Playback speed:
இது ராக்கெட் அறிவியல் அல்ல; இது நரம்பியல்!
நபரை மையமாகக் கொண்ட பராமரிப்பின் பலனை உணருவதற்காக பிராட்ஃபோர்டு (Bradford) பல்கலைக்கழக முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பு விவரணையாக்கம்™ வகுப்பை நடத்திய எனது அனுபவத்திலிருந்து, வகுப்புகளை நடத்துவதில் வெற்றி காண்பது என்பது எப்போதும் திடமான ஆயத்தம், பயிற்சி, பிரதிபலிப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, படைப்பாற்றல் ஆகியவற்றிலிருந்து வருகிறது என்பதை நான் கற்றுக்கொண்டேன்! இந்தக் கட்டுரை, கற்றலுக்கான AGES மாதிரியை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அத்தகைய வெற்றிக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும். முதுமைக்கால மறதி நோய் பராமரிப்புக்கான கற்றல் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்த AGES மாதிரியைப் பயன்படுத்தலாம். முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பு குறித்த அறிவை மற்றவர்களுக்கு எவ்வாறு திறம்பட வழங்க இந்த மாதிரியை நீங்கள் பயன்படுத்தலாம் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
நபரை மையமாகக் கொண்ட பராமரிப்பு
நபரை மையமாகக் கொண்ட பராமரிப்பு (Person-Centred Care, PCC) பற்றி நன்கு அறிந்தவர்கள், அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த நபர் பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் டாம் கிட்வுட் என்பதை அறிவர். நவம்பர் 1998 இல் அவர் மறைவதற்கு முன்பு, அவரது 1997 புத்தகமான மீண்டும் பரிசீலிக்கப்படும் முதுமைக்கால மறதி நோய்: முதலில் வரும் நபர் என்பதில் முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பு பற்றிய அவரது பல வருட கால யோசனைகளும் அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன.
நபரை மையமாகக் கொண்ட பராமரிப்பின் (Person-Centred Care, PCC) மூன்று முக்கிய கொள்கைகள் இதோ இங்கே:
1. முதுமைக்கால மறதி நோய் தொடர்பான நமது குறிப்பு அமைப்பை மாற்றுதல்
தரத்தை மதிப்பிடுவதற்கான ஒரு கண்காணிப்பு கருவியாக முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பு விவரணையாக்கத்தை (DCM) கிட்வுட் உருவாக்கியதே அவரது முக்கிய புத்தாக்கங்களில் ஒன்றாகும். பராமரிப்பினுடைய ஆதிக்க அணுகுமுறைகளைப் போலன்றி, முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பு விவரணையாக்கமானது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் கண்ணோட்டத்தில் இருந்து முதுமைக்கால மறதி நோயை அணுகியது.
2. முதலில் வரும் நபர்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் கண்ணோட்டத்திலிருந்து பராமரிப்பு அமைப்புகளைப் பார்ப்பது என்ற யோசனை, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் ஆளுமை முக்கியத்துவத்தின் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு யோசனையாகும்.
நபரை மையமாகக் கொண்ட முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பு என்ற கருத்தை விளக்குவதற்கு கிட்வுட் பின்வரும் சூத்திரத்தை உருவாக்கினார்:
- ‘D’ என்னும் ஆங்கில எழுத்து முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரைக் குறிக்கிறது;
- ‘NI’ என்னும் ஆங்கில எழுத்துக்கள் இந்த நபரின் நரம்பியல் ஆரோக்கிய நிலையைக் குறிக்கின்றன.
- ‘H’ என்னும் ஆங்கில எழுத்து இந்த நபரின் உடல் மற்றும் மன ஆரோக்கிய நிலையைக் குறிக்கிறது;
- ‘P’ என்னும் ஆங்கில எழுத்து என்பது நபரின் ஆளுமையைக் குறிக்கிறது;
- ‘H’ என்னும் ஆங்கில எழுத்து அந்த நபரின் வரலாற்றைக் குறிக்கிறது, அதுவே அவரை வடிவமைக்கிறது; மற்றும்
- ‘SP’ என்னும் ஆங்கில எழுத்துக்கள் சமூக உளவியலைக் குறிக்கின்றன, இது கிட்வுட் அந்த நபரின் சமூக சூழலைக் குறிக்க பயன்படுத்தும் எழுத்துக்கள்.
