Playback speed:
முன்கூட்டிய மருத்துவ ஆணை (AMD) என்பது ஒரு நபர் முன்கூட்டிய கையொப்பமிடும் ஒரு சட்ட ஆவணமாகும், இது அவர் மரணத்திற்குரிய நிலையில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு சுயநினைவற்று இருந்தால், எந்தவொரு அசாதாரண உயிர் நீட்டிப்புச் சிகிச்சையையும் பயன்படுத்த விரும்பவில்லை என்பதை அவரது மருத்துவரிடம் தெரிவிக்கும் ஆவணமாகும்.
முன்கூட்டிய மருத்துவ ஆணை (AMD) ஆவணத்தை அளிப்பது என்பது சுயவிருப்பத்திற்கு உரிய முடிவே ஆகும். மருத்துவ தொழில்நுட்பம் நவீனமடைகையில், ஒரு நபரின் ஆயுளை நீட்டிக்கும் வழிகள் அதிகரித்து வருகின்றன. இதன் பொருள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டாலும் கூட மக்கள் நீண்ட காலம் வாழ முடியும். அசாதாரண உயிர்நீட்டிப்புச் சிகிச்சை என்பது, இறுதிக்கட்டத்தில் இருக்கும் நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்க மட்டுமே உதவும் ஏதேனும் மருத்துவ சிகிச்சையாகும், ஆனால் இது நோயைக் குணப்படுத்தாது. உதாரணமாக, சுவாசிக்க உதவும் ஒரு சுவாசக் கருவியை நோயாளிக்குப் பொருத்துவது என்பது ஒரு சிகிச்சை அல்ல, அத்துடன் இது நோயாளியை குணமடையவும் செய்யாது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபரால் சிகிச்சையைத் தொடர அல்லது நிறுத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்த முடியாமல் போகலாம். சிலர் சிகிச்சையை நீட்டிக்காமல், இயற்கையாகவே நிம்மதியாக இறக்க விரும்பலாம். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவர் எதிர்காலத்தில் தனது விருப்பங்களை மருத்துவரிடம் தெரிவிக்க முடியாத சூழ்நிலையில், மருத்துவர் அவரது முன்கூட்டிய மருத்துவ ஆணை (AMD) ஆவணத்தின்படி நடந்துகொள்வார்.
முன்கூட்டிய மருத்துவ ஆணை (AMD) ஆவணத்தை எப்படி தயார் செய்வது
- நோயாளிகள் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், நல்ல மனநிலையுடனும் இருக்க வேண்டும்.
- மூன்று மருத்துவர்கள் (மருத்துவமனை மருத்துவர் உட்பட) நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக சான்றளிக்க வேண்டும்.* மருத்துவர்களில் இருவர் நிபுணர்களாக இருக்க வேண்டும்.
- நோயாளிகள் AMD படிவத்தைப் பூர்த்திச் செய்து, பொறுப்பான மருத்துவர் மற்றும் 21 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் என இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையொப்பமிட வேண்டும். நோயாளியின் இறப்பினால் எந்தப் பயனும் பெறாத இருவர் சாட்சிகளாக இருக்க வேண்டும்.
மருத்துவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தால்:
- பொறுப்பில் இருக்கும் மருத்துவர் முன்கூட்டிய மருத்துவ ஆணை ஆவணத்தைப் பரிசீலிப்பார்.
- இன்னமும் உடன்பாடு எட்டவில்லை எனில், நோயாளியின் வழக்கைப் பரிசீலிக்க சுகாதார அமைச்சு மூன்று கூடுதல் வல்லுநர்களை நியமிக்கும்.
- நியமிக்கப்பட்ட மூன்று வல்லுநர்களாலும் நோயாளி மரணத் தருவாயில் இருப்பதாக சான்றளிக்க முடியாவிட்டால், AMD ஆவணத்தை நடைமுறைப்படுத்த முடியாது.
- சுகாதார அமைச்சின் இணையதளத்தில் கூடுதல் தகவல்களைக் காணலாம்.
- ஒரு முன்கூட்டிய மருத்துவ ஆணை (AMD) ஆவணத்தை எந்த நேரத்திலும் ரத்து செய்துக்கொள்ளலாம். முன்கூட்டிய மருத்துவ ஆணை (AMD) ஆவணத்தை உருவாக்கிய நபர், ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலமோ அல்லது முன்கூட்டிய மருத்துவ ஆணை (AMD) ஆவணத்தின் பதிவாளருக்கு ஒரு கடிதம் எழுதுவதன் மூலமோ இதைச் செய்யலாம், மேலும் அவர் ரத்து செய்ததை உறுதி செய்ய ஒரு சாட்சியை நியமிக்கலாம். பராமரிப்பாளர் தானாகவே ஒரு சாட்சியாக இருக்க தேர்வு செய்யலாம்.
- முன்கூட்டிய மருத்துவ ஆணை (AMD) ஆவணத்தைத் தயார் செய்த நபருக்கு எழுத முடியவில்லை, அவர் முன்கூட்டிய மருத்துவ ஆணை (AMD) ஆவணத்தை ரத்து செய்வதற்கான தனது விருப்பத்தைப் பேசுவதன் மூலமோ அல்லது சைகை மொழியைப் பயன்படுத்துவதன் மூலமோ தெரிவிக்கலாம். சாட்சியாக இருப்பவர் அந்த அறிவிப்பைச் சமர்ப்பித்து, அதை ஆவணத்தைத் தயார் செய்த நபரால் ஏன் சமர்ப்பிக்க முடியவில்லை என்பதை விளக்க வேண்டும்.
- முன்கூட்டிய மருத்துவ ஆணை (AMD) ஆவணம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, முன்கூட்டிய மருத்துவ ஆணை (AMD) ஆவணத்தில் இடம்பெறும் சுகாதார அமைச்சின் பக்கத்தைப் பார்வையிடவும்.
கூடுதல் வளஆதாரங்கள்
முன்கூட்டியே திட்டமிடுதல்: சிங்கப்பூரில் முன்கூட்டிய வழிகாட்டுதல்கள்
உங்கள் விருப்பங்களையும் மதிப்புமிக்கவற்றையும் முன்கூட்டியே பகிர்ந்து கொள்வது, மருத்துவ நெருக்கடியின்போது நீங்கள் விரும்பும் சிகிச்சை முடிவுகளை உங்கள் அன்புக்குரியவர்கள் எவ்வாறு புரிந்துகொள்ள உதவுகிறது என்பது குறித்த தகவல்களை இந்தக் காணொளி வழங்குகிறது. இந்த உரையில், மருத்துவர் சுவா, மேம்பட்ட பராமரிப்புத் திட்டமைப்பின் (Advance Care Planning, ACP) முக்கியத்துவம், அது நீண்டகால அதிகாரப் பத்திரம் (LPA) மற்றும் AMD-ஐ எவ்வாறு பூர்த்தி செய்கிறது மற்றும் வருங்கால திட்டமிடலை நீங்கள் எவ்வாறு தொடங்கலாம் என்பதை விளக்குவார்.
ஆதாரம்: கவுன்சில் ஃபார் தேர்டு ஏஜ் (Council for Third Age, C3A)