Playback speed:
முதுமைக்கால மறதி நோய், இந்த மருத்துவ நிலையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது. அறிவாற்றல் திறன்கள் குறைவதால், நிதிகளை நிர்வகிப்பது பெருகிய முறையில் கடினமாகிவிடும், இது சாத்தியமான பாதிப்புகள் மற்றும் நிதி பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில், சிறப்புத் தேவைகள் அறக்கட்டளையை நிறுவுவது விலைமதிப்பற்ற பாதுகாப்பையும் மன நிம்மதியையும் அளிக்கும்.
- Health Promotion Board. (n.d.). Let’s talk about Vascular Dementia. HealthHub. https://www.healthhub.sg/programmes/mindsg/vascular-dementia
- Chiew, H. J. (2021, July 5). Young-onset dementia: Improving outcomes with early recognition at Primary Care. SingHealth. https://www.singhealth.com.sg/news/defining-med/Young-Onset-Dementia
- Ng, Z. X., Yang, W. R. E., Seet, E., Koh, K. M., Teo, K. J., Low, S. W., Chou, N., Yeo, T. T., & Venketasubramanian, N. (2015). Cerebellar strokes: A clinical outcome review of 79 cases. Singapore Medical Journal, 56(03), 145–149. https://doi.org/10.11622/smedj.2014195
- Ioannides K, Tadi P, Naqvi IA. Cerebellar Infarct. [Updated 2022 May 8]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2023 Jan-. Available from: https://www.ncbi.nlm.nih.gov/books/NBK470416/
- Huang, J., Qiu, Z., Zhou, P., Li, J., Chen, Y., Huang, R., Li, C., Ouyang, X., Feng, H., Xu, H., Liu, D., Dai, Z., Zhu, J., Liu, X., Chen, H., & Jiang, Y. (2019). Topographic location of unisolated pontine infarction. BMC Neurology, 19(1), 1-6. https://doi.org/10.1186/s12883-019-1411-6
சிறப்புத் தேவைகள் அறக்கட்டளையின் முக்கியத்துவம், அதை அமைப்பதற்கான படிப்படியான வழிகாட்டி மற்றும் உங்களைப் போன்ற பராமரிப்பாளர்கள் முதுமைக்கால மறதி நோயுள்ள உங்கள் அன்புக்குரியவரின் நிதி நிர்வாகத்தின் சிக்கல்களைத் தீர்க்க உதவும் வள ஆதாரங்களைப் பற்றிய ஆழ்ந்த கண்ணோட்டங்களைப் பெற தொடர்ந்து படியுங்கள்.
சிறப்புத் தேவைகள் அறக்கட்டளை என்றால் என்ன?
சிறப்புத் தேவைகள் அறக்கட்டளை என்பது ஒரு சட்ட ஏற்பாடாகும், இது முதுமைக்கால மறதி நோய் உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள நபர்களின் சார்பாக சொத்துக்களை நிர்வகிக்க வடிவமைக்கப்பட்டதாகும். சிறப்புத் தேவைகள் அறக்கட்டளையில் சொத்துக்களை வைப்பதன் மூலம், தனிநபர்கள் தங்கள் நிதி வள ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் பராமரிப்புத் தேவைகளை ஆதரிக்கும் வகையில் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய முடியும்.
சிறப்புத் தேவைகள் அறக்கட்டளையின் முக்கியத்துவம் என்ன?
சிறப்புத் தேவைகள் அறக்கட்டளை நிதி சுரண்டல் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. அறிவாற்றல் வீழ்ச்சி தீவிரமடைகையில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் மோசடிகள், மோசடி மற்றும் தேவையற்ற ஆதிக்கத்திற்கு ஆளாக நேரிடுவது அதிகரித்து வருகிறது. முதுமைக்கால மறதி நோயுள்ள நபர்கள் தங்கள் நிதியை ஓர் அறங்காவலரிடம், பெரும்பாலும் நம்பகமான குடும்ப உறுப்பினர் அல்லது வல்லுநரிடம் ஒப்படைப்பதன் மூலம், நிதி துஷ்பிரயோக அபாயத்தைக் குறைத்து, தங்கள் வள ஆதாரங்கள் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யலாம்.
