எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
5 நிமிட வாசிப்பு

அன்றாட வாழ்க்கையின் சுயாதீன நடவடிக்கைகள் (IADLகள்) பெரும்பாலும் பதின்மவயது பருவத்தில் கற்றுக்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகவும், ஒருவர் முழுமையாக சுயாதீனமாக இருப்பதற்கான நடவடிக்கைகளாகவும் வரையறுக்கப்படுகின்றன. IADLகள் பெரும்பாலும் மிகவும் சிக்கலான பணிகளை உள்ளடக்குகிறது, மேலும் அன்றாட வாழ்வின் அடிப்படை நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது அறிவாற்றல் ரீதியாக அதிக தேவையுடையதாக உள்ளன.

  1. Health Promotion Board. (n.d.). Let’s talk about Vascular Dementia. HealthHub. https://www.healthhub.sg/programmes/mindsg/vascular-dementia  
  2. Chiew, H. J. (2021, July 5). Young-onset dementia: Improving outcomes with early recognition at Primary Care. SingHealth. https://www.singhealth.com.sg/news/defining-med/Young-Onset-Dementia  
  3. Ng, Z. X., Yang, W. R. E., Seet, E., Koh, K. M., Teo, K. J., Low, S. W., Chou, N., Yeo, T. T., & Venketasubramanian, N. (2015). Cerebellar strokes: A clinical outcome review of 79 cases. Singapore Medical Journal, 56(03), 145–149. https://doi.org/10.11622/smedj.2014195  
  4. Ioannides K, Tadi P, Naqvi IA. Cerebellar Infarct. [Updated 2022 May 8]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2023 Jan-. Available from: https://www.ncbi.nlm.nih.gov/books/NBK470416/  
  5. Huang, J., Qiu, Z., Zhou, P., Li, J., Chen, Y., Huang, R., Li, C., Ouyang, X., Feng, H., Xu, H., Liu, D., Dai, Z., Zhu, J., Liu, X., Chen, H., & Jiang, Y. (2019). Topographic location of unisolated pontine infarction. BMC Neurology, 19(1), 1-6. https://doi.org/10.1186/s12883-019-1411-6  

அன்றாட வாழ்க்கையின் சுயாதீன நடவடிக்கைகள் என்றால் என்ன?

அன்றாட வாழ்க்கையின் சுயாதீன நடவடிக்கைகளில் அடங்குவன:

  • சமையல்
  • பொருட்கள் வாங்குதல்
  • தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமான தகவல்பரிமாற்றம்
  • நிதிநிலைகளை நிர்வகித்தல்
  • போக்குவரத்து
  • வீட்டுப் பராமரிப்பு

ஒருவர் IADLகளை மேற்கொள்ளும்போது, ​​அவர்கள் ஒருங்கிணைப்பு, தீர்ப்பு மற்றும் பிற அறிவாற்றல் திறன்களை நம்பியிருக்கிறார்கள், இவை முதுமைக்கால மறதி நோய் அதிகரிக்கையில் மாறத் தொடங்குகின்றன. இதனால், முதுமைக்கால மறதி நோயின் லேசான கட்டத்தில் வாழும் நபர்கள் அன்றாட வாழ்க்கையின் பிற நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்ய முடிந்தாலும் கூட, அவர்கள் அன்றாட வாழ்க்கையின் சுயாதீன நடவடிக்கைகளில் (IADLகள்) போராடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் அன்பிற்குரியவரின் அன்றாட வாழ்க்கையின் சுயாதீன நடவடிக்கைகளைச் செய்யும் திறனில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம், ஏனெனில் இது பெரும்பாலும் உங்கள் அன்பிற்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கான ஆரம்பக் குறிகாட்டியாகும். முதுமைக்கால மறதி நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மற்றும் சிகிச்சை செய்வதோடு முதுமைக்கால மறதி நோய்க்கான முன்கணிப்பு பெரிதும் மேம்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கையின் சுயாதீன நடவடிக்கைகளில் உங்கள் அன்பிற்குரியவர்களை ஆதரவு அளித்தல் ​

உங்கள் அன்பிற்குரியவரின் தேவைகள் மற்றும் நடமாட்ட நிலைக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகளை நீங்கள் மாற்றியமைக்கலாம்.