3. வீரியமிக்க சமூக உளவியல்
கட்டுப்படுத்தப்படாத நிலையில் எதிர்மறையாக இருக்கும் சமூக உளவியல் கொடியதாக மாறி ஆளுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
வீரியமிக்க சமூக உளவியல் என்பது பராமரிப்பு ஊழியர்களுக்கும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கும் இடையிலான பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் ஆகும், இவை ஒன்றாகச் சேர்ந்து ஒரு நபரின் ஆளுமையைக் குறைக்கின்றன. முறையான பராமரிப்பு அமைப்புகளின் பராமரிப்பு பழக்கவழக்கங்களில் பெரும்பாலும் அறியாமலேயே வீரியமிக்க சமூக உளவியல் பதிக்கப்பட்டுள்ளது என்பதை கிட்வுட் கவனித்தார். முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பு விவரணையாக்கத்தின் (DCM) ஒரு முக்கிய பலன் என்னவென்றால், ஒரு தனிநபரின் ஆளுமையை (தனிநபர் ஆளுமையைக் குறைப்பவை/PDகள்) குறைக்கும் பராமரிப்பு ஊழியர்களின் நடத்தைகளை அடையாளம் காண்பதும், தனிநபரின் ஆளுமையை மேம்படுத்தும் நடத்தைகளை (தனிநபர் ஆளுமையை மேம்படுத்துபவை/PEகள்) முன்னிலைப்படுத்துவதும் ஆகும்.
AGES மாதிரி
நபரை மையமாகக் கொண்ட பராமரிப்பைக் கற்றுக்கொள்ள AGES மாதிரி தனிநபர்களுக்கு எவ்விதம் உதவுகிறது? AGES மாதிரி பற்றிய சுருக்கம் இதோ இங்கே.2கவனம் (ஆங்கிலத்தில் Attention): நாம் கவனம் செலுத்தும்போது கற்றுக்கொள்கிறோம் உருவாக்கம் (ஆங்கிலத்தில் Generation): நமது சொந்த வார்த்தைகளில் அறிவைப் பயன்படுத்தும்போது கற்றுக்கொள்கிறோம் உணர்ச்சி (ஆங்கிலத்தில் Emotion): இது நம் கவனத்தை ஈர்க்கிறது மற்றும் நாம் கற்றுக்கொள்வதை மனதில் பதிய வைக்க உதவுகிறது இடைவெளி விடுதல் (ஆங்கிலத்தில் Spacing): இடைவெளி விடுதலானது புதிய தகவல்களை அதிக அளவில் மீட்டெடுக்க வழிவகுக்கிறது, அதாவது, மனதில் நுழைந்து நன்கு பதிவதற்கு நேரம் கொடுக்கவும்! பயன்பாடு எங்கள் பயிற்சிபட்டறைகளில் ஒன்றில் நபரை மையமாகக் கொண்ட பராமரிப்பைக் கற்பிப்பதில் AGES மாதிரியை எவ்விதம் பயன்படுத்தினோம் என்பதை பின்வருவது விவரிக்கிறது.
கவனம் மற்றும் உணர்ச்சி
தனிநபர் ஆளுமையை மேம்படுத்துபவை மற்றும் தனிநபர் ஆளுமையைக் குறைப்பவை பற்றிய எங்கள் பரிசீலனையில் கவனம் மற்றும் உணர்ச்சியைப் பயன்படுத்தினோம். இது பார்வைக்கு ஈடுபாட்டை ஏற்படுத்துவதாகவும், பயிற்சிபட்டறை பங்கேற்பாளர்களின் உணர்ச்சிகளுடன் தொடர்புபடுத்துவதாகவும், தற்போதைய நேர்மறையான பழக்கங்களை வலுப்படுத்துவதாகவும், புதிய பழக்கங்களை உருவாக்குவதற்கான இடத்தை உருவாக்குவதாகவும் இருந்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தனிநபர் ஆளுமையைக் குறைப்பவற்றின் உதாரணங்களை அச்சுறுத்தாத வகையில் வெளிக்கொணர்வது எளிதாக இருந்தது.