சிறப்புத் தேவைகள் அறக்கட்டளையை அமைத்தல்
சிறப்புத் தேவைகள் அறக்கட்டளை நிறுவனத்தை (SNTC) அணுகியவுடன், ஒரு சந்திப்பைத் திட்டமிட வேண்டும், நீங்கள் ஆரம்ப மதிப்பீட்டுக் கட்டத்தை மேற்கொள்வீர்கள். இதன்போது, நீங்கள் சமுதாயப் பணியில் பயிற்சி பெற்ற ஒரு வழக்கு மேலாளரைச் சந்திப்பீர்கள். பின்னர் அவர்கள் முதுமைக்கால மறதி நோயுடைய உங்கள் அன்புக்குரியவரின் பல்வேறு செலவுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான தேவை மதிப்பீட்டை மேற்கொள்வார், அவற்றுள் அடங்குவன:
- வீட்டுவசதி
- சுகாதாரப் பராமரிப்பு
- போக்குவரத்து
- ஊட்டச்சத்து
- தனிப்பட்ட பராமரிப்பு
- இதர செலவுகள்
இணைந்து தொடர்புடைய நபருக்கு ஏற்றபடியான பராமரிப்புத் திட்டத்தைத் தயார் செய்வார். இந்தப் பராமரிப்புத் திட்டம் ஒரு வகையான பட்ஜெட் பயிற்சியைப் போன்றது, மேலும் உங்கள் அன்புக்குரியவரின் நீண்டகால பராமரிப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்வதற்குத் தேவையான அறக்கட்டளை நிதிகளைத் தீர்மானிக்க இது உதவும், குறிப்பாக உங்களால் இனி பராமரிப்பு வழங்க முடியாத அல்லது அருகில் இல்லாத நேரங்களில் இது உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தைப் பராமரிப்பாளர்களுடன் அல்லது லேசான நிலையில் முதுமைக்கால மறதி நோயுள்ளவர்கள் மற்றும் தங்களுக்கென ஒரு அறக்கட்டளையை அமைப்பதன் நன்மையைப் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் ஆகியோருடன் இணைந்து தயார் செய்யலாம்.
அறக்கட்டளையை அமைப்பதில் வழக்கு மேலாளர் உங்களுக்கு உதவுவார், மேலும் எதிர்காலத்தில் பெறப்படும் சொத்துக்களையும் அடையாளம் காண்பார், அவை பயனாளிகளுக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்படும். தகுதிபெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், அறக்கட்டளை அமைவு செயல்முறையின் ஒரு பகுதியாக பொருத்தமான ஆதரவு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வழக்கு மேலாளர் உங்களுக்கு உதவுவார்.
கிடைக்கக்கூடிய ஆதரவுத் திட்டங்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, இங்கே கிளிக் செய்யுங்கள்.
அறக்கட்டளை செயல்படுத்தப்படும்போது, பணமானது பயனாளிக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும். தொடர்ச்சியான வழக்கு பரிசீலனைகள் மற்றும் அவ்வப்போது வருகைகள் மூலம் வழக்கு மேலாளர் குடும்பத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்.
செயல்படுத்தியதும் நடக்கக்கூடியவை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, இங்கே கிளிக் செய்யுங்கள்.
எதிர்கால பராமரிப்புத் திட்டமிடல் – முதுமைக்கால மறதி நோயுடைய வாழ்க்கைத்துணை
ஆதாரம்: சிறப்புத் தேவைகள் அறக்கட்டளை நிறுவனம் (Special Needs Trust)
இந்தக் காணொளி, முதுமைக்கால மறதி நோயுடையவர்களைப் பராமரிப்பவர்கள் சிறப்புத் தேவைகள் அறக்கட்டளையை அமைக்கும்போது பின்பற்றக்கூடிய படிப்படியான வழிகாட்டியை வழங்குகிறது.
