முதுமைக்கால மறதி நோய் என்பது நினைவுத்திறன் மற்றும் அறிவுத்திறன் (அறிவாற்றல் திறன்கள்), ஒருமுனைப்படுத்தும் திறன் அல்லது ஆளுமைத்திறன் ஆகியவை மோசமடைவதால், வகைப்படுத்தப்படும் பல்வேறு விதமான அறிகுறிகளை விவரிக்கும் சொல் ஆகும். இந்த மாற்றங்கள் மூளையில் நடக்கும் புறநிலை மற்றும் இரசாயன மாற்றங்களின் வெவ்வேறு வடிவங்களால் ஏற்படுகின்றன, மேலும் ஏற்படும் அறிகுறிகள் மூளையில் சேதமடைந்த பகுதியைப் பொறுத்திருக்கும்.
பல்வேறு வகையான முதுமைக்கால மறதி நோய் உள்ளன. முதுமைக்கால மறதி நோயின் மிகவும் பொதுவான வகை ஆல்சைமர் நோய், இதைத் தொடர்ந்து முதுமைக்கால மறதி நோயின் பிற பொதுவான வகைகள், இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய், புரதத்தின் அசாதாரண திரட்டல்கள் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் மற்றும் மூளையின் முன்புற மற்றும் பக்கப் பகுதிகளைப் பாதிக்கும் முதுமைக்கால மறதி நோய் ஆகும்.
முதுமைக்கால மறதி நோய் என்பது மூப்படைதலின் இயல்பான பகுதி அல்ல. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே இந்த நோய்நிலை மிகவும் பொதுவானது என்றாலும், இளம் வயதினருக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதற்கும் சாத்தியமுள்ளது. இதுஇளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் என்று அழைக்கப்படுகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள், வேலை செய்வது, அன்றாடச் செயல்பாடுகளைச் செய்வது, அல்லது சமூகத் தொடர்பில் ஈடுபடுவது போன்ற அவர்களின் அன்றாடச் செயல்பாட்டைப் பாதிக்கும் அளவிற்கு விஷயங்களைச் செய்யும் திறனை அல்லது பணிகளைச் செய்யும் திறனை படிப்டியாக இழக்கின்றனர்.1 இவர்கள் படிப்படியாக பின்வரும் விஷயங்கள் அவர்களுக்குச் சவாலானதாக மாறுவதைக் காணலாம்:
- சிந்திப்பது மற்றும் பகுத்தறிவது
- சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் முடிவுகளை எடுப்பது
- புதிய தகவல்களை நினைவுகூறுவது அல்லது சமீபத்தில் நிகழ்ந்தவற்றை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது
- புதிய தகவல்களையும் திறன்களையும் கற்பது
- பரிச்சயமான முகங்களையும் பொருட்களையும் அடையாளம் காண்பது
- உரையாடுவதற்கு சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது
உலகளாவிய அளவில் முதுமைக்கால மறதி நோய் ஏற்படுத்தும் தாக்கம்
அல்சைமர் நோய் சர்வதேசத்தின்படி(ADI),2 ஒவ்வொரு 3 வினாடிக்கும் உலகில் உள்ள யாரோ ஒருவருக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படுகிறது. 2020 ஆம் ஆண்டில், உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்றும், இது 2030 இல் 82 மில்லியனாகவும், 2050 இல் 152 மில்லியனாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் எண்ணிக்கை குறிப்பாக வளரும் நாடுகளில் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களில் 60% பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் வாழ்கின்றனர். 2050 ஆம் ஆண்டில் இது 71% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் மூப்படைவது என்பது உலகளாவிய அளவில் நடக்கும் ஒரு செயல்முறையாகும், இது கடந்த நூற்றாண்டில் மேம்படுத்தப்பட்ட சுகாதாரப் பராமரிப்பின் வெற்றிகளைக் காட்டுகிறது. பலர் இப்போது நீண்ட கால மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர், எனவே உலக மக்கள்தொகையில் வயது முதிர்ந்த பெரியவர்கள் அதிக விகிதத்தைக் கொண்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகின் மிகவும் மூப்படைந்த மக்கள்தொகை கொண்ட நாடான ஜப்பானை, 2050க்கு முன்னர் சீனா மற்றும் தென் கொரியா விஞ்சிவிடும்.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 9.9 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது புதிதாக கண்டுபிடிக்கப்படுகிறது, இது ஒவ்வொரு 3.2 வினாடிகளுக்கும் இந்நோய் இருப்பது புதிதாக கண்டுபிடிக்கப்படுவதைக் குறிக்கிறது.
