எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
8 நிமிட வாசிப்பு

இந்தக் கட்டுரை சிங்கப்பூரில் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள சில அக்கம்பக்கங்களின் உதாரணங்களைப் பட்டியலிடுகிறது. இந்த எடுத்துக்காட்டுகள், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு வழி கண்டறிய உதவிடவும், அவர்களின் நல்வாழ்வை ஆதரிக்கவும், பௌதீக மற்றும் சமூகச் சூழல்கள் உட்பட சுற்றுப்புறத்தின் பல்வேறு அம்சங்களின் தழுவலை எடுத்துரைக்கின்றன.

கூடுதலாக, சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் புத்தாக்க நகரங்களுக்கான Lee Kuan Yew நிலையத்தின் இந்த வழிகாட்டியானது, சிங்கப்பூர் முழுவதும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகங்களை (Dementia-Friendly Communities, DFCs) உருவாக்க சமூகப் பங்காளர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.

கெபுன் பாரு (Kebun Baru)

கெபுன் பாருவில் (KB) அனைவருக்கும் சமவாய்ப்புள்ள முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகத்தை (inclusive Dementia-Friendly Community, iDFC) உருவாக்க, NUS சுவா தியான் போ சமூகத் தலைமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு டிமென்ஷியா சிங்கப்பூர் (முன்னர் ஆல்சைமர்’ஸ் டிசீஸ் அசோசியேஷன் என்று அழைக்கப்பட்டது) உடன் கூட்டிணைந்து, பின்வருவனவற்றுக்காக அடிப்படையை உணர்வதற்கான ஓர் ஆய்வை நடத்துகிறது:

• முதுமைக்கால மறதி நோய் பற்றிய கெபுன் பாரு குடியிருப்பாளர்களின் அறிவு மற்றும் மனப்போக்குகளைப் புரிந்து கொள்வது;
• DFC பற்றிய அவர்களின் புரிதலைக் கண்டறிவது; மற்றும்
• கெபுன் பாருவை முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்ததாக மாற்ற என்ன செய்யலாம் என்பதை ஆராய்வது.

2019-இன் பிற்பகுதியிலிருந்து மார்ச் 2020 வரை, டிமென்ஷியா சிங்கப்பூர், அடித்தளத் தலைவர்கள் மற்றும் சமூகப் பங்காளர்களுக்கு இடையே ஒரு கூட்டுத் திட்டம், அங் மோ கியோவில் உள்ள கெபுன் பாரு சமூகத்தில் நடத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஒரு முயற்சியாக வழி கண்டறியும் திட்டம் இருந்தது. இது, இந்தச் சமூகத்தில் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வழி கண்டறியும் முறையை, அதாவது, சுற்றியுள்ள இடங்களைக் கடந்து செல்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கான டிமென்ஷியா சிங்கப்பூரின் நம்பிக்கைக்கான குரல்கள் (வாய்சஸ் ஃபார் ஹோப்) திட்டத்தில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் மற்றும் திரு. ஹென்றி க்வெக் (கெபுன் பாரு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆலோசகர்) ஆகியோருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, இரண்டு வசிப்போர் குழுக்களில் உள்ள வீவக புளோக்குகளின் கீழ்த்தள வெற்றிடங்களில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள சுவர்களில் பழக்கமான பழைய பொருட்களின் சுவரோவியங்கள் வரையப்பட்டன. உண்மையில், இந்த சுவரோவியங்களானது கட்டிடங்கள் மற்றும் தாழ்வாரங்களை ஒன்றையொன்று வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்களாகச் செயல்பட முடியும், இதனால் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த சுற்றுப்புறத்தின் வழியாக செல்லும்போது சுயமாக வழிகாட்டிக் கொள்வதை எளிதாக்குகிறது.