தொலைபேசியைப் பயன்படுத்துதல்

காலப்போக்கில், உங்கள் அன்பிற்குரியவரின் பார்வையிலும், தொலைபேசி எண்கள் போன்ற தகவல்களுக்கான குறுகிய கால நினைவாற்றலிலும் ஏற்படும் மாற்றங்கள், தொலைபேசியில் மற்றவர்களைத் தொடர்புகொள்வதை அவர்களுக்குக் கடினமாக்கலாம். அவர்கள் திறன்பேசியைப் பயன்படுத்தினால், திரையில் ஏற்படும் காட்சி இரைச்சலைக் குறைக்கவும், எளிதாகப் படிப்பதற்கு உரையை அதிகரிக்கவும் பயன்படுத்தும் வகையில் ONY phone போன்ற செயலிகள் உள்ளன. இவை பெரும்பாலும் ‘மூத்தோருக்கு ஏதுவான அறிமுகங்கள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. நீங்கள் ஒரு தொலைபேசி புத்தகம் அல்லது சுவரொட்டியை உருவாக்குவதையும் பரிசீலிக்கலாம், அதில் தொடர்பு நபர்களின் புகைப்படங்கள் அருகே தொலைபேசி எண்களை பொருத்தமான பெரிய எழுத்துருவில் ஒட்டலாம். ஜிட்டர்பக் அல்லது பட தொலைபேசிகள் போன்று மூத்த குடிமக்களுக்கு ஏற்ற தொலைபேசிகளும் உள்ளன.

Picture Phone Dialer

படம்: படத் தொலைபேசி (HQTelecom இன் பட டயலர் தொலைபேசி பெட்டி)
நிதிநிலைகளை நிர்வகித்தல்

கட்டணங்களை நிர்வகிப்பது எவருக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம். முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களிடத்தில் காணப்படும் அறிவாற்றல் வீழ்ச்சியானது தீர்ப்பு மற்றும் கணக்கீட்டை வித்தியாசமாக பாதிக்கிறது. அன்றாட வாழ்க்கையின் சுயாதீன நடவடிக்கைகளில் (IADLகள்) உங்கள் அன்பிற்குரியவரை ஆதரவளிக்க, உங்கள் அன்பிற்குரியவர் போராடும் நிதியின் குறிப்பிட்ட அம்சங்களை நீங்கள் அடையாளம் காணலாம்.

இது சரியான நேரத்தில் கட்டணங்களை செலுத்த மறப்பதாக இருக்கலாம், அதிகமாக செலவு செய்வதாக இருக்கலாம் அல்லது PIN எண்கள் போன்ற முக்கியமான தகவல்களை மறப்பதாக இருக்கலாம். தானியங்கி முறையில் கட்டணங்கள் செலுத்த அவர்களைப் பதிவு செய்வது அல்லது பணம் எடுக்கும் வரம்புகளை நிர்ணயிப்பது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம். இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளை ஆராயவும், அவர்கள் சிறப்பாக நிதி அம்சங்களை நிர்வகித்து வருவதாக உறுதிப்படுத்தவும் அவர்களுடன் உரையாடுங்கள்.

மருந்துகளை நிர்வகித்தல்

உங்கள் அன்பிற்குரியவர் தனது தினசரி மருந்துகளை எடுத்துக் கொண்டாரா என்பதைக் கண்காணிப்பதில் சிரமம் இருக்கலாம், குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட நோய்களை நிர்வகிக்க அவருக்கு மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தால் கண்காணிப்பதில் சிரமம் இருக்கலாம். அவர்களின் மருந்துகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த விரிவான உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.

வீட்டுப் பராமரிப்பு

காலப்போக்கில் முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு பேக் செய்வதும் வீட்டை சுத்தம் செய்வதும் மிகவும் சவாலானதாக மாறும். ஒருங்கிணைப்பு சிக்கல்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு அடர்த்தி இழப்பு ஆகியவை உங்கள் அன்பிற்குரியவர் வீட்டுப் பராமரிப்பு போன்ற நடைமுறைப் பணிகளை தனியாகக் கையாள்வதை பாதுகாப்பற்றதாக மாற்றக்கூடும். தூசு குடிக்கும் கருவி (வேக்யூம் கிளீனர்) போன்ற வீட்டுப் பராமரிப்பு கருவிகளின் செயல்பாடு மற்றும் இருக்குமிடத்தை அவர்கள் மறந்துவிடலாம்.

