எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்

நீங்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவரின் பராமரிப்பாளராக இருக்கிறீர்களா? நீங்களும் உங்கள் அன்புக்குரியவரும் அங்கம் வகிக்க விரும்பும் ஒரு சமூகக் குழுவைத் தேடுகிறீர்களா? முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களும் பராமரிப்பாளர்களும் வாரத்திற்கு ஒரு முறை சமூக அமைப்பில் முதுமைக்கால மறதி நோயுடையோர் உள்ள பிற குடும்பங்களைச் சந்திக்க வழிவகை செய்யும் சந்திப்பு நிலைய ஆதரவுத் திட்டம் (MCSP) உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம்.

சந்திப்பு நிலைய ஆதரவுத் திட்டம் என்றால் என்ன?

சந்திப்பு நிலைய ஆதரவுத் திட்டம் (MCSP) என்பது முதுமைக்கால மறதி நோய் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு ஏற்ப முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களும் அவர்களின் குடும்ப பராமரிப்பாளர்களும் மாறிக் கொள்ள ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்ட மாதிரியாகும். சந்திப்பு நிலையங்களை, டிமென்ஷியா சிங்கப்பூர் ஆனது துடிப்பாக மூப்படைதல் நிலையங்கள் (AACகள்), சமூகத்தைச் சென்றடையும் குழுக்கள் (CREST), நம்பிக்கை அடிப்படியிலான அமைப்புகள் மற்றும் அடித்தள அமைப்புகள் போன்ற சமூக அடிப்படையிலான சேவை வழங்குநர்களுடன் கூட்டு சேர்ந்து துவங்கியுள்ளது. சந்திப்பு நிலையங்களில், முதுமைக்கால மறதி நோயுடையவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என இருதரப்பும் வாரத்திற்கு ஒரு முறை இரண்டு மணிநேர ஊடாடும் நடவடிக்கைகளில் பங்கேற்க சிறிய குழுக்களாக சமூக இடத்தில் சந்திக்கிறார்கள். சந்திப்பு நிலையங்கள் சமூக மன்றங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன, இங்கு முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களும், பராமரிப்பாளர்களும் ஒன்றுகூடி, சக உறுப்பினர்களுடன் புதிய நட்பை ஏற்படுத்திக் கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவளித்துக் கொள்வார்கள்.

நடவடிக்கைகள் நிலையத்திற்கு நிலையம் வேறுபடும் என்றாலும், முதுமைக்கால மறதி நோயுடைய நபர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் எதிர்நோக்கக்கூடிய சில நடவடிக்கைகள் பின்வருமாறு:

  • சக உறுப்பினர்களுடன் வேடிக்கையான, எளிதான குழு உரையாடல்கள் (எ.கா. செய்திகளில் வந்த சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றி விவாதித்தல், கடந்த கால அனுபவங்களை நினைவு கூர்தல்)
  • எளிய உடற்பயிற்சிகள்
  • விளையாட்டுகள்
  • கைவினை நடவடிக்கைகள்

சில சந்திப்பு நிலையங்கள், சந்திப்பு நிலையத்தில் கலந்து கொள்ளும் பராமரிப்பாளர்களுக்கு மாதாந்திர பராமரிப்பாளர் ஆதரவு அமர்வுகளை நடத்துகின்றன. இந்த அமர்வுகளின்போது, ​​பராமரிப்பாளர்கள் முதுமைக்கால மறதி நோய் மற்றும் பராமரிப்பு பற்றிய வழிகாட்டுதல் உடனான விவாதங்களில் பங்கேற்கின்றனர். பராமரிப்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளலாம், மேலும் பரஸ்பரம் சகாக்களுக்கு ஆதரவை வழங்கலாம் மற்றும் அவர்களிடமிருந்து ஆதரவைப் பெறலாம்

வழிகாட்டுதல் உடனான ஓவிய அமர்வில் பங்கேற்கும் சந்திப்பு நிலைய உறுப்பினர்கள்.
ஒரு சந்திப்பு நிலையத்தில் அட்டை தயாரிக்கும் கைவினை நடவடிக்கை
கெபுன் பாரு, ஒனேசிமஸ் கிராமத்தில் உள்ள சந்திப்பு நிலையத்தில் ஓர் எளிமையான அறிவாற்றலைத் தூண்டும் குழு நடவடிக்கை
மீட்டிங் சென்டர் உறுப்பினர்கள் பழங்காலப் பொருட்களின் படங்களுடன் ஜிக்சா புதிர்களை ஒன்றாக இணைக்கின்றனர்
தை ஹூவா குவான் 645 துடிப்பாக மூப்படைதல் நிலையத்தில் உள்ள சந்திப்பு நிலையத்தில் பழைய காலத்தை நினைவுகூறும் குழு உரையாடல்.
ஒரு சந்திப்பு நிலையத்தில் ரம்மி-ஓ விளையாட்டு.
Previous slide
Next slide