படிநிலை 1: ஒருவரின் ஆளுமையைப் (PDs) பறிக்கும் விதமாக பராமரிப்பு ஊழியர்கள் மத்தியில் நீங்கள் காணும் செயல்களின் உதாரணங்களை பதிவிடும் குறிப்புத் தாள்களில் எழுதுமாறு பயிற்சிபட்டறை பங்கேற்பாளர்களை நாங்கள் அழைத்தோம். இது கிட்வுட்டின் 5 உளவியல் தேவைகளான ஆறுதல், அடையாளம், பந்தம், தொழில் மற்றும் உள்ளடக்கிய நிலை என ஒவ்வொன்றுக்கும் செய்யப்பட்டது. உதாரணமாக, ‘அடையாளம்’ என்பதன் கீழ், ‘பெண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான இளஞ்சிவப்பு பைஜாமா போன்ற ஆடைகள் வழங்கப்படுகின்றன’ அல்லது ‘முடி திருத்தும் தினத்தன்று அத்தைகளுக்கு ஒரே மாதிரியான முடி திருத்தம் செய்யப்படுகிறது, அதுதான் அவர்களுக்கு எளிதாக இருக்கும்’ என்று சிலர் எழுதினர். இவை அனைத்தும் ஒவ்வொரு உளவியல் தேவை மற்றும் தனிநபர் ஆளுமையைக் குறைக்கும் பழக்கங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்பட்டு தொடர் காகிதத்தாள்களில் (ஃபிளிப்சார்ட்களில்) பதிவேற்றப்பட்டன.
படிநிலை 2: மீண்டும் பதிவிடும் குறிப்புத் தாள்களைப் பயன்படுத்தி, பங்கேற்பாளர்கள் ஆளுமையை ஆதரிக்கும் பராமரிப்பு ஊழியர்களினுடைய செயல்களின் (PEகள்) எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிட்டனர், அவற்றை ஒவ்வொரு உளவியல் தேவை மற்றும் தனிநபர் ஆளுமையை மேம்படுத்தும் பழக்கங்களுடன் தொடர்புபடுத்தி தொடர் காகிதத்தாள்களில் (ஃபிளிப்சார்ட்களில்) ஒட்டினர். தனிநபர் ஆளுமையை மேம்படுத்துவதாக பகிரப்பட்ட சில பழக்கங்கள் இதோ இங்கே, சில எளிய செயல் மூலமே ஒருவரின் ஆளுமையை ஆதரிக்கலாம் என்பதை இது காட்டுகிறது:
உளவியல் ரீதியான தேவை | கவனிக்கப்பட்ட செயல்களின் உதாரணங்கள் |
|---|---|
தொழில்
| "என்னுடன் சேர்ந்து நாற்காலிகளை ஒழுங்கமைக்க விரும்புகிறீர்களா? என்று தங்கியிருப்பவர்களிடம் கேட்பது" “பணி முடிந்த பிறகு சுத்தம் செய்ய அவர்களை அனுமதியுங்கள்” (அவர்களைத் தடுக்க வேண்டாம்) |
உள்ளடக்கிய நிலை
| “நீங்கள் பாடுங்கள், நாங்கள் கைதட்டுகிறோம்” “அவர்கள் வந்திருப்பதையும் அவர்களின் புன்னகையையும் அங்கீகரியுங்கள்” |
ஆறுதல்
| “தங்கியிருப்பவர்கள் சொல்லும் விஷயங்களுக்கு செவி சாயுங்கள்” “அவர்களின் வேகத்தின்படி செய்ய அனுமதியுங்கள்” |
பந்தம்
| “பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவில் கொள்ளுங்கள்” “அவர்களுடன் சேர்ந்து நடைப்பயிற்சி செல்லுங்கள்” |
அடையாளம்
| “பெயர் சொல்லி அழைத்திடுங்கள்”
“அவர்கள் செய்தவற்றுக்குப் பாராட்டு தெரிவித்து, நன்றாக செய்துள்ளீர்கள் என்று சொல்லுங்கள்” “பிறந்தநாள் கொண்டாடுங்கள்” “எப்போதும் விஷயங்களைத் தெரிவித்து, அனுமதி கேளுங்கள்” |
படிநிலை 3: நாங்கள் பங்கேற்பாளர்களிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டோம்: “தனிநபர் ஆளுமையைக் குறைக்கும் அந்த நல்லப் பழக்கங்களின் பட்டியல் இனி நமக்கு வேண்டாம் தானே?” அனைவரும் ஒப்புக்கொண்டனர். தனிநபர் ஆளுமையைக் குறைக்கும் பழக்கங்கள் எழுதப்பட்ட தொடர் காகிதத்தாள்களை எடுத்து, கிழித்துவிடுமாறு கற்பவர்களிடம் கேட்டுக்கொண்டோம். ஆச்சர்யத்துடனும், மிகுந்த சிரிப்பு மற்றும் வேடிக்கையுடன் அனைத்து வரைப்படங்களும் முழுவதுமாக கிழிக்கப்பட்டன. அவர்களிடம் எஞ்சியிருந்தது தனிநபர் ஆளுமையை மேம்படுத்தும் பழக்கங்களே, அத்தகைய பழக்கங்களையே நாம் கடைப்பிடித்து பயிற்சி செய்ய விரும்புகிறோம்.
