பண்டிகைகள் என்பது பொதுவாக எல்லா கலாசாரங்களிலும் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்திற்கான நேரமாகும். எனினும், பராமரிப்பாளர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் இருவருக்கும் அவர்களின் வழக்கமான நடைமுறையில் ஏற்படும் இடையூறு காரணமாக இது ஒரு மன உளைச்சலைத் தரும் நேரமாக இருக்கலாம்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நேரத்தை நீங்கள் எவ்வாறு வழங்கலாம் என்பதற்கான சில நடைமுறை ரீதியான உதவிக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
1. உணவைக் கருத்தில் கொள்ளுங்கள்
குடும்பம் ஒன்றுகூடும் வேளைகளில் உணவு பெரும்பாலும் ஒரு சிறப்பம்சமாக இருக்கிறது. பரிமாறப்படும் உணவை உங்கள் அன்புக்குரியவராலும் ருசிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விழுங்குவதில் சிரமம் உள்ளவர்களுக்கு, சிறிய அளவிலான உணவை அல்லது மென்மையான உணவுகளை வழங்க முயற்சிக்கவும்.
2. அன்றைய நாளைத் திட்டமிடுதல்
உங்கள் அன்புக்குரியவரின் வழக்கமான நடமுறையைக் கடைப்பிடிக்க முடிந்த வரை முயற்சி செய்யுங்கள். பரபரப்பான ஒரு முழு நாள் திணறடிப்பதாக இருந்தால், உங்கள் அன்புக்குரியவருக்கு சிறிது ஓய்வு நேரம் அளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பல உறவினர்கள் வருகை தந்தால், உங்கள் அன்புக்குரியவருக்கு அது திணறடிப்பதாக இருக்கலாம் என்பதால், அவர்களின் வருகை நேரங்களைப் பிரித்துத் திட்டமிடுங்கள்.
3. பண்டிகைகளுக்குத் தயாராகுதல்
பண்டிகைகளின் போது உங்கள் அன்புக்குரியவருடன் நீங்கள் மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறைகள் என்ன? பண்டிகைக் காலப் பொருட்களைச் சமைக்கும்போது மாவை உருட்டுவது அல்லது காகித அலங்காரங்களை மடிப்பது போன்ற எளிய செயல்களில் அவர்களை ஈடுபடுத்த முயற்சிக்கவும். தயாரிப்பு செயல்முறை உங்கள் அன்புக்குரியவரை வரவிருக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு உற்சாகப்படுத்தவும், அவர்களது எதிர்பார்ப்பில் வைக்கவும் உதவலாம்.
4. உங்கள் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்
4. உங்கள் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்
5. சில நினைவூட்டல் பொருட்களைத் தயாரிக்கவும்
பழைய புகைப்படங்கள் மற்றும் கடந்த கால நினைவுப் பொருட்களுடன் ஒரு ஸ்க்ராப்புக்கை (Scrapbook) ஒன்றாக இணைத்து உங்கள் உறவினர்களை ஈடுபடுத்துங்கள். நீங்கள் சில பண்டிகைக்கால இசையைக் கேட்கவும் தேர்வு செய்யலாம், குறிப்பாக உங்கள் அன்புக்குரியவரும் உங்கள் குடும்பத்தினரும் கொண்டாட்டங்களின் போது சத்தமாக இசைக்க விரும்பும் இசை. இது உங்கள் உறவினர்களுக்கும் முதுமைக்கால மறதி நோய் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இடையே உரையாடலைத் தொடங்க வழிவகுக்கும்.
6. பண்டிகைகளையும் அனுபவியுங்கள்!
உங்கள் பராமரிப்புக் கடமைகளுக்கு உதவ ஒரு உறவினரை அழையுங்கள், இதனால் நீங்கள் பண்டிகைகளையும் கொண்டாட்டங்களையும் அனுபவிக்க சிறிது நேரம் பராமரிப்பில் இருந்து ஓய்வைப் பெறுவீர்கள். மன உளைச்சல் மற்றும் சோர்வு ஏற்படும் சந்தர்ப்பங்களில், கவனத்துடன் சுவாசித்தல் போன்ற சில சுய-பராமரிப்பு நடைமுறைகளில் பங்கேற்க நினைவில் கொள்ளுங்கள்.
