Playback speed:
உங்கள் அன்பிற்குரியவரிடம் முதுமைக்கால மறதி நோயுடைய அறிகுறிகளும் அடையாளங்களும் தென்பட்டால், அவர் விரைவில் நோயைக் கண்டறிந்து சிகிச்சைப் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், உங்கள் அன்பிற்குரியவருடன் அவர் அனுபவிக்கும் நினைத்திறன் குறைபாடுகள் மற்றும் குழப்பமாக இருக்கும் தருணங்களைப் பற்றி உரையாடுவது கடினமாக இருக்கலாம். பெரும்பாலும், இந்த அறிகுறிகளை அனுபவிக்கும் ஒருவர் தற்காக்கும் உணர்வு, கவலையுணர்வு அல்லது மறுக்கப்படும் உணர்வுடன் இருக்கக்கூடும்.
இது போன்ற சூழ்நிலையில், உங்கள் அன்பிற்குரியவரை மருத்துவரைச் சந்திக்கும்படி ஊக்குவிக்கலாம். இதற்கிடையில் முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் உங்கள் அன்பிற்குரியவரைப் பராமரிக்க நீங்கள் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்
நோயைக் கண்டறிவதற்குச் சுற்றியுள்ள உரையாடலை மாற்றியமைக்க நீங்கள் எடுக்கக்கூடிய படிநிலைகளையும், உங்களது அன்பிற்குரியவர் முறையான நோயறிதலைப் பெற ஒப்புக்கொள்ளும் வரை நீங்களும் உங்கள் அன்பிற்குரியவரும் உதவிக்காகச் செல்லக்கூடிய, சமூகத்தில் கிடைக்கப்பெறும் சேவைகளையும் இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.
உரையாடலை மாற்றியமைத்திடுங்கள்
உங்கள் அன்பிற்குரியவருடன் மீண்டும் இன்னொரு உரையாடலை மேற்கொள்வதற்கு முன், அவர்களின் கவலைகளையும் அவர் நோயறிதலைப் பெற விரும்பாமல் இருப்பதற்கான காரணங்களையும் புரிந்துகொள்வது அவசியம். இதைப் புரிந்துகொள்வது, உரையாடலில் அவரது உணர்வுகளும் புரிந்துகொள்ளப்படுகிறது என்று அவரை உணர வைப்பதோடு, அவரின் கவலைகளைப் போக்கவும், வல்லுநர் உதவியை நாடுவதே சிறந்த வழி என்பதை உறுதிப்படுத்தவும் உங்களுக்குச் சிறந்த யோசனையை அளிக்கும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் குறித்த பயம்
- எப்பொழுதும் ஊக்கமூட்டும் மொழியைப் பயன்படுத்துங்கள். அவர்களை அச்சுறுத்தும் வகையில் பேரழிவைத் தருமென்ற எண்ணத்தை அல்லது பயத்தை ஏற்படுத்தும் அணுகுமுறையைப் பயன்படுத்துவதை விட, ஊக்கமளிக்கும் விதத்தில் சுகாதாரப் பரிசோதனையின் நன்மைகளை விளக்குங்கள்.
- நீங்கள் நோய்க்கண்டறிதலுக்கான சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் – ஆனால் நீங்களும் இந்த நோய்க்கண்டறியும் பரிசோதனையை அவர்களுடன் சேர்ந்து செய்துக் கொள்வது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். தனியாகப் பரிசோதனை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை இது குறைக்கிறது.
- உங்கள் அன்பிற்குரியவருக்கு பரிச்சியமான மருத்துவ ரிடம் அழைத்துச்செல்வதும் உதவியாக இருக்கும்.
- மாற்றாக, உங்கள் அன்புக்குரியவரிடம் அவர் வழக்கமான பரிசோதனைக்குச் செல்ல வேண்டும் என்பதையும், நீங்கள் ஏற்கனவே அதற்கான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துவிட்டீர்கள் என்பதையும் தெரிவிக்கலாம்
கவலை: தங்களின் சுயாதீனத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுதல்
- உங்கள் அன்பிற்குரியவர், குறிப்பாக அவர் தனியாக வாழ்ந்தால், நோயறிதல் மதிப்பீட்டிற்கு ஒப்புக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு மற்றும் நோயறிதலுடன் தொடர்புடைய சிறப்பியல்புக் கூறு (stigma) குறித்து அவர்கள் அக்கறை கொள்ளலாம்
- அவர்கள் முதுமைக்கால மறதி நோயினால் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பழகிய சுயாதீனம் போன்றவற்றை இழப்பதுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடும்.
- அவர்கள் கவலையுடன் இருக்கலாம் மற்றும் மோசமான சூழ்நிலைகளைப் பற்றி மட்டுமே நினைக்கலாம்.
- இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்கள் அன்பிற்குரியவருக்கு அவரது சுயாதீனத்தை முடிந்தவரை தக்கவைப்பதற்கு, அதற்கான மாற்றங்களைச் சமாளிப்பதற்கான வழிகள் உள்ளன என்பதை அவருக்கு உறுதிப்படுத்துவது முக்கியம்.
- உதாரணத்திற்கு, வாகனம் ஓட்டுவது ஒருவருக்கு சுயாதீனத்தையும் சுதந்திரத்தையும் குறிக்கலாம். நீங்களும் உங்கள் அன்பிற்குரியவரும் உங்கள் மருத்துவருடன் இணைந்து, புதிய விதத்தில் வாகனம் ஓட்டும் ஏற்பாட்டை, அவர்களது மற்றும் சாலையில் உள்ள மற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
- இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
- அது மட்டுமின்றி, சில சூழ்நிலைகளில், உங்கள் அன்பிற்குரியவரால் இன்னமும் சொந்தமாக வாழ முடியும் (அவரது முதுமைக்கால மறதி நோயின் ஆரம்பக் கட்டத்தில்). எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
கவலை: மறதித்தன்மையை மூப்படைதலின் இயல்பான பகுதியாக நினைத்துக் கொள்ளுதல்
- முதுமைக்கால மறதி நோய் பற்றியும் அதன் அறிகுறியைப் பற்றியும் அறியாமல் இருப்பது,நோயைக் கண்டறிவதற்கு வலுவான தடையாக இருப்பதாக முந்தைய ஆய்வுகள் காட்டுகின்றன.1
- குறிப்பாக, அறிவாற்றல் குறைபாடு மற்றும் நினைவுத்திறன் குறைதல் போன்ற முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள், சாதாரண மூப்படைதலின் செயல்முறை என்று ஒரு தனிநபர் கொண்டிருக்கும் நம்பிக்கை, அவர் நோய்க்கண்டறிதலை நாடுவதையும், அந்த நோய் குறித்த கூடுதல் தகவல்களைப் பெறுவதையும் தடுக்கலாம்.2
- முதுமைக்கால மறதி நோயைக் கண்டறியும் பரிசோதனைகளைச் செய்துக் கொள்வது பற்றிய உங்கள் அன்பிற்குரியவரின் கருத்துக்களிலும் முதுமைக்கால மறதி நோய் குறித்த அவர்களின் தவறான எண்ணங்களிலும் தலையிடுவது முக்கியம். ஆரம்பத்துலேயே நோய் இருப்பதைக் கண்டறிவதன் நன்மைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும்.
கவலை: நிதிநிலைகள்
- அன்பிற்குரியவரின் MediSave ஆனது, நாட்பட்ட நோய்களை நிர்வகிப்பது மற்றும் உடல்நலப் பரிசோதனைகளைச் செய்துக் கொள்வது போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநோயாளர் சிகிச்சைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை செலுத்த உதவுமென்று குறிப்பிடுங்கள்.
- நாள்பட்ட நோய் மேலாண்மைத் திட்டத்தின் (CDMP) கீழ் அங்கீகரிக்கப்பட்ட 23 நாள்பட்ட நோய்நிலைகளின் கீழ் முதுமைக்கால மறதி நோய் உள்ளது.
- இன்னும் சொல்லப்போனால், உங்கள் அன்பிற்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருந்தால், நோய்க்கண்டறியும் பரிசோதனைகளைச் செய்வது அதிக நிதி ரீதியாக பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் சில நிதித் திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கான தகுதி அளவுகோல்களில் மற்ற காரணிகளுக்கு மத்தியில், முறைப்படி நோயைக் கண்டறிவதும் பெரும்பாலும் அடங்கும். இதன் நோக்கமானது இந்த உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்காகும்.
- முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் கிடைக்கப்பெறும் அரசாங்க நிதித் திட்டங்களைப் பற்றி இங்கே மேலும் தெரிந்துகொள்ளுங்கள். ere.
உங்கள் அன்பிற்குரியவருடன் இது குறித்து எப்படி சிறப்பாக உரையாடுவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டியை இங்கே படித்திடுங்கள்.
இதற்கிடையில் எனது அன்பிற்குரியவருக்கு நான் எப்படி உதவுவது?