தனிநபர் ஆளுமையைக் குறைக்கும் பழக்கங்கள் இடம்பெற்றிருந்த தொடர் காகிதத்தாள்களைக் கிழித்தெறிந்த உணர்ச்சிகரமான அனுபவம் அவர்களின் மனதில் மறக்கமுடியாத அடையாளத்தை ஏற்படுத்தியது. தனிநபர் ஆளுமையை ஆதரிக்கும் பராமரிப்புப் பழக்கங்களைத் தொடர அல்லது தொடங்குவதற்கும், தனிநபர் ஆளுமையைக் குறைக்கும் பழக்கங்களைப் பின்பற்றுவதை நிறுத்துவதற்குமான எண்ணத்தை இது பங்கேற்பாளர்கள் மனதில் பதித்தது.
உருவாக்கம்
உருவாக்கம் என்பது நட்புறவுகளை உருவாக்குவதும், கற்பவர்கள் தங்களின் சொந்த வார்த்தைகளில் தாங்கள் கற்ற விஷயங்களை வெளிப்படுத்த வைப்பதும் ஆகும். ஒரு புதிய கருத்தைப் பற்றி பங்கேற்பாளர்கள் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அது அவர்களின் சிந்தனையில் பதிந்துவிடும். பயிற்சி பட்டறையில், “உலாவும்” நடவடிக்கையை உருவாக்கி நாங்கள் இதைச் செய்தோம்.
நபரை மையமாகக் கொண்ட பராமரிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு முக்கிய கருத்துக்களுக்கும் நாங்கள் சுவரொட்டிகளை தயார் செய்தோம். இந்தச் சுவரொட்டிகள் பயிற்சி பட்டறை நடைபெறும் காலம் முழுவதும் சுவரில் ஒட்டப்பட்டிருந்தன. பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு சுவரொட்டியையும் பார்த்துக்கொண்டே உலாவும்போது, வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கருத்து குறித்து தங்களுக்குப் பிடித்த ஒரு விஷயம் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி தங்களின் சிறிய பயிற்சி பட்டறை குழுக்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு ஊக்குவித்தோம்.
இடைவெளி விடுதல்
ஜென்சனின் (2005) அணுகுமுறை … புதிய தகவல்களை இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் கூறுவது, நீண்டகால நினைவாற்றலை உருவாக்குவதில் பங்கு வகிக்கிறது
ஷூல்ட்ஸ், 1997 — நேர்மறையான கருத்து டோபமைன் நரம்பியக்கடத்தலில் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது, இது கற்கும் விஷயங்களை நீண்ட காலம் மனதில் பதிய வைக்க உதவும் என்று கருதப்படுகிறது
இடைவெளி விடுவது என்பது கற்றல் செயல்திறனை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும். இது புதிய தகவல்களை கற்பவர்களுக்கு இடைவெளி விட்டு நேர்மறையான கருத்துக்களுடன் வழங்குவதன் மூலம் செய்யப்படுகிறது. எங்களின் நபரை மையமாகக் கொண்ட பராமரிப்பு பயிற்சி பட்டறைகளில், கற்பதையும் கற்றதை மனதில் பதிய வைப்பதையும் மேம்படுத்துவதற்காக, பயிற்சி பட்டறை அமர்வு முழுவதும் அறிவுச் சரிபார்ப்புகள் மற்றும் மதிப்பீடுகள் கால இடைவெளி விட்டு வழங்கப்படுகின்றன.
AGES மாதிரியானது, நபரை மையமாகக் கொண்ட பராமரிப்பு (PCC) பட்டறைகளின்போது அதிகரித்த ஈடுபாடு, சிறந்த கற்றல் பலன்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் மத்தியில் நபரை மையமாகக் கொண்ட பராமரிப்பு தொடர்பாக புதிய பழக்கவழக்கங்களை உருவாக்குவதல் போன்றவற்றுக்கு வழிவகுத்துள்ளது.
டிமென்ஷியா சிங்கப்பூர் கழகம் வழங்கும் நபரை மையமாகக் கொண்ட முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பு குறித்த கூடுதல் பயிற்சி வகுப்புகளைக் கண்டறிந்திடுங்கள்.
மேற்கோள்கள்