
இளையர்களையும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களையும் இணைப்பதில் தலைமுறைகளுக்கு இடையேயான ஈடுபாட்டுச் சக்தியை ஆராய்ந்தறியுங்கள். இந்த ஈடுபாடுகள் தலைமுறைகளுக்கு இடையில் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கும் அதே வேளையில், தகவல்தொடர்பு மற்றும் பரிவு போன்ற மதிப்புமிக்க வாழ்க்கைத் திறன்களை வளர்க்கின்றன.
மாற்றத்தை உருவாக்குவதற்கான புதிய வழி
என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரியாமல் ஒரு தொண்டூழியர் அமர்வில் பங்கேற்பதைக் கற்பனை செய்து பாருங்கள், அதன்போது முதுமைக்கால மறதி நோய் உள்ள ஒருவர் தனது வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறார். டிமென்ஷியா சிங்கப்பூரில் (DSG) இளையர் சமூகத் தலைவரும் தொண்டூழியருமான டெரென்ஸ் டிங் அவர்களுக்கு இதுதான் நடந்தது.
ஆரம்பத்தில், அவர் இளையர் சாதனை விருதைப் பெறுவதற்காக பணியைச் செய்து முடிக்க முயற்சித்தார், ஆனால் முதுமைக்கால மறதி நோய் உள்ள ஒரு பெண் தனது வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்து கொண்டபோது, அது எல்லாவற்றையும் மாற்றியது. “அவர்கள் மறந்தாலும், ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒரு கதை உள்ளது,” என்று அவர் கூறுகிறார். தலைமுறைகளுக்கு இடையேயான ஈடுபாட்டின் சாராம்சமே இதுதான். இது இளைய தலைமுறையினருக்கும் மூத்த தலைமுறையினருக்கும், குறிப்பாக முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கும் இடையேயான தொடர்புகளை வளர்ப்பதைப் பற்றியது. இது தொண்டூழியம் செய்வதற்கும் மேலானது; இது அனுமானங்களுக்குச் சவால் விட்டு வயதுக்கு அப்பாற்பட்ட உறவுகளை உருவாக்குகிறது.
தலைமுறைகளுக்கு இடையேயான ஈடுபாடு ஏன் முக்கியம்
மூத்த தலைமுறையினருடன் ஈடுபடுவது தொண்டூழிய நேரங்களை நிரப்புவதை விட மேலானது, இது நீடித்த தொடர்புகளை உருவாக்குவதைப் பற்றியது. சிங்கப்பூரில், தலைமுறைகளுக்கு இடையே தற்போதுள்ள பல திட்டங்கள், பாலர் பள்ளி குழந்தைகள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களை இணைப்பதில் கவனம் செலுத்துகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் காணப்படும் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் என்னவென்றால், 15-24 வயதுடைய இளையர்களும் இந்தத் திட்டங்களுக்குப் புதிய சக்தியைக் கொண்டு வருவதே. தலைமுறைகளுக்கு இடையேயான திட்டங்களில் இளையர்கள் தொண்டூழியத் தொண்டு செய்யும்போது, அது நேரத்தைத் தியாகம் செய்வதை விட மேலானது; இது மூத்தோர்கள் மற்றும் இளையர்கள் என இருவரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை உருவாக்குவதைப் பற்றியது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் இளையர்கள் ஏன் ஈடுபட வேண்டும் இது உதவி வழங்குவது மட்டுமல்ல
நீங்கள் ஓர் இளையராக இருந்தால், முதுமைக்கால மறதி நோயுடன் வாழுபவர்களுடன் ஈடுபடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள், ஏனெனில் இது தோழமையை வழங்குவதைக் காட்டிலும் மேலானது, மேலும் இது:
- முக்கியமான வாழ்க்கைத் திறன்களை உருவாக்கும்: இந்தத் தொடர்புகள் தகவல்பரிமாற்ற திறன், பரிவு, பொறுமை மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த வழியாக உள்ளது1. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் பரிவுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதைக் கற்றுக்கொள்வது ஒரு மதிப்புமிக்க அனுபவமாக இருக்கும்.