2019 ஆம் ஆண்டில், முதுமைக்கால மறதி நோய் காரணமாக உலகளவிலான பொருளாதாரத்தில் $ 1.3 டிரில்லியன் அமெரிக்கன் டாலர்கள் செலவு செய்யப்படுகிறது, இதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் போன்ற முறைசாரா பராமரிப்பு பங்காளர்கள் வழங்கும் பராமரிப்பு, இந்தச் செலவுகளில் தோராயமாக 50% பங்களிக்கிறது. 2030ல் 2.8 டிரில்லியன்.2 2030 வாக்கில் முதுமைக்கால மறதி நோய்க்காக நாம் செலவிடும் தொகை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகமாகி 2.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.2
சிங்கப்பூரில் முதுமைக்கால மறதி நோய்
மனநலக் கழகத்தின் (IMH) தலைமையிலான சிங்கப்பூர் மூத்தோர்களின் நல்வாழ்வு (WiSE) நாடு தழுவி நடத்திய ஆய்வின்படி, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 10 இல் 1 நபருக்கு முதுமைக்கால மறதி நோய் உள்ளது, இதில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2 இல் 1 நபரை இந்த நோய்நிலை பாதித்துள்ளது. அதாவது, இது 2018 இல் தோராயமாக 82,000 பேருக்கு இந்நோய் இருந்ததையும், அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 100,000 பேருக்கும் அதிகமாகும் என்பதையும் குறிக்கிறது. 2030 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 152,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.4
In contrast, a second WiSE study reveals a positive shift in the prevalence of dementia among seniors aged 60 and above, which has decreased from 10% about a decade ago to 8.8% today, or one in 11 people. Additionally, while the total number of older adults living with dementia has risen from 51,934 in 2013 to 73,918 in 2023 due to population growth, the treatment gap for dementia has significantly narrowed. The percentage of seniors meeting the criteria for dementia who remain undiagnosed and untreated has declined from 70.6% in 2013 to 51.5% now, indicating that more persons living with dementia are being identified and receiving appropriate care.6
In 2017, Singapore was classified as an “aged society”. This means that at least 14% of the population are aged 65 and above. It is set to attain “super-aged” status in 2026. According to the United Nations, a country is super-aged when 21% of its population are aged 65 and older.
In Singapore, an estimated S$2.8 billion was spent in 2015 locally. This staggering amount is forecasted to almost triple by 2030.5
Additional Resources
Dementia Singapore in 60s: Episode 1 – What is Dementia? How prevalent is it?
Source: Dementia Singapore
In the first episode of Dementia Singapore in 60s, CEO Jason Foo shares some eye-opening facts and figures about dementia and breaks down the answers to these questions.
Understanding Dementia
Source: Khoo Teck Puat Hospital
This toolkit features information on the types, stages and symptoms of dementia. It also includes information on the philosophy of person-centred care, which is widely acknowledged as the standard of care for dementia today.
Forget Us Not: Building a Dementia Friendly Community
Source: Lien Foundation, Khoo Teck Puat Hospital, Dementia Singapore
This toolkit features tips and knowledge on how to recognise and help persons living with dementia in the community.
Tell us how we can improve?
- Your guide to understanding dementia. (2019, December 9). HealthHub. Retrieved on 24 March, 2021, from https://www.healthhub.sg/live-healthy/679/yourguidetounderstandingdementia_pdf
- Dementia statistics. (n.d.). Alzheimer’s Disease International. Retrieved 24 March, 2021, from https://www.alzint.org/about/dementia-facts-figures/dementia-statistics/
- Subramaniam, M., Chong, S. A., Vaingankar, J. A., Abdin, E., Chua, B. Y., Chua, H. C., Eng, G. K., Heng, D., Hia, S. B., Huang, W., Jeyagurunathana, A., Kua, J., Lee, S. P., Mahendran, R., Magadi, H. Malladi, S., McCrone, P., Pang, S., Picco, L., . . . Prince, M. (2015). Prevalence of dementia in people aged 60 years and above: Results from the WiSE study. Journal of Alzheimer’s Disease, 45(4), 1127–1138. doi: 10.3233/jad-142769.
- Let’s talk about vascular dementia. (n.d.). HealthHub. Retrieved September 11, 2021, from https://www.healthhub.sg/programmes/74/understanding-dementia/
- Woo, L. L., Thompson, C. L., & Magadi, H. (2017). Monetary cost of family caregiving for people with dementia in Singapore. Archives of gerontology and geriatrics, 71, 59–65. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0167494317302029
- Institute of Mental Health. (2024). Well-being of the Singapore Elderly (WiSE) study findings: Press release. https://www.imh.com.sg/Newsroom/News-Releases/Documents/WISE%202%20Press%20Release_28Aug_IMHFINAL.pdf