கெபுன் பாருவின் ஆதாரங்கள்: டிமென்ஷியா சிங்கப்பூர்1

உட்லண்ட்ஸ் (Woodlands)

சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (Agency for Integrated Care, AIC) மற்றும் சமூகப் பங்காளர்களால் ஆதரிக்கப்படும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சிங்கப்பூர் முனைப்பின் ஒரு பகுதியாக, நவம்பர் 2019-இல் உட்லண்ட்ஸ் குடியிருப்புப்பேட்டையில் ஒரு DFC முனைப்பு தொடங்கப்பட்டது.

முதுமைக்கால மறதி நோய் நண்பர்கள் அணிதிரட்டல் குழு (Dementia Friends Mobilisation Team) என்பது உட்லண்ட்ஸின் DFC முனைப்பின் ஓர் முக்கிய அம்சம் ஆகும். இளையர்கள், குடியிருப்பாளர்கள், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் உணவங்காடிக் கடைக்காரர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை ஈடுபடுத்தி, அவர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் என்றால் என்ன, முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுடன் எவ்வாறு நட்பு கொள்வது மற்றும் ஈடுபடுத்துவது, முதுமைக்கால மறதி நோய் உள்ள ஒருவரை அவர்கள் சந்திக்கும்போது என்ன செய்வது என்பது குறித்து கற்றுத் தருவதில் இந்தக் குழு ஈடுபட்டுள்ளது.

உட்லண்ட்ஸில் 15 கோ-டு பாயிண்டுகளை உருவாக்குவதே DFC முனைப்பின் மற்றொரு அம்சமாகும். இவை தொலைந்து போன முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை அழைத்து வரக்கூடிய இடங்களாகும். கோ-டு பாயிண்ட்களில், பயிற்சி பெற்ற ஊழியர்கள் ஆலோசனை வழங்கலாம், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை அமைதிப்படுத்தலாம், மேலும் இந்த நபர்களின் நெருங்கிய உறவினர்களைக் கண்டறிந்து தொடர்புகொள்வதில் உதவலாம். கூடுதலாக, முதுமைக்கால மறதி நோய் மற்றும் இந்த இடங்கள் பற்றிய தகவல்களைப் பொதுமக்கள் அணுகலாம். இந்த இடங்களில் சில தற்போது கடைகள், மருத்துவ மற்றும் சமூகப் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் ஒரு சமூக நிலையம் ஆகியவை உள்ளன.

உட்லண்ட்ஸ் DFC பற்றிய ஆதாரங்கள்: The Straits Times2 and TODAYonline3

யீஷூன் (Yishun)

உட்லண்ட்ஸைப் போலவே, யீஷூனும் சிங்கப்பூரில் DFC ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒரு அக்கம்பக்கமாகும். அரசாங்கம், தனியார் வணிகர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்புப் பங்காளர்கள், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு யீஷுன் சமூகத்தை அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கின்ற ஒரு சமூகமாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற DFCகளைப் போலவே, யீஷுனும் டிமென்ஷியா கோ-டு பாயிண்ட்ஸைக் கொண்டிருக்கிறது. ஸ்ரீ நாராயணா மிஷன் நர்சிங் ஹோமில் உள்ள 24/7 கோ-டு பாயிண்ட் இதுபோன்ற ஒரு மையம் ஆகும், இது யீஷூனில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு 24 மணி நேரமும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்கிறது4

குறிப்பாக, 2016-இல் KTPH இல் ஒரு அடிப்படை முனைப்பாகத் தொடங்கப்பட்ட லீன் அறக்கட்டளை, கூ டெக் புவாட் மருத்துவமனை (KTPH) மற்றும் டிமென்ஷியா சிங்கப்பூர் ஆகியவற்றை உள்ளடக்கிய நாடு தழுவிய Forget Us Not கூட்டு இயக்கம், நாடு முழுவதும் மற்றும் KTPH அமைந்துள்ள யீஷூன் சுற்றுப்புறத்தில் உள்ள பணியாளர்களுக்குக் கல்வி மற்றும் பயிற்சி அமர்வுகளை நடத்தியது. இயக்கம் கண்ட பிற முனைப்புகளில், KTPH-இன் தகவலழைப்பு மையம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பொதுமக்களை எதிர்கொள்ளும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளவர்கள் போன்ற மக்களை அடிக்கடி எதிர்கொள்ளும் ஊழியர்கள் உள்ளிட்ட யீஷூன் சமூக மருத்துவமனையின் ஊழியர்கள், முதுமைக்கால மறதி நோய் தொடர்பான பயிற்சி பெற்றுள்ளனர்5,6

முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் தங்களுக்குள் வேறுபடுத்திக் காட்ட உதவும் வகையில், தனித்துவமான வண்ணங்கள் மற்றும் தொகுதி எண்களால் மீண்டும் வர்ணம் பூசப்பட்ட தொகுதிகளும் இந்தப் பகுதியில் உள்ளன. இவை, அவர்கள் அந்தப் பகுதியில் எளிதாகச் சுற்றிவர வழி செய்கிறது. யீஷுனின் வரலாற்றை நினைவூட்டுகின்ற மீன்கள், மரங்கள் மற்றும் அன்னாசிப்பழங்களின் சுவரோவியங்களும் கூட குடியிருப்பாளர்களிடையே அந்தப் பகுதியின் அடையாள உணர்வை உருவாக்க உருவாக்கப்பட்டன.

2019-இல் திறக்கப்பட்ட யீஷூன் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து நடுவமானது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை உள்ளடக்குவதற்கு உள்கட்டமைப்பை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும். இது முதியோர் மற்றும் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த இடச் சூழலைக் கொண்டுள்ளது, பெரிய மற்றும் படிக்க எளிதான திசை அறிகுறிகள், தடையற்ற பேருந்து ஏறுதல் மற்றும் இறங்குதல் இடங்கள் மற்றும் பயணிகள் அமைதியான மற்றும் இளைப்பாறும் சூழலை அணுக அமைதியான அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.7

 

முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களைப் பராமரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மற்றொரு குழு, யீஷூன் வடக்கு அக்கம்பக்கக் காவல் நிலையத்தின் குடிமக்கள்-ரோந்து குழு ஆகும். குடிமக்கள் தன்னார்வத் தொண்டு குழுவின் உறுப்பினர்கள் ரோந்துப் பணியில் இருக்கும்போது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பதிலளிக்க மற்றும் உதவ பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.8

இயோ சூ காங் (Yio Chu Kang)

வீவக தொகுதிச் சுவர்களில் முதுமைக்கால மறதி நோய்வுக்கு உகந்த சுவரோவியங்களைச் சேர்த்த மூன்றாவது DFC, இயோ சூ காங் ஆகும் . அங் மோ கியோ அவென்யூ 4-இல், குறைந்தது ஏழு தொகுதிகளில் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன, அவற்றில் மெர்லியன் போன்ற நன்கு அறிமுகமான நபர்களும் லெப்ரான் ஜேம்ஸ் போன்ற விளையாட்டு நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.9

நகரத் தணிக்கைகளின் போது, AIC ஆனது AMK நகர மன்றம் மற்றும் அடித்தளத் தலைவர்களுடன் கூட்டிணைந்து, முதுமைக்கால மறதி நோயுக்கு உகந்ததாக உள்கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்கியது, எடுத்துக்காட்டாக, அதிக நடைபாதைகளை உருவாக்க வடிகால்களை மூடுவது போன்றவை. லென்டர் குடியிருப்புப்பேட்டையில், மிகவும் முக்கியமான குடியிருப்புப்பேட்டை குறிப்பான்கள் மற்றும் காட்சியரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிப் பகுதிகள் மற்றும் சமூக தோட்டங்கள் போன்ற தலைமுறைகளுக்கு இடையேயான இடங்கள் சமூக வரைபடத்தில் இணைக்கப்பட்டன, மேலும் இந்த குறிப்பான்களிலிருந்து அருகிலுள்ள கோ-டு பாயிண்டுக்கான வழிகாட்டுதல்களும் சேர்க்கப்பட்டன. இவை, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு இடங்கள் மற்றும் கட்டிடங்களை மேலும் அடையாளம் காணக்கூடியதாகவும் அணுகக்கூடியதாகவும் உருவாக்க உதவுகின்றன.