சந்திப்பு நிலைய ஆதரவுத் திட்டத்தின் நோக்கங்களும் நன்மைகளும்

இந்தத் திட்டத்தின் மூலம், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் முதுமைக்கால மறதி நோய் ஆரம்பிக்கும்போதே அவர்கள் அனுபவிக்கும் மாற்றங்களுக்கு சிறப்பாக தங்களை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்:

  • உடல் ரீதியான மற்றும் அறிவாற்றல் சார்ந்த திறன்களை மாற்றுதல்
  • சுகாதார நிபுணர்களுடனான உறவுகள்
  • உணர்வு ரீதியான மாற்றங்கள்
  • சுய பிம்பம்
  • எதிர்கால திட்டங்கள்
  • சமுதாய வாழ்க்கை மற்றும் மற்றவர்களுக்கு ஆதரவளிக்கும் திறன்
  • தங்களுக்காக உதவியை நாடும் பயணம்

முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் பின்வரும் நன்மைகளை அனுபவித்துள்ளனர்:

  • நடத்தையில் சாதகமான விளைவு
  • குடியிருப்புப் பராமரிப்புக்கான சேர்க்கை தாமதம்
  • மனநிலை, சுயமரியாதை மற்றும் இணைந்திருக்கும் உணர்வு ஆகியவற்றில் சாதகமான விளைவு

திட்டத்தில் பங்கேற்ற பராமரிப்பாளர்களும்

  • தங்கள் அன்புக்குரியவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள முடிந்ததாக உணர்ந்துள்ளனர்
  • சராசரியாக, நீண்ட காலத்திற்கு வீட்டிலேயே தங்கள் அன்புக்குரியவர்களை கவனித்துக் கொண்டுள்ளனர்.
  • தொழில்முறை அமைப்புகளால் அதிகம் ஆதரிக்கப்படும் அதே வேளையில், சுமை குறைவாக உணர்ந்துள்ளனர்
  • சிறந்த மன ஆரோக்கியத்தையும் குறைவான மன அழுத்தத்தையும் அனுபவித்துள்ளனர்

“ஒவ்வொருவரும் அவரவர் பயணத்தை மேற்கொள்கின்றனர், உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கோ பொருந்தக்கூடிய ஒன்றை நீங்கள் காணலாம். [சந்திப்பு நிலையத்திற்கு வருவது] பராமரிப்பாளருக்கு சிறிது ஓய்வு பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளது, அது வேறொருவருடன் அரட்டை அடிப்பதாக இருந்தாலும் சரி அல்லது சில சமயங்களில் உங்கள் அன்புக்குரியவரை ஊழியர்களோ அல்லது வேறு ஒருவரோ கவனித்துக் கொள்ளும்போது நீங்கள் இடைவேளை எடுத்துக்கொள்வதாக இருந்தாலும் சரி.” – பராமரிப்பாளர்

“MCSP, முதுமைக்கால மறதி நோயுள்ள மற்றவர்களையும், அவர்களைப் பராமரிப்பவர்களையும் கவனிக்கவும், அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் எனக்கு உதவுகிறது. இது நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கு பராமரிப்புமிக்க சமூக உத்வேக உணர்வை உருவாக்குகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் எனது தன்னம்பிக்கை மேம்பட்டுள்ளது, மேலும் எனது அன்புக்குரியவர்கள் பராமரிக்கப்படுகிறார்கள்.” – பராமரிப்பாளர்

“முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை நான் கற்றுக்கொண்டேன் [மேலும்] இந்தத் திட்டத்தில் தொண்டூழியம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” – சந்திப்பு நிலைய தொண்டூழியர்

என்னென்ன சந்திப்பு நிலையங்கள் உள்ளன?

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

ஆம் இல்லை
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

  1. Teo, J. (2023, July 10). Meeting Centres an oasis for seniors with mild to moderate dementia, and their caregivers. The Straits Times. Retrieved March 1, 2024, from https://www.moh.gov.sg/healthcare-schemes-subsidies/subsidies-for-residential-long-term-care-services 

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

ஆம் இல்லை
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

பின்வரும் பொருள் டிமென்ஷியா பற்றிய கடி-அளவிலான தகவல்களைக் கொண்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்ய அல்லது அச்சிட, படத்தை கிளிக் செய்யுங்கள். "மொழியைத் தேர்ந்தெடுக்கவும்" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலமும் நீங்கள் பொருளின் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.

Skip to content