நிதி பராமரிப்புத் திட்டமிடலுக்கான கருவிகள்
சிறப்புத் தேவைகள் அறக்கட்டளையை நிறுவுவதோடு மட்டுமல்லாமல், பராமரிப்பாளர்கள் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு இப்போது நிதிப் பராமரிப்புத் திட்டமிடலுக்கு உதவும் தொழில்நுட்பக் கருவிகளுக்கான அணுகல் உள்ளது.
அத்தகைய ஒரு உதாரணம் SNTC-யின் நிதி பராமரிப்புத் திட்ட (FCP) செயலி ஆகும். இந்தச் செயலி பராமரிப்பாளர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலைகள், சிறப்புத் தேவைகள் மற்றும் எதிர்கால பராமரிப்பு ஏற்பாடுகள் தொடர்பான 17 கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதிக்கிறது. இதனுடைய பதில்களின் அடிப்படையில், இச்செயலியானது முதுமைக்கால மறதி நோயுடைய உங்கள் அன்புக்குரியவருக்கு அவரது வாழ்நாளுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதற்கான மதிப்பீடு உட்பட, நபருக்கு ஏற்றபடியான திட்டத்தை உருவாக்குகிறது. இந்த மதிப்பீடு, உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவரின் பிறந்த ஆண்டு, சிறப்புத் தேவை நிலை, எதிர்கால பராமரிப்பு ஏற்பாடு மற்றும் குடும்பத்தின் வருமான நிலை போன்ற காரணிகளின் மூலம் பெறப்படுகிறது.
இந்த உருவாக்கம் நிதிகளை நிர்வகிப்பதற்கும் நீண்டகால பராமரிப்புத் திட்டங்களை உருவாக்குவதற்கும் மிகவும் அணுகக்கூடிய மற்றும் திறன்மிக்க அணுகுமுறையை வழங்குகிறது.
மேலும் தகவல்களுக்கு, SNTC’s website பார்வையிடுங்கள்.
முடிவுரை
நிதியை நிர்வகிப்பது ஒரு கடினமான பணியாக இருக்கலாம், குறிப்பாக முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும். இருப்பினும், சிறப்புத் தேவைகள் அறக்கட்டளை மற்றும் புதுமையான நிதி திட்டமிடல் கருவிகள் என இவை இரண்டும், முதுமைக்கால மறதி நோயுள்ள நபர்களைப் பராமரிப்பவர்களுக்கு நிதிகளை நிர்வகிப்பதற்கும் நீண்டகால பராமரிப்பைப் பெறுவதற்கும் ஒரு நெறிப்படுத்தப்பட்ட அணுகுமுறையை வழங்குகிறது. இந்த வள ஆதாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பராமரிப்பாளர்கள் தங்களுக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மன அமைதியை உறுதி செய்யும் அதே வேளையில் அத்தியாவசிய ஆதரவையும் வழங்க முடியும்.
ஆசிரியரின் சுயசரிதை
Special needs trust company
சிறப்புத் தேவைகள் அறக்கட்டளை நிறுவனம் (“SNTC”) 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு (உடல், வளர்ச்சி அல்லது மன குறைபாடுகள் உள்ளவர்களுக்கு) மற்றும் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்க முடியாதவர்களுக்கு அறக்கட்டளை மேலாண்மை சேவைகளை வழங்குகிறது. சிறப்புத் தேவைகள் அறக்கட்டளை நிறுவனம் (“SNTC”) என்பது சிங்கப்பூரில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சால் முழுமையாக ஆதரிக்கப்படும் ஒரே இலாப நோக்கற்ற அறக்கட்டளை நிறுவனமாகும், இது பராமரிப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களைச் சார்ந்திருக்கும் சிறப்புத் தேவையுடையோர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கட்டுப்படியாகும் விலையில் அறக்கட்டளை சேவைகளை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ளது.