2023-இல், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களைச் சிறப்பாக ஆதரிப்பதற்காக, இயோ சூ காங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் பல முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த மேம்பாடுகள் செயல்படுத்தப்பட்டன. இந்த முனைப்பானது, AIC, வாழத்தகு நகரங்கள் மையம் (CLC) மற்றும் சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (SUTD) ஆகியவற்றால் நடத்தப்பட்ட சமூக அடிப்படையிலான ஆராய்ச்சி முயற்சியான முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த அக்கம்பக்கம் ஆய்வில் இருந்து உருவானது. இயோ சூ காங்கில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோர் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களி பராமரிப்பாளர்ர்கள் ஈடுபடுத்தப்பட்ட இந்த ஆய்வு, சமூகத்திற்குள் அவர்களின் தனித்துவமான தேவைகளை நன்கு புரிந்துகொள்ள முயன்றது.

ஆதாரம்: The Straits Times

Source: The Straits Times

சொந்த உணர்வு மற்றும் ஒரு கூட்டுச் சூழலை ஊக்குவித்து வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் அர்ப்பணிக்கப்பட்ட சமூக இடமான ப்ளூ கோர்ட்டை (Blue Court) நிறுவுவதே இந்த முனைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க விளைவாகும்.

ப்ளூ கோர்ட்டுக்குள், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு ஏற்றவாறு, ஈடுபடுத்தும் வகையிலான அறிவாற்றல் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளை வழங்கி, மனத் தூண்டுதலை ஊக்குவிக்கவும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் நிபுணத்துவமான நடவடிக்கை இடங்கள் உருவாக்கப்பட்டன.

ஆதாரம்: The Straits Times

முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுள் எளிதாகக் கடந்து செல்ல உதவுவதற்கு, மிதவைகளைப் போன்ற பிரகாசமான மஞ்சள் நிற வட்டக் குறிப்பான்கள் அக்கம்பக்கம் முழுவதும் மூலோபாய ரீதியாக வைக்கப்பட்டன. இந்தக் குறிப்பான்கள் காட்சிசார் குறிப்புகளாக மட்டுமல்லாமல், உள்ளூர் சந்தை போன்ற முக்கிய இடங்களுக்குத் தெளிவான திசைகாட்டிகளாக விளங்குகின்றன.

ஆதாரம்: The Straits Times

பாத்திர சின்னங்கள் போன்ற எளிமையான மற்றும் அனைவராலும் அடையாளம் காணக்கூடிய சின்னங்களைப் பயன்படுத்தி, இந்தக் குறிப்பான்கள் குடியிருப்பாளர்களை அருகிலுள்ள உணவங்காடி நிலையம் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு வழிநடத்துகின்றன, சமூகத்திற்குள் தடையற்ற வழிசெலுத்தல் மற்றும் அணுகலை உறுதி செய்கின்றன.

தோ பாயோ கிழக்கு (Toa Payoh East)

புகைப்படம்: Straits Times

தோ பாயோ ஈஸ்ட்டில், முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் அந்தப் பகுதியில் வழியைக் கண்டறிய உதவும் வகையில், சில வீவக தொகுதிகளின் தூண்களில் நீல நிறத்தில் சூரியகாந்தி மற்றும் சிவப்பு நிறத்தில் பனை மரங்கள் போன்ற தொகுதி எண்களுடன் கூடிய வழி கண்டறியும் குறிப்பான்கள் வரையப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிக் குறிப்பான்கள் க்ளெனீகிள்ஸ் மருத்துவ நிலையத்தின் முதியோர் மருத்துவரான டாக்டர் சான் கின் மிங்கின் ஆலோசனையுடன் வடிவமைக்கப்பட்டன. தெளிவான மற்றும் மாறுபட்ட முதன்மை வண்ணங்கள் மற்றும் பெரிய வடிவங்களைப் பயன்படுத்துவது, முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் சுற்றுச்சூழலிலிருந்து பொருட்களை வேறுபடுத்துவதை எளிதாக்குகிறது.10