At Home
உங்கள் அன்பிறகுரியவரிடம் முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் தொடர்ந்து தென்பட்டால், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவரை நீங்கள் கவனித்துக்கொள்வது போல் அவரைப் பராமரிக்கலாம்
இதில் தினசரி வழக்கத்தை வடிவமைப்பது அடங்கும், இது அவர்கள் அர்த்தத்துடன் ஈடுபடுவதை உறுதிசெய்வதோடு, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் தேவைகள் மற்றும் யதார்த்தங்கள் குறித்து உங்களுக்குப் பயிற்றுவிக்கும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்தல்: பராமரித்தல் (Providing Care )
வளமை: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்தல்: பராமரித்தல் (Providing Care) என்பது உங்களைப் போன்ற பராமரிப்பாளர்களுக்கு, உங்கள் அன்பிற்குரியவருடன் திறம்பட உரையாடும் விதம், ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாடுகள் மூலம் தினசரி வழக்கத்தை எப்படி வடிவமைப்பது, மற்றும் முதுமைக்கால மறதி நோய் படிப்படியாக அதிகரிக்கையில் அதை நிர்வகிக்கும் விதம் போன்றவை குறித்த உதவிக்குறிப்புகளைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வளமை ஆகும். இது உங்கள் பராமரிப்புப் பயணத்தை சிறப்பாகச் சமாளிக்க உதவுவதோடு, உங்கள் அன்பிற்குரியவர் சிறந்த பராமரிப்பைப் பெறுவதை உறுதிசெய்கிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்தல்: முதுமைக்கால மறதி நோய் பற்றி தெரிந்துகொள்ளுதல் (Knowing Dementia)
வளமை: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்தல்: முதுமைக்கால மறதி நோய் பற்றி தெரிந்துகொள்ளுதல் (Knowing Dementia) என்பது பொது மக்களும் உங்களைப் போன்ற பராமரிப்பாளர்களும் முதுமைக்கால மறதி நோய் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், அறிகுறிகள் மற்றும் அடையாளங்களைப் புரிந்து கொள்ளவும், முதுமைக்கால மறதி நோய் உண்டாகுவதற்கான அபாயங்களைக் குறைப்பது எப்படி, இதன் ஆரம்பக் காலக்கட்டத்தில் உரையாடல்களை எவ்வாறு தொடங்குவது, நோய்க்கண்டறிதலை எப்படி செய்ய வேண்டும் மற்றும் எப்போது மருத்துவரை நாட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் வடிவமைக்கப்பட்ட ஒரு வளமை ஆகும்.
சமூகத்தில்
இந்தப் பொறுப்புகள் மிகவும் மனஉளைச்சலாக இருக்கும் என்பது அறந்ததே. அதிர்ஷ்டவசமாக, சமூகத்தில் உங்களுக்கு உதவக்கூடிய சேவைகள் உள்ளன, குறிப்பாக நீங்கள் பராமரிப்புப் பயணத்தின் தொடக்கத்தில் இருக்கும்போது உதவுவதற்கு பல சேவைகள் உள்ளன:
1. சமூகத்தைச் சென்றடையும் குழுக்கள் (CREST)
(CREST) ஆனது மனநல ஆரோக்கியம் மற்றும் முதுமைக்கால மறதி நோய் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, இவை ஏற்படக்கூடய நபர்களை முன்கூட்டியே அடையாளம் காண ஊக்குவிக்கிறது மற்றும் தனிநபர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்குகிறது.
சமூகத்தைச் சென்றடையும் குழுக்கள் (CREST) உங்களுக்கு எவ்விதம் உதவியாக இருக்கும்?
1. தேவைப்படும்போது தொடர்புடைய சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு சேவைகளுடன் தனிநபர்களை இணைக்கும்.
2. பயனாளிகளின் நல்வாழ்வுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களின் அறிவாற்றல் செயல்பாடுகளைத் தூண்டுவதற்கும் அர்த்தமுள்ள செயல்பாடுகளை நடத்தும்.
உங்களுக்கு அருகிலுள்ள சேவை வழங்குநர்களை இங்கே கண்டறியுங்கள்.
2. துடிப்புடன் மூப்படையும் நிலையங்கள் (AAC)
AAC என்பது சமூகத்தில் அருகில் வசிக்கும் மூத்தோர்களுக்கு (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்) ஆதரவை வழங்கும் சமூக பொழுதுபோக்கு மையமாகும்.
துடிப்புடன் மூப்படையும் நிலையங்கள் (AAC) உங்களுக்கு எவ்விதம் உதவியாக இருக்கும்?
- உங்கள் அன்பிற்குரியவருக்கு குறைந்தபட்சம் 60 வயது இருந்தால், அவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள AACக்கு வருகைத்தந்து வலுவான சமூகத் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளலாம், பொழுதுபோக்கு செயல்பாடுகளில் பங்கேற்கலாம் மற்றும் அவர்கள் விரும்பியபடி சமூகத்திற்குப் பங்களிக்கலாம்.
- கரோக்கி, கலை மற்றும் கைவினை, சமையல் மற்றும் உடற்பயிற்சி செயல்திட்டங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகளை வழங்கவும் ஊக்குவிக்கவும் செய்கிறது.