- அர்த்தமுள்ள இணைப்புகளை உருவாக்கும்: தலைமுறைகளுக்கு இடையேயான ஈடுபாடு தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்புகளை வளர்க்கிறது மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களிடையே சமூக தனிமைப்படுத்தலைக் குறைக்க உதவும்.2 கதைகள் மற்றும் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், இளையர்கள் மற்றவர்களைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்வார்கள், இது அவர்களின் உலகக் கண்ணோட்டத்தை விரிவுபடுத்தும்.
- நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்: தலைமுறைகளுக்கு இடையேயான திட்டங்களில் இளையர்களின் பங்கேற்பு, சகாக்களிடையே முதுமைக்கால மறதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும், இது எதிர்கால சந்ததியினர் அவர்களைப் பற்றி அதிக தகவலறிந்தவர்களாகவும், அவர்களிடம் பரிவு கொண்டவர்களாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.
- நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்: தலைமுறைகளுக்கு இடையேயான திட்டங்களில் இளையர்களின் பங்கேற்பு, சகாக்களிடையே முதுமைக்கால மறதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும், இது எதிர்கால சந்ததியினர் அவர்களைப் பற்றி அதிக தகவலறிந்தவர்களாகவும், அவர்களிடம் பரிவு கொண்டவர்களாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.
- empathetic toward them.
தலைமுறைகளுக்கு இடையேயான தொடர்புகளை வழிநடத்துதல்
எந்தவொரு புதிய அனுபவத்தையும் போலவே, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் ஈடுபடுவது அறிமுகமில்லாத தருணங்களிலும் வரக்கூடும். ஆனால் இதில் நல்ல செய்தி என்னவென்றால், இந்தத் தருணங்கள் கற்றுக்கொள்வதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புகளாக இருக்கலாம்.
இளையர்கள் பின்வரும் இந்தச் சவால்களை வாய்ப்புகளாக மாற்றக்கூடிய சில வழிகள் இதோ இங்கே:
தடை 1: நேரக் கட்டுப்பாடுகள்
ஒரு இளையராக, பள்ளி, சமூக வாழ்க்கை மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொண்டூழியம் செய்வதற்கென நேரம் ஒதுக்குவதைக் கடினமாக்கும்.
தீர்வு: நெளிவியல்பே முக்கியமானது. DSG மற்றும் பிற மூத்த நடவடிக்கை நிலையங்களில் (SACs) உள்ள திட்டங்கள் நெகிழ்வான அட்டவணைகளை வழங்குகின்றன, இது வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்துடன் சிறியதாகத் தொடங்கி உங்கள் ஈடுபாட்டை மெதுவாக அதிகரிக்க உங்களை அனுமதிக்கிறது.
தடை 2: முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் தொடர்புகொள்வதில் பழக்கமின்மை
நீங்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழுபவர்களுடன் அதிக நேரம் செலவிடவில்லை என்றால், அவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
தீர்வு: ஆதரவு மற்றும் பயிற்சி. தொண்டூழியத் திட்டங்கள் மற்றும் மாணவர் தலைமையிலான ProjectEDEN போன்ற திட்டங்கள் பெரும்பாலும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது மற்றும் இணைவது என்பதைக் கற்பிக்கும் விளக்கங்களை வழங்குகின்றன. இவை அர்த்தமுள்ள தொடர்புகளுக்குத் தேவையான திறன்களையும் நம்பிக்கையையும் உங்களுக்கு வழங்குகின்றன.
இவ்விடத்திற்குள் நுழைவதன் மூலம், இளையர்கள் தனிநபர்களாக வளர்ந்து, தலைமுறைகளுக்கு இடையே ஒரு பாலமாக இருப்பார்கள்.
இதில் எப்படி ஈடுபடுவது
உங்கள் முத்திரையைப் பதிக்க நீங்கள் தயாரா? உங்கள் ஈடுபாடு நீடித்த மாற்றத்தை உருவாக்க உதவுகிறது. தொடங்குவதற்கு உங்களுக்கு உதவும் சில வழிகள் இதோ இங்கே:
- நடவடிக்கை ஏற்பாட்டு வசதி: செங்காங் சமூக மருத்துவமனையில் நடைபெறும் நினைவுகூரும் அமர்வுகள் அல்லது கலை மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற வேடிக்கையான நடவடிக்கைகளை வழிநடத்தலாம் மற்றும் ஏற்பாடு செய்யலாம், இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்க்கும்.