உங்கள் அன்பிற்குரியவர் இன்னமும் நிர்வகிக்கக்கூடிய வீட்டின் வழக்கமான பராமரிப்பிற்குத் தேவைப்படும் வழக்கமான வேலைகளின் பட்டியலை நீங்கள் உருவாக்கலாம். இந்த வேலைகளைச் சிறிது சிறிதாகப் பிரித்துக் கொடுப்பதையும் நீங்கள் பரிசீலிக்கலாம், மேலும் உங்கள் அன்பிற்குரியவர் சமாளிக்கச் சிரமப்படும் அந்தச் சிறு வேலைகளுக்கும் நீங்கள் உதவலாம். உங்கள் அன்பிற்குரியவர் சுத்தம் செய்யும்போது, ​​வீட்டில் உள்ள தளபாடங்கள் மற்றும் பொருட்களைக் கண்டறிந்து அகன்றி, நடைப்பாதைகள் நன்கு வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்யலாம். ஒன்றாகச் சேர்ந்து ஒரு வழக்கத்தைத் திட்டமிடுவதும், உங்கள் அன்பிற்குரியவர் அவர்கள் பொறுப்பில் செய்யும் வேலைகளைக் கண்காணிக்க உதவும்.

சமையல்

முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் நினைவாற்றல் கணிசமாக பாதிக்கப்பட்டால், சமைப்பது அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்காது. இது அடுப்பை அணைக்க மறந்துவிடுவதற்கோ உணவை கவனிக்காமல் விட்டுவிடுவதற்கோ வழிவகுக்கும். நீளமான பைஜாமாக்கள் போன்ற தளர்வான ஆடைகள் சூடான மேற்பரப்பில் தீப்பிடிக்கும் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

நீங்கள் படிப்படியாக சமையலையும், உங்கள் சமையலறையின் பாதுகாப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கலாம் (அதாவது, எரிவாயு சீராக்கியை அணைப்பது, சாக்கெட் கவர்களைப் பயன்படுத்துவது). முதுமைக்கால மறதி நோயுள்ள உங்கள் அன்பிற்குரியவர் சமைப்பதை முக்கியமானதாகவோ அல்லது அவர்களின் வழக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவோ கருதினால், எளிமையான பணிகளுக்கு உதவுமாறு கேட்டு அவர்களை இந்தச் செயல்பாட்டில் ஈடுபடுத்த முயற்சி செய்யுங்கள். இதில் உணவுப் பொருட்களைக் கலப்பது மற்றும் காய்கறிகளைக் கழுவுவது ஆகியவை அடங்கும். மூத்த குடிமக்களுக்கு ஏற்ற அல்லது தகவமைப்பு சமையலறைக் கருவிகள் பல, மூத்த குடிமக்களுக்கு இதுபோன்ற பணிகளை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளில் சில, முதுமைக்கால மறதி நோய் உடையவருக்குப் பழக்கமில்லாத வடிவமைப்புகளைக் கொண்டிருக்கலாம் (உதாரணமாக, கருவிகள் பல கைப்பிடிகளைக் கொண்டிருக்கலாம்). முடிந்தவரை, உங்கள் அன்பிற்குரியவருக்கு ஏற்கனவே தேர்ந்த கருவிகளைப் போன்ற பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் அன்பிற்குரியவர் எளிதாகக் கண்டுபிடிக்கும் வகையில், உங்கள் சமையலறை டிராயர்கள் மற்றும் லேபிள் கருவிகளை அவற்றின் செயல்பாட்டிற்கு ஏற்ப லேபிளிடலாம்.

படம்: செஃப் கிராஃப்ட் பெரிய அச்சு கொண்ட அளவீட்டு கோப்பைகள் (இடது), நார்த் கோஸ்ட் மருத்துவ ரீதியாக மாற்றியமைக்கக்கூடிய பிடிப்புக் கருவி (நடுவில்), ஆக்ஸோ குட் கிரிப்ஸ் கலவை கிண்ணங்கள் (வலது)
பொருட்கள் வாங்குதல்

முதுமைக்கால மறதி நோயின் லேசானது முதல் மிதமான நிலைகளில், உங்கள் அன்பிற்குரியவர்கள் தங்கள் சூழலில் கவனமின்றி இருக்கத் தொடங்கலாம் மற்றும் பணம் செலுத்தும்போது மீதித்தொகையைக் கணக்கிடுவதில் அவர்களுக்குச் சிரமம் இருக்கலாம். முடிந்தால், அவர்கள் பொருட்கள் வாங்கச் செல்லும்போது அவர்களுடன் செல்லுங்கள். அவர்களால் முடிந்தவரை கையாள அனுமதிக்கும் அதே வேளையில் நீங்கள் அவர்களுடன் இருக்கலாம்.