இந்தக் குறிப்புகள் பொதுவாக உதவியாக இருந்தாலும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒவ்வொரு நபரும் அவரது குடும்பத்தினரும் வேறுபட்டவர்கள் என்பதை உணர்வது முக்கியமாகும். அதாவது, சில குடும்பங்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் தங்கள் அன்புக்குரியவரின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களைச் சிறப்பாகப் பூர்த்தி செய்ய, சில உதவிக்குறிப்புகளுக்கு மற்றவர்களை விட முன்னுரிமை அளிக்கலாம்.
சிங்கப்பூரில் ஒரு பராமரிப்பாளர், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் தனது அன்புக்குரியவருக்காக பண்டிகைக் கொண்டாட்டங்களை முதுமைக்கால மறதி நோயாளிகளை உள்ளடக்கியதாக மாற்றிய நிகழ்வு குறித்து இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது:Here is an example of how a caregiver in Singapore has made festive celebrations more dementia-inclusive for her loved one living with dementia:
திரு டெங் மற்றும் ஜாக்குலினின் கதை
2021ஆம் ஆண்டில் ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தை திரு டெங்கின் முதன்மைப் பராமரிப்பாளராக ஜாக்குலின் உள்ளார். லேசான முதுமைக்கால மறதி நோய் நிலையில் ஓய்வு பெற்ற திரு டெங், சுயசார்புடன் வாழ்கிறார். செய்தித்தாள்களைப் படிப்பதிலும், நீண்ட நடைப்பயிற்சி மேற்கொள்வதிலும், தனது வீட்டிற்கு அருகிலுள்ள கூட்ட மையத்தால் ஏற்பாடு செய்யப்படும் வாராந்தர நடவடிக்கை திட்டங்களில் கலந்துகொள்வதிலும் நேரத்தைச் செலவிடுகிறார். எனினும், லேசான முதுமைக்கால மறதி நோய் உள்ள பலரைப் போலவே, அவருக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதில், தனது நிதியைக் கையாள்வதில், மக்களின் பெயர்களையும் முகங்களையும் நினைவில் கொள்வதில் சிரமம் உள்ளது.
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் திட்டமிடும்போது, திரு டெங் அவர்களுக்கு பண்டிகைகளால் ஏற்படக்கூடிய எந்தவொரு மன உளைச்சலையும் அல்லது மனப்பதட்டத்தையும் நீக்க, அவரது அன்றாட வழக்கத்தையும், பலங்களையும், பலவீனங்களையும் ஜாக்குலின் கருத்தில் எடுத்துக்கொள்கிறார்.
பண்டிகைகளுக்குத் தயாராகுதல்
மளிகைப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது சில பைகளை எடுத்துச் செல்வது, வசந்தகாலத்திற்காக வீட்டைச் சுத்தம் செய்வது மற்றும் சீனப் புத்தாண்டு சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற செயல்களில் திரு டெங்கை ஈடுபடுத்துவதை ஜாக்குலின் உறுதிசெய்கிறார். சுத்தம் செய்யும் விஷயத்தில், ஈரமான துடைப்பான்களால் மேற்பரப்புகளைத் துடைக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார். வீட்டை சுத்தம் செய்வதில் அவருடன் சேர்ந்து வேலை செய்கிறார், அவர் நீண்ட காலமாகப் பயன்படுத்தாத சில பொருட்களை அகற்ற விரும்புகிறீர்களா என்று கேட்கிறார், மேலும் அவர் அவற்றை வைத்திருக்க விரும்புவதாகச் சொன்னால் அவருடைய முடிவை மதிக்கிறார்.
சீனப் புத்தாண்டு நெருங்கி வருவதால், திரு டெங்கை சைனாடவுனுக்கு அழைத்து வந்து, அங்குள்ள சூழலை ரசிக்க வைக்கிறார். அன்றைய தினம் சைனாடவுன் எப்படி இருந்தது என்பது குறித்து அவருடன் உரையாடலில் ஈடுபடுகிறார்.
