மற்றும் சட்ட ஆதரவு (5) நோயறிதலை ஏற்றுக்கொள்வது (2) நோயறிதல் மற்றும் மதிப்பீடு (5) பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு (2) பராமரிப்பாளர் சுய கவனிப்பு (3) பராமரிப்பு நிபுணர் (8) பராமரிப்பைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் (3) மனிதநேயம். (0) மருந்துகளின் மேலாண்மை (1) மிதமான மறதி நோய் (2) லேசான மறதி நோய் (2) வாதாடுதல் (3) 初期失智症 (2)
Skip to content