பல்வேறு சமூகச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து, முதியோர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் இருக்கிறதா என்று முன்கூட்டியே கண்டறிய இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இலவசமாக முதுமைக்கால மறதி நோய் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த முனைப்புகள் 12 பிப்ரவரி 2022 அன்று தோ பாயோ ஈஸ்ட் குடிமக்கள் ஆலோசனைக் குழுவால் தொடங்கப்பட்டன.

“உணவு, உதவி, தேவைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் வாய்ப்புகள்” என்பதைக் குறிக்கும் MANGO (Meals, Assistance, Needs, Groceries and Opportunities) திட்டம், குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவுகிறது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு உதவுவதற்காகவும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசாங்க மானியங்களுக்கும் கூடுதலாக, இந்தத் திட்டம் நிதி உதவியையும், டயப்பர்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் வழங்குகிறது.

தோ பாயோ மேற்கு-தாம்சன் (Toa Payoh West-Thomson)

முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களைப் பராமரிப்பவர்கள் தகவல்களையும் ஆதரவையும் அணுகுவதற்காக, தோ பாயோ-தாம்சன் பகுதியைச் சுற்றி சுமார் 25 பதாகைகள் வைக்கப்பட்டன. அக்கம்பக்கத்தில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பதை குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்க, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள உணவு அங்காடி நிலையத்தின் மேசைகளில் 120க்கும் மேற்பட்ட அச்சு ஓவியங்கள் ஒட்டப்பட்டன. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களைக் கண்டறிந்து உதவுவதற்கான திறனைப் பெறுவதற்காக, குடியிருப்பாளர்கள் மற்றும் தொண்டூழியர்களுக்கு இருவாரப் பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்படுகின்றன. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் அக்கம்பக்கத்தில் வழிகண்டறிய உதவும் வகையில் வீவக தொகுதிகள் வண்ணக் குறியீடு செய்யப்பட்டு தெளிவான வண்ணங்ளைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.

பிடோக் (Bedok)

GoodLife! என்பது பெடோக்கை தளமாகக் கொண்ட மான்ட்ஃபோர்ட் கேர் நடத்தும் ஒரு நிலையமாகும், இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதில் சமூகத்தைத் தீவிரமாக ஈடுபடுத்துகிறது. GoodLife! -ஐத் தளமாகக் கொண்ட மக்கள்தொடர்புக் குழுக்கள் (CREST) மற்றும் நட்புறவாளர் குழு தங்கள் வேலையில் பரபரப்பாக இருக்கும் பராமரிப்பாளர்கள் தங்கள் பரபரப்பான கால அட்டவணைகளுக்கு மத்தியில் இடை ஓய்வு பெற உதவும் வழிகளை பிடோக் கண்டறிகிறது. அவர்கள் தொண்டூழியர்களை முதியோர் பராமரிப்பாளர்களாகச் செயல்படவும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்ளைப் பராமரிக்கவும், பராமரிப்பாளர்கள் ஆதரவுக் குழு அமர்வுகளில் கலந்து கொள்ளும்போது அவர்களை அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்தவும் ஆட்சேர்ப்பு செய்து பயிற்சி அளிக்கிறார்கள்.11

இதனால் பராமரிப்பாளர்களால் சுய பராமரிப்புக்கான நேரத்தைக் கண்டறிய முடியும், மேலும் அவர்களின் அன்புக்குரியவர்கள் திறமையானவர்களின் பொறுப்பில் இருப்பதை உறுதிசெய்ய முடியும். தொண்டூழியர்களில் ஒருவர், இந்தப் பயிற்சி தனக்கு எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தது என்பதை வெளிப்படுத்தினார்: “இது என் கண்களைத் திறப்பதாக உள்ளது, மேலும் நான் பாடங்கள் மூலம் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுடன் எவ்வாறு சிறப்பாகத் தொடர்புகொள்வது என்பது பற்றி அதிகம் கற்றுக்கொண்டேன், மேலும் மாதாந்திர ஈடுபாடு அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதால் அதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”