அன்றைய நாளைத் திட்டமிடுதல்
இரண்டு நாள் பொது விடுமுறையைத் திட்டமிடும்போது, ஜாக்குலின் முதல் நாளில் வீடுகளுக்குச் சென்று (3 வீடுகளுக்கு மேல் இல்லை) சந்திப்பதையும், இரண்டாவது நாளில் முழு நாள் ஓய்வையும் திட்டமிடுகிறார். திரு டெங் தினமும் 2 மணிநேரம் நீண்ட நடைப்பயிற்சி மேற்கொள்வதை விரும்புவதால், ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்ல அவருக்குத் தாங்குதிறன் இருப்பதாக அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இந்த வீடுகளில், ஆங் பாவோவைக் கொடுக்கும் பாரம்பரியத்தில் திரு டெங்கை ஈடுபடுத்துவதை அவர் உறுதிசெய்கிறார். உணவைப் பொறுத்தவரை, ஜாக்குலின் அவரது முடிவிலேயே விட்டுவிடுகிறார், ஏனெனில் அவர் உடல்நலத்தில் அதிக அக்கறை கொண்டவர், மேலும் அவர் விரும்பும் போது ஒரு சில வாத்துக்கறித் துண்டுகளைச் சாப்பிடுவதைத் தடுக்க மாட்டார். எனினும், அவர் சாப்பிட மறந்துவிட்டால், வழக்கமான உணவு நேரத்தில் சாப்பிடுமாறு அவருக்கு நினைவூட்டுகிறார்.
உறவினர்களை ஈடுபடுத்துதல்
ஜாக்குலின், திரு டெங்கின் உடல்நிலை குறித்து தங்கள் உறவினர்களுக்குத் தொடர்ந்து தகவல்களைத் தெரிவித்து வருகிறார். இதனால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அவரது தேவைகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், மேலும் ஜாக்குலின் சார்பாக அவரைக் கவனித்துக்கொள்வார்கள். உதாரணமாக, அவர்கள் அவ்வப்போது அவரைச் சந்தித்துப் பேசுவார்கள், அவர் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைப் பேசும்போது புரிந்துகொள்வார்கள், மேலும் அவர்கள் யார் என்பதை அவரால் நினைவில் கொள்ள முடியாதபோது கோபப்பட மாட்டார்கள்.
தற்காலிகமாக இருந்தாலும், தனது குடும்ப உறுப்பினர்களுடன் பராமரிப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது, ஜாக்குலினுக்கு ஓய்வெடுக்கவும், தனக்காக கொண்டாட்டங்களை அனுபவிக்கவும் அனுமதிக்கிறது. கூடுதலாக, திரு டெங்குவும் அவரும் இரண்டாவது நாளில் நீண்ட நாள் வீட்டு வருகைக்குப் பிறகு ஓய்வெடுத்து இளைப்பாற முடியும்.
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான இந்த சிந்தனைமிக்க மற்றும் நோக்கத்துடன் கூடிய திட்டமிடல் திரு டெங்கிற்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் இன்னும் அவரை நினைவில் வைத்திருப்பதும், கொண்டாட்டங்களுக்கு அவரை அழைப்பதும், அவர் மீது மிகவும் அன்பாகவும் அக்கறையுடனும் இருப்பதும் அவரை அதிர்ஷ்டசாலி என்று உணர வைப்பதாக அவர் நாள் முடிவில் ஜாக்குலினிடம் தெரிவித்திருந்தார்.
திரு டெங் மற்றும் ஜாக்குலினின் கதை, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவருக்கு, கொண்டாட்டங்களை முதுமைக்கால மறதி நோயாளியை உள்ளடக்கியதாக மாற்றுவது முக்கியம் மட்டுமல்ல, மிகவும் பயனுள்ளது என்பதையும் உண்மையிலேயே விளக்குகிறது.