உங்கள் அன்பிற்குரியவர் நன்கு அறிந்த கடைகளுக்குச் செல்வது உதவியாக இருக்கக்கூடும், இதனால் கடைக்காரர்கள் அவர்களை அடையாளம் காண முடியும், மேலும் சூழலில் கவனமின்றி இருப்பதற்கான வாய்ப்புகள் அவர்களுக்குக் குறைவாக இருக்கும் வகையில் நெரிசல் இல்லாத நேரங்களில் செல்வதற்குத் திட்டமிடுங்கள். சாத்தியமானால், உங்கள் அன்பிற்குரியவர் பொருட்கள் வாங்கச் செல்லும்போது அவர் மீது கவனம் வைக்க, அருகிலுள்ள உணவங்காடி நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் உட்பட, அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களிடமிருந்து ஆதரவைப் பெறுங்கள். வாங்கும் பொருட்களின் எளிய பட்டியலை உருவாக்கி, உங்கள் அன்பிற்குரியவர் தேவையான பொருட்களைக் கண்டுபிடிக்க உதவுங்கள்.

போக்குவரத்து

உங்கள் அன்பிற்குரியவரின் முதுமைக்கால மறதி நோய் அதிகரிக்கையில், ​​அவர்களின் கவனம் செலுத்தும் திறனை உள்ளடக்கிய நிர்வாக செயல்பாடும் குறையும். வாகனம் ஓட்டுவது என்பது திசைகளை நினைவில் கொள்வது மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை விளக்குவது போன்ற பல அறிவாற்றல் சார்ந்த தேவைகளை உள்ளடக்கியது. உங்கள் அன்பிற்குரியவர் புற போக்குவரத்து நெரிசலால் திசைதிருப்பப்படலாம் அல்லது வெவ்வேறு சமிக்ஞைகளுக்கு மெதுவாக முடிவெடுக்கலாம்.  வாகனம் ஓட்டுவதிலும், மாற்றுப் போக்குவரத்து முறைகளை நாடுவது அவசியமா என்பதையும் அறிய நீங்கள் அவர்களின் வசதியை மதிப்பிடலாம். உங்கள் அன்பிற்குரியவர் வாகனம் ஓட்டுவதிலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதிலும் எவ்வாறு உதவுவது என்பது பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியவும்.

முதுமைக்கால மறதி நோய் அதிகரிப்பினால் உங்கள் அன்பிற்குரியவரின் திறன்கள் மாறும்போது, ​​அவர்களுக்கு உங்களிடமிருந்தும் மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் கூடுதல் ஆதரவு தேவைப்படலாம். கடந்த காலத்தில் அவர்களால் செய்ய முடிந்ததையும் இப்போது அவர்கள் செய்யக்கூடியதையும் ஒப்பிடுவதைத் தவிர்க்கவும். ஒரு நடவடிக்கையை உங்கள் அன்பிற்குரியவருடன் நீங்கள் சேர்ந்து செய்யும் ஒன்றாகப் பார்ப்பதும், பணிகள் முடிந்ததும் (அவை சரியாகச் செய்யப்படாவிட்டாலும் கூட) ஊக்க வார்த்தைகள் கூறுவதும், இந்தப் பணிகளின் மீது உங்கள் அன்பிற்குரியவரின் ஆர்வத்தையும், நேர்மையான உணர்வையும் பராமரிக்க உதவும். இது அவர்களின் சாதனை உணர்வையும் நம்பிக்கையையும் கட்டமைக்கும்.

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

ஆம் இல்லை
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

பின்வரும் பொருள் டிமென்ஷியா பற்றிய கடி-அளவிலான தகவல்களைக் கொண்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்ய அல்லது அச்சிட, படத்தை கிளிக் செய்யுங்கள். "மொழியைத் தேர்ந்தெடுக்கவும்" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலமும் நீங்கள் பொருளின் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.

Skip to content