மரீன் பரேட்

3 செப்டம்பர் 2023 அன்று நடைபெற்ற மரீன் பரேட் முதுமைக்கால மறதி நோய் விழிப்புணர்வு இயக்கத்தின்போது, மரீன் பரேட், முதுமைக்கால மறதி நோய்வுக்கு உகந்த அக்கம்பக்கமாக டாக்டர் டான் ஸீ லெங் (மனிதவள அமைச்சர், மரீன் பரேட் குழுத்தொகுதியின் ஆலோசகர்) அவர்களால் அறிவிக்கப்பட்டது.

வழியைக் கண்டறிவதற்கான சுவரோவியங்கள் தான் மரீன் பரேடின் முக்கிய அம்சமாகும், இவற்றை மரீன் டெரஸ் ட்ரைவில் உள்ள 51 முதல் 55 வரையிலான புளோக்குகளில் காணலாம். வடிவமைப்புச் செயல்முறையின் போது, Goodlife! -இல் உள்ள மூத்தோர்களாக வழியைக் கண்டறிய உதவும் சுவரோவியங்களுக்கு பெரனக்கன் சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன! மற்ற சின்னங்களுடன் ஒப்பிடும்போது மரீன் பரேட் இந்த இனங்களை விரைவாக அடையாளம் காண முடிந்தது. டிமென்ஷியா சிங்கப்பூர், மான்ட்ஃபோர்ட் கேர், மரீன் டெரஸ் ஹேவன் ஆர்சி, மரீன் பரேட் நகர மன்றம் மற்றும் வீகேர்@மரீன்பரேட் போன்ற இடவமைப்பு மற்றும் வடிவமைப்புகள் குறித்த கலந்தாலோசனைகளில் பல பங்குதாரர்கள் ஈடுபட்டனர். சுவரோவியங்களை வரைவது பங்குதாரர்கள், சமூகத் தொண்டூழியர்கள், CHIJ காத்தோங் கான்வென்ட்டின் மாணவர்கள் மற்றும் தாவோ நான் பள்ளியின் ஆசிரியர்களின் கூட்டு முயற்சியாக இருந்தது.

பராமரிப்பாளர் ஆதரவு வலையமைப்பு 2019-இல் WeCare@MarineParade – ஆல் தொடங்கப்பட்டது மற்றும் ஜனவரி 2022-இல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இன்றுவரை, இது 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, மேலும் பராமரிப்பாளர் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் ஆதரவு குழுக்களைத் தொடர்ந்து நடத்துகிறது. கூடுதலாக, இது அந்தப் பகுதிக்கான ஹாட்லைன் சேவையையும், நிதி உதவி தேவைப்படும் பராமரிப்பாளர்களுக்கான மருத்துவத் தேவைகள், வீட்டு இடை ஓய்வுச் சேவைகள் மற்றும் போக்குவரத்துக்காக கூட்டாகத் தொகை செலுத்துகின்ற பராமரிப்பாளர் நிவாரண நிதியையும் வழங்குகிறது.

முதுமைக்கால மறதி நோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நவம்பர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை மரீன் பரேடில் உள்ள பல்வேறு உணவங்காடி நிலையங்கள் மற்றும் காபி கடைகளில் அச்சு ஓவியங்கள் ஒட்டப்பட்டன. கூடுதலாக, மரீன் பரேட் பகுதியில் 12 கோ-டு பாயிண்டுகளும் அமைந்துள்ளன.

கூடுதல் வளஆதாரங்கள்

DFC Accordion Card AIC

முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகங்களை உருவாக்குதல்

ஆதாரம்: Agency for Integrated Care

இந்த வளஆதாரங்கள் சிங்கப்பூரில் முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த சமூகத்தை உருவாக்குவது குறித்த தகவல்கள், உதவிக்குறிப்புகள் மற்றும் வளஆதாரங்களை வழங்குகின்றன.