- மூத்தோர்களின் வீட்டிற்கு வருகைத் தருவது மற்றும் தொலைபேசி அழைப்புகளைச் செய்வதன் மூலம் சமூக ஆதரவை வழங்குகிறது.
- திட்டங்கள், மானியங்கள் மற்றும் ஆதரவு பற்றிய தகவல்களை வழங்குகிறது.
- பொருத்தமான சேவைகளுக்குப் பரிந்துரைச் செய்கிறது.
உங்களுக்கு அருகிலுள்ள AAC ஐ இங்கே கண்டறியுங்கள்.
3. குடும்பச் சேவை நிலையங்கள் (Family Service Centres, FSC)
நோய்க்கண்டறியும் சோதனைகளைச் செய்துக்கொள்ள உங்கள் அன்பிற்குரியவரைத் ஊக்குவிப்பதும் மற்றும் இந்த மாற்றங்களைக் எவ்வாறு கையாள்வது என்பதிலும் உங்களுக்கும் உங்கள் அன்பிற்குரியவருக்கும் மன அழுத்தம் ஏற்படுத்தலாம். இந்த மாற்றங்களால் உங்கள் அன்பிற்குரியவர் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடனான உங்கள் உறவில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், சமூகப் பணியாளர்கள் மற்றும் சேவை வல்லுநர்களை நாடுவது நல்லது. இவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை தணிக்கவும், அவர்களின் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் மூலம் மீட்சி அடையவும் உதவுவார்கள்.
குடும்பச் சேவை நிலையங்கள் (Family Service Centres, FSC) உங்களுக்கு எவ்விதம் உதவியாக இருக்கும்?
- தகவல்கள் மற்றும் பரிந்துரை. (மதிப்பீடு செய்யப்பட்ட தேவைகளின் அடிப்படையில்)
- குடும்பஆய்வு: முழுமையான நிர்வாகம் மற்றும் தனிநபர்/குடும்ப ஆலோசனைகள் வழங்குகிறது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களைப் பராமரிப்பவர்கள் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றனர். உங்கள் எண்ணங்கள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்ள உங்களுக்குத் தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது.
- குழுப்பணி: குடும்பங்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் குடும்பங்களை ஒன்றிணைக்கிறது.
- சமூகப்பணி: குடும்பங்கள் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கவும் ஊக்குவிக்கவும் சமூக வளமைகளைத் நாடலாம்
உங்களுக்கு அருகிலுள்ள குடும்பச் சேவை நிலையங்கள் (Family Service Centres, FSC) ஐ இங்கே கண்டறியுங்கள்.
4. உதவித் தொலைபேசிச் சேவை
உதவித் தொலைபேசிச் சேவை என்பது தகவல் மற்றும் ஆலோசனையைப் பெறுவதற்கான ஒரு விரைவான மற்றும் வசதியான வழியாகும். நீங்கள் துயரத்தில் இருக்கும்போது இது உணர்வுபூர்வமான ஆதரவாகவும் இருக்கும்.
- முதுமைக்கால மறதி நோய் உதவித் தொலைபேசிச் சேவை (டிமென்ஷியா சிங்கப்பூர்)
முதுமைக்கால மறதி நோய்ப் பராமரிப்பு பற்றிய தகவல்கள் மற்றும் சேவை இணைப்புகளை வழங்குகிறது.
தொலைபேசி: 6377 0700 - SAGE ஆலோசனை நிலையம்
வயதானவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்குகிறது, இது ஆரோக்கியத்தின் உளவியல் மற்றும் சமூக ரீதியான அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.
தொலைபேசி: 6354 1191 - பராமரிப்பாளர்கள் கூட்டணி லிமிடெட் (CAL)
முதுமைக்கால மறதி நோய் மற்றும் மனநலப் பிரச்சினைகளுடன் வாழும் நபர்களைப் பராமரிக்கும் பராமரிப்பாளர்களுக்கு உணர்வு சார்ந்த ஆதரவை வழங்குகிறது.
தொலைபேசி: 6460 4400 - ஓ’ ஜாய் (O’ Joy)
வயதானவர்களைக் கவனித்துக்கொள்வதால் மன அழுத்தத்தை அனுபவிக்கும் பராமரிப்பாளர்களுக்கு ஆங்கிலம், மாண்டரின் அல்லது மலாய் ஆலோசனைகளை வழங்குகிறது.
தொலைபேசி: 6749 0190
Tell us how we can improve?
- Fowler, N. R., Frame, A., Perkins, A. J., Gao, S., Watson, D. P., Monahan, P., & Boustani, M. A. (2015). Traits of patients who screen positive for dementia and refuse diagnostic assessment. Alzheimer’s & dementia (Amsterdam, Netherlands), 1(2), 236–241. https://doi.org/10.1016/j.dadm.2015.01.002