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு உறுதுணையாக இருத்தல்: முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுடன் நேரம் செலவிடுங்கள், பராமரிப்பு நிலையங்களில் அல்லது வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு உறுதுணையாக இருக்கலாம். இந்த எளிய தொடர்புகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தும்.
- சமூகத்தை எட்டுதல் மற்றும் விழிப்புணர்வு: மாணவர்களிடையே முக்கியமான உரையாடல்களைத் தூண்டிய, யூனோயா தொடக்கக்கல்லூரியின் திட்டம் டேன்டேலியன் போன்ற திட்டங்களை வழிநடத்திய உங்கள் சகாக்களைப் போலவே, முதுமைக்கால மறதி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். உங்கள் பள்ளியிலோ அல்லது அக்கம்பக்கத்திலோ நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், தகவல்களைப் பகிரவும், முதுமைக்கால மறதி நோய்க்கு மிகவும் உகந்த சமூகத்தை உருவாக்கவும் உதவலாம். or neighbourhood.
மேற்படி, நீங்கள் ஒரு இளையராக இருந்து, உங்கள் ஈடுபாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராக இருந்தால், இளையர் ஆதரவாளர் திட்டத்தில் சேருவதைக் கருத்தில் கொள்ளலாம். இந்தத் திட்டம், முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுடனான தகவல் பரிமாற்றம் குறித்து உங்களுக்குப் பயிற்சி அளிக்கும், முதுமைக்கால மறதி நோயின் பராமரிப்பு குறித்த மதிப்புமிக்க கண்ணோட்டங்களை வழங்கும், மேலும் முதுமைக்கால மறதி நோய் குறித்த உங்கள் சொந்த ஆதரவுத் திட்டத்தை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கும்!
''நிலையங்களில் தொண்டூழியம் செய்வது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுடன் தொடர்புகொள்வதில் எனக்கு நேரடி அனுபவத்தை அளித்துள்ளது, இது நான் பெற்றிருக்கும் மிகவும் நல்ல திறமையாகும்!"
டெர்ரென்ஸ் டிங்
தொண்டூழியம் செய்தாலும் சரி, உறுதுணையாளர்களாக இருந்தாலும் சரி, விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் சரி, ஒவ்வொரு செயலும் முக்கியமானது.
இது குறித்த மேற்படி தகவல்களை அறியவும் மற்ற தொண்டூழியர்களுடன் இணையவும் இந்த இணைப்பை அல்லது இன்ஸ்டாகிராமில் #YouthsForDementiaSingapore மற்றும் #DSGYouthAdvocates என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தவும். யூத் ஹோப் இன்டர்ஜெனரேஷனல் டூல்கிட் போன்ற வள பிரிவில் இருந்து எங்கள் ஸ்டார்டர் கிட்களைப் பதிவிறக்கவும், இது உங்களுக்கு வழிகாட்ட உதவும் வளங்கள், டெம்ப்ளேட்டுகள் மற்றும் செயல்பாட்டு யோசனைகளுடன் வருகிறது.
ஒன்றாகச் சேர்ந்து, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு உகந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்!
- Canning, S. E., Gaetz, M., & Blakeborough, D. (2018). It takes time: Building relationships and understanding through an intergenerational ballet programme. Dementia, 19(2), 270–284. https://doi.org/10.1177/1471301218772895
- Houghton, C., Hennessy, M., Smyth, S., et al. (2022). The experiences and perceptions of young people and older people living with dementia of participating in intergenerational programmes: A qualitative evidence synthesis. Dementia, 21(7), 2144–2171. https://doi.org/10.1177/14713012221112385
- Nanda, A. (2024). Beneficial bonding: When people with dementia interact with kids and youth. The Straits Times. https://www.straitstimes.com/life/beneficial-bonding-when-people-with-dementia-interact-with-kids-and-youth