டிமென்ஷியா கோ-டு பாயிண்ட் கையேடு
ஆதாரம்: Agency for Integrated Care

இந்தக் கையேடு, சமூகத்தில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை ஆதரிப்பதற்கு டிமென்ஷியா கோ-டு பாயிண்ட்ஸ் (GTP)-ஐ நிர்வகிப்பதில் அமைப்புகளின் பணியாளர்களுக்கான ஒரு குறிப்பேடாக விளங்குகிறது. இது GTP அமைவுச் செயல்முறை, பொறுப்புநிலை மற்றும் எதிர்பார்ப்புகளை நன்றாகப் பொருத்தி இணைக்கிறது, அத்துடன் முதுமைக்கால மறதி நோயைக் கொண்ட, வழி தெரியாமல் சுற்றித் திரிகின்ற நபர்களுக்கு உதவுவதற்கான வளஆதாரங்களின் பட்டியலையும் வழங்குகிறது.

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

ஆம் இல்லை
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest
  1. Dementia Singapore. (2020, April 20). Building an inclusive, dementia-friendly Kebun Baru. https://dementia.org.sg/2020/04/20/building-an-inclusive-dementia-friendly-kebun-baru/
  2. Koh, F. (2019, November 24). Young people to play central role in making Woodlands dementia-friendly. The Straits Times. https://www.straitstimes.com/singapore/young-people-to-play-central-role-in-making-woodlands-dementia-friendly
  3. Tang, L. (2019, November 24). ‘Not an old-person problem’: Outreach team getting youth to help tackle dementia. TODAYonlinehttps://www.todayonline.com/singapore/not-old-person-problem-mobilisation-team-involving-youth-tackling-dementia
  4. Hong, J. (2017, September 10). First 24-hour dementia go-to point launched in Yishun. The Straits Times. https://www.straitstimes.com/singapore/first-24-hour-dementia-go-to-point-launched-in-yishun
  5. Lien Foundation. (2016, January 20). Yishun, Singapore’s first dementia-friendly estate follows the trend of leading dementia-friendly communities around the world. [Press release]. http://www.lienfoundation.org/sites/default/files/Forget%20Us%20Not%20Press%20Release%20Final%20Combined_0.pdf
  6. Lien Foundation. (n.d.). Forget Us Not. Retrieved February 22, 2021, from https://www.lienfoundation.org/project/forget-us-not
  7. Agency for Integrated Care. (2019, October 29). 5 Ways Yishun Integrated Transport Hub is Senior and Dementia Friendlyhttps://www.aic-blog.com/5-ways-yishun-integrated-transport-hub-senior-and-dementia-friendly
  8. Yap, E. (2016, January 20). Let’s not forget dementia. Ageless Online. https://www.agelessonline.net/lets-not-forget-dementia/
  9. Goh Y.H., (2021, June 14). Straits Times. Yio Chu Kang is 3rd town to feature dementia-friendly murals.
    https://www.straitstimes.com/singapore/community/yio-chu-kang-is-3rd-town-to-feature-dementia-friendly-murals
  10. Wong S. (2022, February 12). Straits Times. More help for dementia patients and their caregivers in Toa Payoh East.
    https://www.straitstimes.com/singapore/community/more-help-for-dementia-patients-and-their-caregivers-in-toa-payoh-east
  11. Channel News Asia. (2022, January 30.) Channel News Asia Video. Dementia-friendly towns help residents live independently.  
    https://www.channelnewsasia.com/watch/dementia-friendly-towns-help-residents-live-independently-safely-video-2469346 

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

ஆம் இல்லை
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

பின்வரும் பொருள் டிமென்ஷியா பற்றிய கடி-அளவிலான தகவல்களைக் கொண்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்ய அல்லது அச்சிட, படத்தை கிளிக் செய்யுங்கள். "மொழியைத் தேர்ந்தெடுக்கவும்" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலமும் நீங்கள் பொருளின் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.
Skip to content